3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் பிரதி அண்டார்டிகாவில் கிடைத்துள்ளது,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link Ganesan K என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: தமிழின் தொன்மை ஏற்கனவே பலர் அறிந்த ஒன்றுதான். இருந்தாலும், சிலர் […]

Continue Reading

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வி கண்டதா பா.ஜ.க?

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிட்ட 81 இடங்களிலும் பா.ஜ.க தோல்வியடைந்தது என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஃப்ரீடம் டி.வி என்ற பெயரில் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், பா.ஜ.க சின்னமான தாமரை மீது அடித்தல் குறி போடப்பட்டுள்ளது. அந்த நியூஸ் கார்டில், “மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 81 இடங்களில் போட்டியிட்ட […]

Continue Reading

திராவிடர் கழக தலைவர் வீரமணி மருத்துவமனையில் அனுமதியா?

‘’சூரிய கிரஹண நேரத்தில் சாப்பிட்ட வீரமணிக்கு திடீர் உடல்நலக் குறைவு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  Sakthi Jo Sakthijo என்ற ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை டிசம்பர் 27, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கடந்த டிசம்பர் 26, […]

Continue Reading

சிஏஏ கோலம் போட மறுத்ததால் அதிராம்பட்டினம் முஸ்லீம் பெண் அடித்துக் கொலையா?

‘’சிஏஏ கோலம் போட மறுத்ததால் அதிராம்பட்டினம் முஸ்லீம் பெண் அடித்துக் கொலை,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Video Link  வி கண்ணன் என்பவர் டிசம்பர் 30, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், முஸ்லீம் பெண் ஒருவரை சிலர் விசாரிக்கும் காட்சிகள் அடங்கிய ஒரு வீடியோவும், பிறகு, முஸ்லீம் பெண்கள் சிலரை […]

Continue Reading

மது பாட்டிலுடன் செல்லும் பெண் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவரா?

நாம் தமிழர் கட்சி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண் ஒருவர் கையில் மது பாட்டில் உள்ளது போன்ற படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இருசக்கர வாகனத்தில் நாம் தமிழர் கட்சி பெயர் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் கையில் மது பாட்டில் போல ஒன்று உள்ளது. நிலைத் தகவலில் நாம் தமிழர் கட்சியைக் […]

Continue Reading

நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனதாக பரவும் வதந்தி!

‘’நக்கீரன் கோபால் மனைவி கார் டிரைவருடன் ஓடிப் போனார்,’’ என்று பகிரப்பட்டிருந்த ஒரு கீழ்த்தரமான வதந்தியை காண நேரிட்டது. இப்படி எந்த செய்தியும் வெளியாகாத நிலையில் இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  வதந்தியின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Kishore K Swamy என்ற நபர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், நக்கீரன் கோபால் பெயரில் ஏசியாநெட் தமிழ் நியூஸ் இணையதளம் பகிர்ந்த செய்தி எனக் கூறி, ஒரு ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு சொந்த விமானத்தில் சென்றாரா மு.க.ஸ்டாலின்?

‘’ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு சொந்த விமானத்தில் சென்ற மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  பாரதிய ஜனதா தமிழக ஆதரவாளர்கள் – Tamilnadu BJP Supporters என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற […]

Continue Reading

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் என்று ரஞ்சித் கூறியதாக பரவும் பதிவு உண்மையா?

தலித் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டுமே தலித்துக்கள் வாக்களிக்க வேண்டும் என்று இயக்குநர் ரஞ்சித் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இயக்குநர் ரஞ்சித் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றை இணைத்து போட்டோ கார்டை உருவாக்கி உள்ளனர். அதில், “தலித் கட்சி வேட்பாளர்களுக்கே தலித்துக்கள் ஓட்டு போட வேண்டும் – பா.ரஞ்சித் உளறல்.  தலித்தை மட்டுமே கதாநயாகன், கதாநாயகியாக […]

Continue Reading

ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தால் மன்னித்திருப்பார் என்று ரஜினி பேசினாரா?

