புனே தொழிலதிபர் முகுல் வன்சி இறுதிச் சடங்கு வீடியோவா இது?

புனேயின் ரூ.1500 கோடி சொத்து மதிப்புள்ள தொழில் அதிபர் முகுல் வன்சி கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும், அவருடைய கடைசி நிலையைப் பாருங்கள் என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றில் இருந்து மிகப் பாதுகாப்பாக டேப் சுற்றப்பட்ட உடல் ஒன்று இறக்கி இறுதிச் சடங்கு நடத்தும் இடத்துக்குக் கொண்டு […]

Continue Reading

தமிழக அரசு மீது குற்றம்சாட்டினாரா தாமோதரனின் மனைவி?

கொரோனா பாதிப்பு காரணமாக தன்னுடைய கணவர் மரணம் அடைய முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் என்று தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “என் கணவரின் மரணத்திற்கு முதல்வர் அலுவலகத்தின் அலட்சியம்தான் காரணம் – தனிச் செயலாளர் தாமோதரனின் மனைவி” என்று உள்ளது.  நிலைத் […]

Continue Reading

ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என்று மோடி கூறினாரா!

ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கினோம் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் மற்றும் சிறுவன் ஒருவனின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மோடி படத்துக்கு அருகே, “ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கியுள்ளோம் – மோடி” என்று உள்ளது. சிறுவன் மோடியிடம் கேள்வி […]

Continue Reading

Fact Check: ஸ்டாலினை மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் எனக் கூறி மு.க.அழகிரி பெயரில் பரவும் போலி ட்வீட்

கட்சிக்கு திறமை இல்லாத மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய நோயாளிகளின் கையில் கலைஞர் தி.மு.க-வை ஒப்படைத்துவிட்டு உள்ளார் என்று மு.க.அழகிரி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.அழகிரி வெளியிட்ட ட்வீட் போல ஸ்கிரீன்ஷாட் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “கட்சிக்கு திறமை இல்லாத மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டிய நோயாளிகளின் கையில் தலைவர் கலைஞர் திமுக வை ஒப்படைத்து […]

Continue Reading

கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சம் நவம்பரில் நிகழுமா?- ஐசிஎம்ஆர் மறுப்பு

‘’நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும்,’’ என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில் புதிய தலைமுறை டிவியில் வெளியான செய்தி வீடியோ ஒன்றை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’கொரோனா வைரஸ் தாக்கம் உச்சம் தொடுவது இந்தியாவில் தற்போது 34 நாட்களில் இருந்து 74 நாட்களாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இந்திய அளவில் […]

Continue Reading

மேட்டூர் அணை திறப்பு விழாவில் சமூக இடைவெளி இல்லையா?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை

மேட்டூர் அணை திறப்பின் போது சமூக இடைவெளி கேள்விக்குறியானதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மேட்டூர் அணை திறப்பு விழா புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி அவசியம் – அரசு” என உள்ளது. நிலைத் தகவலில், “ஒன்பது கிரகம் உச்சம்பெற்ற ஒருவனுக்கு மாஸ்க்கும் சமுக இடைவெளியும் அவசியமில்லாதது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sabak […]

Continue Reading

ரயிலில் தொங்கும் வடக்கன்ஸ்… இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டதா?

ரயிலில் தொங்கிக் கொண்டு செல்லும் வட இந்தியர்கள் என்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அது இந்தியாவில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரயிலில் குழந்தையுடன் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் பெற்றோர் படம் பகிரப்பட்டுள்ளது. குழந்தை நெரிசல் காரணமாக அழுகிறது. நிலைத் தகவலில், “அடுத்த முறை ஓட்டு போடும் முன் தமிழனிடம் ஆலோசனை கேளுங்க டா வடக்கணுங்களா….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Shabbeer என்பவர் 2020 […]

Continue Reading

சென்னை வர்த்தக மையம் குவாரண்டைன் சென்டரில் நோயாளிகள் லுங்கி டான்ஸ் ஆடினரா?

சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குவாரண்டைன் சென்டரில் உள்ள நோயாளிகள் குத்தாட்டம் போடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 மிகப்பெரிய அரங்கில் படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அங்கிருந்தவர்கள் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடுகின்றனர். நிலைத் தகவலில், “சென்னையில #Corona ku பயந்து டவுசர் கிழியுது ஆனா #Corona Ward la லுங்கி டான்ஸ் ஆடிட்டு […]

Continue Reading

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் சிக்கிய மைனர் திருமண ஜோடி இவர்களா?

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் போலீசாரிடம் சிக்கிய மைனர் திருமண ஜோடி என்று கூறி பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி இங்கே பார்க்கலாம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் திருமண ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களின் திருமண வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த மாப்பிள்ளையின் நண்பன், மாப்பிள்ளை, இருவீட்டாரின் குடும்பத்தார் ஆகியோர் மீது 5 […]

Continue Reading

சாலையோரத்தில் பிரசவம்; இந்த பெண்ணின் அவல நிலைக்கு யார் காரணம்?

‘’சொந்த ஊருக்கு நடந்து சென்றதால் ஏழைப்பெண்ணிற்கு சாலையோரம் பிரசவம் நிகழ்ந்த பரிதாபம்,’’ என்று கூறி பகிரப்படும் வைரல் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூன் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், சாலையோரமாக, பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஏழைப்பெண்ணை இப்படி நீண்ட தொலைவு நடக்க விட்டு, சாலையோரம் பிரசவம் நிகழ வைத்த […]

Continue Reading

நியூசிலாந்தைப் போல பெங்களூருவிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதா? – விபரீத ஒப்பீடு

நியூசிலாந்தை விட அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்திய எடியூரப்பாவை பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்பதால் ஊடகங்கள் பாராட்டவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூசிலாந்து மற்றும் பெங்களூருவை ஒப்பிட்டு புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், பாராட்ட மறந்த ஊடகங்கள்… காரணம் அது பிஜேபி ஆளும் மாநிலம். ஒரு நாட்டைவிட தன் நகரத்தின் நோயை கட்டுப்படத்திய தலைமை” […]

Continue Reading

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி குணமான பின் வெளியே வரும் மருத்துவர்கள்- வீடியோ உண்மையா?

நியூசிலாந்தில் கடைசி கொரோனா நோயாளி குணமான பின்பு, கொரோனா வார்டில் இருந்து வெளிவரும் மருத்துவர்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். உண்மை அறிவோம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ராணுவத்தில் பயிற்சி முடித்து வெளியேறும் வீரர்கள் போன்று இருவர் இருவராக மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருகின்றனர். கேமரா அருகே வரும்போது அவர்கள் தலையில் அணிந்திருந்த பாதுகாப்பு தொப்பியை கழற்சி வீசி செல்கின்றனர். […]

Continue Reading

எஸ்.எஸ்.எல்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது போல S.S.L.C தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸடாலின் கூறியதாக புதிய தலைமுறை, தந்தி டி.வி நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது போல S.S.L.C தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியதால் […]

Continue Reading

கொரோனா தயவால் 10ம் வகுப்பில் வெற்றி பெற்ற முதியவர்!– ஃபேஸ்புக் வதந்தி

தெலங்கானாவில் முதியவர் ஒருவர் 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வந்த நிலையில், அரசு ஆல் பாஸ் என்று அறிவித்ததால் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவர் ஒருவர் தேர்வு எழுதும் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “ஐயாவோட பெயர் முகமது பரக்கத் அலி. தெலுங்கானா மாநிலம். வயது 82. 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி […]

Continue Reading

சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி: உண்மை என்ன?

‘’சர்வதேச அளவில் விமான நிலையங்கள் திறக்கும் தேதி,’’ என்று கூறி வைரலாக பகிரப்படும் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட செய்தி உண்மையா என்று கண்டறியும்படி, நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டுக் கொண்டார். உண்மை அறிவோம்:உலகம் முழுக்க, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பெரும்பாலான விமான நிலையங்களும் தற்காலிக மூடப்பட்டன. பல்வேறு நாடுகளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையை தற்காலிகமாக […]

Continue Reading

மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா?