‘’ராஜீவ் காந்தி உயிரோடு இருந்தால் சிறையில் வாடும் 7 தமிழர்களை மன்னித்திருப்பார்,’’ என்று கூறி வைரலாக பரவி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Babu Raj Babu என்பவர் கடந்த டிசம்பர் 12ம் தேதி இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய ஒருசிலர் கமெண்ட் பிரிவில், ‘இப்படி […]

Continue Reading

புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி எம்ஜிஆர் இந்திய குடிமகன் இல்லையா?

‘’புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தின்படி எம்ஜிஆர் இந்திய குடிமகன் இல்லை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link Satheesh Kumar என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், எம்ஜிஆர் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’எம்ஜிஆர் இந்தியர் இல்லை- புதிய குடியுரிமைச் சட்டப்படி இலங்கை கண்டியில் பிறந்த எம்ஜிஆர் இந்தியர் இல்லை… இதுகூடத் தெரியாமல் அதிமுக முட்டாள்கள் […]

Continue Reading

இந்தியா பற்றி எரிய காரணம் திமுக:- ஸ்டாலின் பெயரில் போலி செய்தி

‘’இந்தியா பற்றிய எரிய காரணம் திமுக,’’ என்று மு.க.ஸ்டாலின் பேசியதாகக் கூறி பகிரப்படும் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Kishore K Swamy என்ற நபர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், மு.க.ஸ்டாலின் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளார். அதில், ‘’இந்தியா முழுவதும் இன்றைக்கு பற்றி எரிவதற்கு காரணம்- திமுக. […]

Continue Reading

ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற நபருக்கு அடி உதை: போலி செய்தியால் சர்ச்சை

‘’ஐயர் என நினைத்து ஆசாரி பூணூலை அறுக்கச் சென்ற ராமசாமி நாயக்கர் சீடருக்கு தலையில் தக்காளி சட்னி,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தலையில் ரத்தக் காயத்துடன் காட்சியளிக்கும் ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ #அய்யர் என நினைத்து #ஆசாரி பூநூலை அறுக்க முயன்ற […]

Continue Reading

போலீசிடம் கெஞ்சிய எடப்பாடி பழனிசாமி- ஃபேஸ்புக் படம் உண்மையா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போலீசாரிடம் “நான்தான் முதல்வர் எடப்பாடி” என்று கூறி கெஞ்சுவது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link எடப்பாடி பழனிசாமியின் படங்கள் நான்கை கொலாஜ் செய்து பதிவிட்டுள்ளனர். அதில் போலீசாரிடம் எடப்பாடி பழனிசாமி “யோவ் நான்தான் முதல்வர் எடப்பாடி” என்று கூறுவது போலவும் அதற்கு போலீஸ்காரர் “யாருடா கோமாளி நீ..?” என்று தள்ளிவிடுவது போலவும் பதிவிட்டுள்ளனர். […]

Continue Reading

எச்.ராஜா தெலுங்கானா போலீசாரை கேள்வி கேட்டாரா?

‘’அதிகாலை 3 மணிக்கு எப்படி குறி பாத்து சுட முடியும் என்று கேள்வி கேட்ட எச்.ராஜா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Post Archived Link Tamizha – தமிழா எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், எச்.ராஜா மற்றும் வடிவேலு புகைப்படத்தை கம்பேர் செய்து, அதன் மேலே, ‘’அதிகாலை 3 மணிக்கு எப்படி குறி […]

Continue Reading

ஆபாச படம் பார்ப்பவர்களின் பெயர் பட்டியலை சிபிஐ வெளியிட்டதா?

‘’ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியலை சிபிஐ வெளியிட்டது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Raja Sekara Pandian‎ எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்ந்து வருவதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்:உலக அளவில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பார்ப்பதில் சென்னை மாநகரம் […]

Continue Reading

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புகைப்படம் இதுவா?