‘’மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என போலீசார் எச்சரிக்கை,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link நியூஸ் 7 டிவி வெளியிட்டதைப் போல இந்த பிரேக்கிங் நியூஸ் கார்டு உள்ளது. இதனால் பலர் உண்மை என நம்பி குழப்பமடைந்துள்ளனர். இந்த செய்தியை வேறு டெம்ப்ளேட்டில் மற்றொரு ஃபேஸ்புக் பயனாளரும் பகிர்ந்திருந்தார்.  Facebook Claim […]

Continue Reading

இஸ்லாமியர்கள் பற்றி கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசியது என்ன?

‘’இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம், இஸ்லாமிய கொரோனா நோயாளிகளை விஷம் கொடுத்து கொன்றோம்,’’ என்று கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கான்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் என்று கூறப்படும் பெண்மணி புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் “முஸ்லீம்கள் தீவிரவாதிகள், அவர்களுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம் என்பதால் முஸ்லீம் கொரனா […]

Continue Reading

கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரியதா திமுக?

‘’கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.14,500 இழப்பீடு கோரிய திமுக,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு ரூ.7,500ம், மாநில அரசு ரூ.5,000ம் ஆக மொத்தம் ரூ.14,500 உடனே வழங்க வேண்டும் […]

Continue Reading

மாஸ்க் இன்றி கூடிய கூட்டம்… லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா?

மாஸ்க் இன்றி, சமூக இடைவெளி இன்றி கூடிய மிகப்பெரிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாலையில் இளைஞர்கள் திரண்டு நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் அந்த வீடியோவில் இல்லை. நிலைத் தகவலில், “மாஸ்க்காவது சமூக விலகலாவது பசி வந்தா பத்தும்பறக்கும்.பிஜேபியால் இந்தியாவின் ஒட்டு […]

Continue Reading

உ.பி செல்லாமல் வழி தவறி ஒடிஷா வந்த ரயில்; ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒடிஷா வந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ரயில் படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மராட்டியத்திலிருந்து கோரக்பூர் செல்ல வேண்டிய ரயில் தடம் மாறி ஒரிசா சென்று விட்டது. இந்த மாதிரி கூத்துலாம் எங்காவது நாம பார்த்திருப்போமா… டிஜிட்டல் இந்தியா ஹே” என்று […]

Continue Reading

உலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி- உண்மை என்ன?

உலக சுகாதார அமைப்பிற்கு மிரட்டல் விடுத்த ருவாண்டா ஜனாதிபதி என்ற தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் அனுப்பி வைத்து, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  இதனை வேறு யாரேனும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை பகிர்வதைக் காண முடிந்தது.  Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5000 தருகிறதா?- வாட்ஸ்ஆப் வதந்தி!

‘’கொரோனா நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.5000 தருகிறது,’’ என்று கூறி ஒரு தகவல் வாட்ஸ்ஆப் வழியே வைரலாக பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  நமது வாசகர் ஒருவர் இதனை வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டார். இதே தகவலை பலரும் வாட்ஸ்ஆப்பில் அனுப்பியுள்ளனர். இதுதவிர, ஃபேஸ்புக்கிலும் இதனை பலர் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம்.  Facebook Claim Link […]

Continue Reading

கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு சிசிடிவி கேமிரா வாங்கியதா?

‘’கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு நெதர்லாந்தில் இருந்து சிசிடிவி கேமிரா வாங்கியுள்ளது,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், திரைப்பட காட்சி ஒன்றில் சமுத்திரக்கனியும், மோடியும் பேசிக் கொள்வது போல மீம் பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, புதிய தலைமுறை தொலைக்காட்சி பெயரில் ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டு இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா தொற்றை கண்காணிக்க […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்த சீக்கியர்கள்: புகைப்படம் உண்மையா?