‘’மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புகைப்படம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link அஜித் குமார் எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 5, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இது உண்மையான ஐடி என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

அதிமுக அரசின் பொங்கல் பரிசை திமுகவினர் வாங்கக்கூடாது: ஸ்டாலின் பெயரில் வதந்தி

‘’அதிமுக அரசின் பொங்கல் பரிசை திமுகவினர் வாங்கக்கூடாது,’’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link அமாவாச – Naga Raja Chozhan MA எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாலிமர் தொலைக்காட்சி லோகாவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன் மேலே, ‘’மானமுள்ள திமுகவினர் அதிமுக அரசின் பொங்கல் பரிசான […]

Continue Reading

சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருது சகோதரர்கள் சிலை குப்பையில் வீசப்பட்டதா?

‘’மருது சகோதரர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டது,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தேவர் தலைமுறை எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், சிவகங்கை அருங்காட்சியகத்தில் மருது பாண்டிய சகோதரர்களின் சிலை குப்பையில் வீசப்பட்டுள்ளதாகக் கூறி வருத்தம் தெரிவித்துள்ளனர். பலரும் உண்மை என நம்பி இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: மேற்கண்ட […]

Continue Reading

மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்: உண்மை அறிவோம்!

‘’மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்த ராமதாஸ்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link MKS For CM எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை நவம்பர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலக தயார். […]

Continue Reading

பாஜகவுக்கு யார் அதிகம் சொம்படிப்பது என்ற தலைப்பில் மதன் ரவிச்சந்திரன் விவாதம் நடத்தினாரா?

‘’பாஜக யார் சரியாக சொம்பு தூக்குவது,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இந்த தலைப்பில் உண்மையிலேயே வின் டிவி விவாத நிகழ்ச்சி நடத்தியதா என விவரம் அறிய முயற்சித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Troll Mafia எனும் ஃபேஸ்புக் ஐடி மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதில், வின் டிவி பெயரில் மதன் ரவிச்சந்திரன் நடத்தும் விவாத நிகழ்ச்சி ஒன்றின் பெயரில் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளனர். அதில், ‘’மதன் […]

Continue Reading

கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி!

மு.கருணாநிதியின் சிறுவயது புகைப்படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link யாரோ ஒருவர் பகிர்ந்ததை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், பல ஆண்டுகளுக்கு முற்பட்ட நாதஸ்வரம், தவில் வாசிக்கும் குழுவினரின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதில் உள்ள ஒரு சிறுவன் மட்டும் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளான். படத்தின் மீது, “கருணாநிதி பிறக்கும்போதே கோடீஸ்வரன் என்று தொரை முருகன் சொன்னதை நிரூபிக்கும் […]

Continue Reading

பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்ட பெண் போலீஸ் இவரா?

‘’பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்ட பெண் போலீஸ் அதிகாரி,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link  சாரு லதா எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை கடந்த மார்ச் 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், காக்கி சீருடை அணிந்த பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேமேல, ‘’ பள்ளி மாணவியை கற்பழிக்க […]

Continue Reading

தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்: உண்மை என்ன?

‘’தமிழக மாணவர்கள் கண்டுபிடித்த சூரிய ஒளியில் இயங்கும் கார்,’’ என்ற தலைப்பில் வைரலாகி வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Post Link  Archived Link அஜித் குமார் என்ற ஃபேஸ்புக் ஐடி கடந்த ஜூன் 1, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் காருடன் சேர்ந்து குழுவாக நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ‘’சூரிய […]

Continue Reading

சத்தியமங்கலம் பண்ணாரி சாலையின் புகைப்படம் இதுவா?

‘’சத்தியமங்கலம் பண்ணாரி சாலையின் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link  சமுத்திரக்கனி எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை அக்டோபர் 19, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், நெடுஞ்சாலை ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இயற்கை எழில் சூழ்ந்த சாலை. சத்தியமங்கலம் பண்ணாரி சாலை, என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை […]

Continue Reading

மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தருவதை நிறுத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொன்னாரா?

‘’மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு தருவதை நிறுத்துவேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சித்தார்த் ஜி எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பற்றி சத்தியம்டிவி வெளியிட்ட செய்தி எனக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் […]

Continue Reading

தமிழக பாஜகவுக்கு 4 புதிய பொறுப்பாளர்கள் நியமனம்: உண்மை அறிவோம்

‘’தமிழக பாஜக.,வுக்கு 4 பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Mohan Raj என்பவர் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதேபோல, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் மேற்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளனர். உண்மை அறிவோம்: மேற்குறிப்பிட்ட செய்தியை முதலில் தமிழ் ஊடகங்கள்தான் வெளியிட்டன. ஆனால், பிறகு, இதனை தமிழக பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் மறுப்பு […]

Continue Reading

குழந்தையை தாக்கும் பள்ளி ஆசிரியை: உண்மை என்ன?

‘’குழந்தையை தாக்கும் பள்ளி ஆசிரியை,’’ என்ற பெயரில் பகிரப்படும் ஒரு வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  Videos veer vaniyar என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த வீடியோ பதிவை நவம்பர் 4, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், ‘’உங்களிடம் எந்த எண் மற்றும் குழு இருந்தாலும் ஒரு எண்ணை கூட தவறவிடக்கூடாது, இந்த வீடியோவை அனைவருக்கும் அனுப்புங்கள்.அது சூசைநகர் செயின்ட் ஜோசப் பள்ளியின் […]

Continue Reading

மோடி கோவணம் கட்டியதால் அதிமுக வெற்றி: எச்.ராஜா பெயரில் விஷமம்!

‘’மோடி கோவணம் கட்டியதால்தான் அதிமுக வெற்றி பெற்றது,’’ என்று எச்.ராஜா சொன்னதாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link  MKS For CM என்ற ஃபேஸ்புக் ஐடி, அக்டோபர் 24, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், பாஜக.,வைச் சேர்ந்த கே.டி.ராகவன், ‘’மோடி வேட்டி அணிந்ததால் அதிமுக வெற்றி,’’ எனக் கூறியதாகவும், இதேபோல, எச்.ராஜா, ‘’மோடி […]

Continue Reading

பரவை முனியம்மா மரணம்: பரபரப்பை கிளப்பும் வதந்தி

‘’பரவை முனியம்மா மரணம்,’’ என்ற பெயரில் கடந்த 2 நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வதந்தியை பற்றி உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: Facebook Link  Archived Link  NiCe JoKe, SiripeY VarLa எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதேபோல நக்கீரன் இணையதளமும் இதே செய்தியை பகிர்ந்துவிட்டு, பின்னர் நீக்கிவிட்டது. உண்மை அறிவோம்:தமிழ் நாட்டுப் புறப் பாடல்கள் பாடி பிரபலமானவர் பரவை முனியம்மா. இதன் உச்சமாக, தமிழ் சினிமா […]

Continue Reading

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்தாரா?

2004ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி பேரழிவில் பெற்றோரை இழந்த பெண் ஒருவர் தமிழக போலீஸ் அதிகாரியாக உயர்ந்துள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சிறுமி மற்றும் காவல் துறை பெண் அதிகாரி ஒருவரின் படத்தை இணைத்து பதிவிட்டுள்ளனர். வேறு பக்கத்தில் ஷேர் செய்யப்பட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பதிவிட்டது போல உள்ளது. அதில், ‘2004ம் ஆண்டு தமிழகத்தில் […]

Continue Reading

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறாரா?

‘’அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் புடின் வருகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia Tamil Link Archived Link 2 ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இணைத்துள்ளனர். இதே தகவலை தினகரன், ஏசியாநெட் தமிழ், நியூஸ்டிஎம் உள்ளிட்ட பல்வேறு செய்தி இணையதளங்கள் வெளியிட்டுள்ளன. அவற்றின் […]

Continue Reading

ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித் மீட்கப்பட்ட வீடியோ: ஃபேஸ்புக் வதந்தி

‘’ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மீட்கப்பட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் வீடியோ பதிவுகளை நிறைய காண நேரிட்டது. இது உண்மையா எனும் சந்தேகத்தில் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link  Sinthu Sinthu Raj Rana என்பவர் அக்டோபர் 27, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதேபோல பலரும் சிறுவன் சு(ர்)ஜித் மீட்கப்படும் வீடியோ என்று கூறி இந்த வீடியோ காட்சியை வைரலாக பகிர்ந்ததை காண […]

Continue Reading

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை இழிவுபடுத்தினாரா?