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் மருத்துவ சிகிச்சை அளித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரமாக ஏழை மக்களுக்கு சீக்கியர்கள் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “போற்றுதலுக்குரிய புகைப்படம். ஆயிரக்கணக்கான தூரங்கள் நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சீக்கியர்கள் செய்யும் அவசிய சேவை” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

கைக்குழந்தை உடன் ரயில் பெட்டிகள் இடையே பயணிக்கும் பெண்– வீடியோ உண்மையா?

‘’மோடியின் செயல்பாடுகளால் ரயில் பெட்டிகள் இணைப்பு கம்பிகள் மீது கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் அமர்ந்து செல்கிறார்,’’ என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் பெட்டிகள் இணைப்புப் பகுதி மீது கைக்குழந்தையுடன் அமர்ந்து பயணிக்கும் பெண்மணியின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்தியாவின் செயல்பாடுகள் உலகத்தையே திரும்பப் பார்க்க வைத்துள்ளது. மோடியின் செயல்பாடுகளை உலகமே பாராட்டுகிறது […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு; சாலையில் நடந்து சென்றதால் காயமடைந்தவரா இந்த பெண்?

ஊரடங்கு காரணமாக சாலையில் நடந்து சென்றதால் பாதங்கள் கிழிந்ததாக ஒரு மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கிழிந்த தன்னுடைய பாதங்களைக் காட்டும் மூதாட்டியின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆட்சியாளர்களே கொஞ்சமாவது இரக்கம் வரவில்லையா…. நடந்து நடந்து கால்கள் பிய்ந்தது தான் மிச்சம். . வீடு வரவில்லை…” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Abdul Rahman என்பவர் மே 14ம் தேதி பகிர்ந்துள்ளார். […]

Continue Reading

லண்டன் பேருந்தில் இஸ்லாமிய வாசகங்களை அச்சிட இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதா?

‘’லண்டனில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் இஸ்லாமிய வாசகங்கள் பரப்பப்பட வேண்டும்,’’ என்று இங்கிலாந்து அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பஸ்களில் இஸ்லாமிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லண்டன் பஸ்களில் இஸ்லாமிய வாசகங்கள் இடம் பெற்றிருப்பது போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் ஒன்றில், ஒரு படத்தின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட இருந்தது. […]

Continue Reading

திமுக.,வின் ‘ஒன்றிணைவோம் வா’ சிறந்த திட்டம் என்று கூறினாரா மோடி?

‘’தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் சிறந்த முன் உதாரணமாக உள்ளது,’’ என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Facebook Link 2 Archived Link வாசகர் ஒருவர் மேலே உள்ள பதிவின் படத்தை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு (+91 9049044263) அனுப்பி, ‘இது உண்மையா?’, என்று கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு; இந்த வயதான நபர் நடந்தே சொந்த ஊர் செல்கிறாரா?

‘’கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த போக்குவரத்து வசதியும் இன்றி சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் நபர்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி பரிசோதிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்பேரில் தகவல் தேட தொடங்கினோம்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:வயதான முதியவர் தனது குடும்பத்தினருடன் கண்ணீர் மல்க […]

Continue Reading

மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற தொழிலாளர்கள் ரயில் வீடியோ உண்மையா?

மும்பையிலிருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ரயில் இன்ஜின் முழுக்க பயணிகள் தொங்கியபடி செல்லும் ரயில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளனர். 2.15 நிமிடம் இந்த வீடியோ செல்கிறது. வீடியோவில், “மும்பையில் இருந்து மேற்கு வங்கம் சென்ற ரயில், 10-5-2020” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் டிஜிட்டல் […]

Continue Reading

இத்தாலியில் அனைத்து மத மக்களும் இணைந்து தொழுகை நடத்தினார்களா?

‘’இத்தாலியில் கொரோனா வேகமாக பரவி வருவதால், மக்கள் அனைவரும் அல்லாஹ்விடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்கள்,’’ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 Mohamed Nithas என்பவர் மே 9, 2020 அன்று ஷேர் செய்திருந்த ஒரு வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம். உண்மையில் அந்த வீடியோவை, மார்ச் மாதம் 27ம் தேதி தஃவத் தப்லீக் […]

Continue Reading

ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பியதா கத்தார் அரசு?