‘’ராஜேந்திர பாலாஜி இஸ்லாமியரை மிரட்டி இழிவுபடுத்திப் பேசினார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் வைரல் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link ஆம் நாங்கள் சமூக விரோதிகள் எனும் ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ரேஷன் கடை அமைக்கக் கோரி மனு கொடுக்கச் சென்ற இஸ்லாமியர்கள் சிலரை மிரட்டியதோடு, இழிவுபடுத்தி தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார் எனக் […]

Continue Reading

சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டனரா?

‘’சீமான் பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 OneIndia News Archived Link 2 Oneindia Tamil எனும் ஃபேஸ்புக் ஐடி தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளது. அந்த செய்தியை கிளிக் செய்து படித்தபோது, […]

Continue Reading

திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்ததா அன்னை தெரசா அறக்கட்டளை?

‘’திருமுருகன் காந்திக்கு ரூ.10 கோடி கொடுத்த அன்னை தெரசா அறக்கட்டளை,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sri Nithya Veera Badhrananda என்பவர் இந்த பதிவை ஆகஸ்ட் 26, 2018 அன்று பகிர்ந்துள்ளார்.  இதில், வங்கி காசோலை ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’திருமுருகன் காந்தி அன்னை தெரசா அறக்கட்டளையில் இருந்து பெற்ற […]

Continue Reading

பாஜக, அதிமுக அரசுகள் இருக்கும் வரை நீட் தொடரும்– விஜயபாஸ்கர் பெயரில் வதந்தி

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அக்டோபர் 6, 2019 தேதியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜயபாஸ்கர் படம் உள்ளது. “பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இருக்கும் வரை நீட் தேர்வு தொடரும். […]

Continue Reading

கோவளம் கடற்கரையில் பாதுகாப்பு சோதனை; மோடி பற்றிய படம் உண்மையா?

ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட, வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் ஆய்வு செய்த கடற்கரையில் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார் என்று சமூக ஊடகங்களில் பல படங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இவற்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நான்கு புகைப்படங்களை கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளனர். முதல் படத்தில், பாதுகாப்பு அதிகாரிகள் முழு கடற்கரையையும் சோதனை செய்தனர் என்று உள்ளது. இரண்டாவது படத்தில், பிளாஸ்டிக் குப்பைகள் பை நிறைய இருப்பது […]

Continue Reading

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட்: பீதி கிளப்பும் கலைஞர் செய்திகள்!

‘’நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக டோல்கேட் உள்ளது,’’ என்ற பெயரில் கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்ட ஒரு செய்தி ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Kalaignar News Link  Archived Link 2 Kalaignar Seithigal இந்த ஃபேஸ்புக் பதிவை கடந்த 11 செப்டம்பர் 2019 அன்று பகிர்ந்துள்ளது. இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

அமித்ஷா காலில் விழுந்த கனிமொழி, மு.க.ஸ்டாலின்? – போலி புகைப்படத்தால் சர்ச்சை!

இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்ய மாட்டோம் என்று அமித்ஷா காலில் கனிமொழி, மு.க.ஸ்டாலின் விழுந்தது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சோஃபாவில் அமர்ந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விழுவது போலவும் அவருக்கு அருகில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காலில் விழ தயாரான நிலையில் இருப்பது போலவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.  நிலைத் […]

Continue Reading

நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ: உண்மை அறிவோம்!

‘’நாஞ்சில் சம்பத் கிளு கிளு வீடியோ,’’ என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் பதிவுகளை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 News Link Archived Link 2 The Cineflix என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 29, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இது Tamizhakam.com என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்க் ஆகும். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

கீழே தோண்டியதால் அது கீழடி என்று ராஜேந்திர பாலாஜி சொன்னாரா?