‘’ஏர் இந்தியா விமானத்தை திருப்பி அனுப்பிய கத்தார் அரசு, அசிங்கப்பட்ட மோடி,’’ எனும் தலைப்பில் ஷேர் செய்யப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  Facebook Claim Link Archived Link இதேபோல, மேலும் சில ஃபேஸ்புக் பதிவுகளும் பகிரப்படுகின்றன.  Facebook Claim Link Archived Link இதே செய்தியை நமது வாசகர் ஒருவரும் வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி விளக்கம் கேட்டிருந்தார்.  […]

Continue Reading

பேருந்தில் விஜயகாந்த் படம் வைத்ததா மலேசிய அரசு?- ஃபேஸ்புக் வதந்தி

விஜயகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு, பஸ்ஸின் பின்புறம் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஊடகத்தில் ஒருவர் வெளியிட்ட புகைப்பட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “கேப்டன் மனிதநேயத்தை பாராட்டி மலேசிய அரசு அவரை பாராட்டும் விதமாக அவர்கள் நாட்டு பேருந்தில் படம் வரைந்து, அந்த நாட்டு மக்கள் அவரை பற்றித் […]

Continue Reading

பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணம் கொடுத்ததால் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடியா? -உண்மை அறிவோம்

பாபா ராம்தேவ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 கோடி அளித்ததால், அவருடைய கடன் ரூ.2212 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பாபா ராம்தேவ், மோடியுடன் ராம்தேவ் இருக்கும் படங்களை வைத்து புகைப்பட பதிவு ஒன்றைத் தயாரித்துள்ளனர். அதில், நேற்று: பாபா ராம்தேவ் கொரோனா நிவாரணமாக 25 கோடி நிதியுதவி. இன்று: பாபா […]

Continue Reading

இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா?

தமிழ்நாட்டில் மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெரியார் பேத்திகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையில் தமிழகத்தில்தான் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் கையில் மது பாட்டிலுடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில் “கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி. பெரியார் பேத்திகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sathya Bala என்பவர் 2020 […]

Continue Reading

கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு கொரோனா வைரஸ் என பரவும் வதந்தி…

‘’கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு 367 பேருக்கு கொரோனா தொற்று,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’கர்நாடக மாநிலத்தில் மது கடையில் இருக்கும் விற்பனையாளர் மூலம் அங்கு வந்து மது வாங்கி சென்ற 367 பேருக்கு கொரோனா […]

Continue Reading

அயோத்தியில் பசி காரணமாக சாது மரணம் அடைந்தாரா?- ஃபேஸ்புக் வதந்தி

அயோத்தியில் பசி காரணமாக வயதான சாமியார் ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வயதான பெரியவர் ஒருவர் இறந்து கிடக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் பசியால் மரணமடைந்த சாது. மத்தபடி அடிச்சி கொன்னா மட்டும்தான் குற்றம். பசில செத்தா பிரச்சனை இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Anas Bin Asraf என்பவர் 2020 […]

Continue Reading

கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி எறிந்த வட இந்திய தொழிலாளர்கள்… ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

சொந்த ஊர் திரும்பும் வட இந்தியர்கள் ரயில் ஏறிய நிலையில் கேரள அரசு கொடுத்த உணவைத் தூக்கி வீசியதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், ரயில் நிலையத்தை ரயில் கடக்கிறது. நடைமேடையில் உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடக்கின்றன. ரயிலில் உள்ளவர்கள் போராட்டக் குரல் […]

Continue Reading

இந்திய தேசிய கீதம் பாடிய அமெரிக்கர்கள்? வைரல் தகவலின் முழு விவரம்!

கொரோனாவைக் குணப்படுத்த ஹைட்ராக்ஸிகுரோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க அமெரிக்க மாணவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசிய கீதத்தை பாடியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 வெளிநாட்டினர் இந்திய தேசிய கீதம் பாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், ஹைட்ரோக்சி குளோரோகுயின் மாத்திரை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி கூறும் வகையில் மாணவர்கள் பாடியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் […]

Continue Reading

தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்து எதையும் தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை!