‘’கீழே தோண்டியதால் அது கீழடி,’’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொன்னதாக, ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ராஜேந்திர பாலாஜி கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி ‘’கீழே தோண்டினால் அது கீழடி, மேலே தோண்டியிருந்தால் அது மேலடி,’’ என விமர்சித்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நினைத்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சையாகப் […]

Continue Reading

வி.சி.க-வை தடை செய்ய தமிழக அரசு பரிந்துரை?- பரபரப்பு ஃபேஸ்புக் பதிவு!

பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், தேதி, நேரம் எதுவும் இல்லை. அதில், “தொடர்ந்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் […]

Continue Reading

வள்ளியூரில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதா?

‘’வள்ளியூர் கோவிலில் 300 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த சித்தர் உடல் கண்டுபிடிப்பு,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Bala A Kumar என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்திருக்கிறார். இதில் கூறப்பட்டுள்ளதை உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் உண்மையான […]

Continue Reading

தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்: உண்மை அறிவோம்!

‘’தமிழக ஆளுநரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link 1  Asianet Tamil Link  Archived Link 2 ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை, இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஏசியாநெட் தமிழ் இணையதள செய்தியை […]

Continue Reading

“கீழடியில் கிடைத்த சிவலிங்கம்..?” – தொடரும் ஃபேஸ்புக் வதந்தி!

கீழடியில் ஊடகங்களின் கவனத்தை திசை திருப்பி, ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வரலாகப் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கீழடியில் எடுக்கப்பட்ட மண் பானை படம் உள்பட மூன்று படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் செய்து புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 880 வருட பழமையான சிவலிங்கம், அபிஷேக […]

Continue Reading

“கீழடியில் கிடைத்த விநாயகர் நாணயம்?” – ஃபேஸ்புக்கில் பரவும் புதிய தகவல்!

கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் கிடைத்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விநாயகர் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கீழடி அகழ்வாராய்ச்சியில் விநாயகர் உருவம் பதித்த நாணயம் வடிவிலான ஓடு கண்டுபிடிப்பு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, ஆகமம் ஜானகிராமன் என்பவர் 2019 செப்டம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை […]

Continue Reading

எந்த தமிழனும் உண்மையான இந்தியன் கிடையாது: ராஜேந்திர பாலாஜி பெயரில் பரவும் வதந்தி

‘’இந்தியாவிற்குள் இருக்கும் எந்த தமிழனுமே உண்மையான இந்தியன் கிடையாது,’’ என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக, ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Royapuram Khadhar Chennai‎facebook DMK என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகக் கூறி ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, அதன் மேலே, […]

Continue Reading

க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்; உண்மை அறிவோம்!

‘’க.அன்பழகன் 2 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும், ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link  Archived Link  Students Against Corruption 2.0 எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஒரு வயதான பெண் மற்றும் இளம் வயது பெண் ஆகியோருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் உள்ளது. அந்த 2 பெண்களும், […]

Continue Reading

கீழடி எல்லாம் ஏமாற்று வேலை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாகப் பரவும் தகவல்!

கீழடி எல்லாம் ஏமாற்று வேலை, தமிழர்களுக்கு என்று தனி அடையாளம் இருந்தது கிடையது என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், பொன். ராதாகிருஷ்ணன் புகைப்படம் உள்ளது. அதன் அருகில், கீழடி எல்லாம் ஏமாற்று வேலை. தமிழர்களுக்கு என்று தனித்த அடையாளம் இருந்தது […]

Continue Reading

எச்.ராஜா அமைச்சர் பதவியில் உள்ளாரா?

‘’எச்.ராஜா அமைச்சர் பதவியில் உள்ளார்,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Anbu Gk என்பவர் இந்த பதிவை கடந்த ஆகஸ்ட் 30, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், எச்.ராஜா மற்றும் மோடி புகைப்படத்தை இணைத்து பகிர்ந்துள்ளார். அதன் மேலே, ‘’ஒரு உண்மையான இந்து முஸ்லீம் உடன் ஒன்றாகச் சாப்பிட மாட்டான்- எச்.ராஜா, பாஜக […]

Continue Reading