‘’தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்தை தமிழக அரசு அங்கீகரித்தது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் சினி கஃபே என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். இதனை மேலும் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  Cinecafe Link  Archived Link  இந்த செய்தியின் இடையே யூடியுப் வீடியோ […]

Continue Reading

‘நாளைய முதல்வர்’ சர்ச்சையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்- முழு விவரம் இதோ!

கொரோனா நிவாரண உதவிப் பொருட்களில் நாளைய முதல்வர் என்று தன்னுடைய பெயருக்கு முன்பு விஜயபாஸ்கர் போட்டுக்கொண்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அரிசி மூட்டையில் விஜயபாஸ்கர் படத்துக்கு கீழ், “நாளைய முதல்வர், டாக்டர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்” என்று அச்சிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்னாது நாளைய முதல்வரா?.. அப்போ எங்க டாக்டரு எடப்பாடி?” என்று […]

Continue Reading

ராகவேந்திரா மண்டபத்தை தர முடியாது என்று லதா ரஜினிகாந்த் கூறவில்லை!

கொரோனா சிகிச்சைக்கு மண்டபங்கள் தேவைப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு அங்கு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது என்று லதா ரஜினிகாந்த் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: புதிய தலைமுறை நியூஸ் டிக்கரோடு, தினத்தந்தி முதல் பக்கத்தை இணைத்து புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி செய்தியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்களில் முகாம்கள், பள்ளி, கல்லூரிகளில் 50 […]

Continue Reading

சூரத்தில் இருந்து நடந்து சென்ற குடும்பம் தற்கொலை செய்துகொண்டதா?- ஃபேஸ்புக் வதந்தி

கொரோனா ஊரடங்கு காரணமாக சூரத்திலிருந்து நடந்து சென்ற குடும்பம் ஒன்று பசி கொடுமை தாங்க முடியாமல் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏப்ரல் 6, 2020 அன்று இரா.செல்வ குமார் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சரவணன் என்பவர் 2020 மே 2ம் தேதி ஷேர் செய்துள்ளார். குடும்பமே தற்கொலை செய்துகொண்ட […]

Continue Reading

இந்த குழந்தை கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழக்கவில்லை!

‘’கொரோனா வைரஸ் பாதித்து உயிரிழந்த குழந்தையை பிளாஸ்டிக் மூட்டையில் கட்டித் தழுவும் தந்தை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை மற்ற முன்னணி ஊடகங்கள் உள்பட பலரும் பகிர்ந்து வருகின்றனர்.  Facebook Claim 1 Archived Link Facebook Claim 2 Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படத்தைப் பார்த்தால், […]

Continue Reading

கிம் ஜாங் உன் மரணம் என்று பகிரப்படும் தவறான வீடியோ மற்றும் புகைப்படம்!

‘’கிம் ஜாங் உன் மரணம்,’’ எனக் கூறி பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளை ஃபேஸ்புக்கில் கண்டோம். அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே புகைப்படம் மற்றும் இதுசார்ந்த வீடியோவையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர். அவற்றின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.  Facebook Claim Link 1 Archived Link Facebook Clam Link 2 Archived Link  Facebook Claim Link 3 Archived Link  […]

Continue Reading

திருப்பத்தூர் டவுனில் நள்ளிரவில் தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள்! – ஃபேஸ்புக் வதந்தி

திருப்பத்தூரில் நள்ளிரவில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் சாலைகளில் ஒன்று கூடி தொழுகை நடத்துவதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுனில், ஜூம்மா மசூதி தெருவில் கடந்த இரண்டு நாட்களாக, நள்ளிரவு 1 மணிக்கு நடு ரோட்டிலேயே சுமார் 700நபர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் உயரதிகாரிகளின் […]

Continue Reading

சமூக இடைவெளியை பின்பற்றும் மிசோரம் மார்க்கெட்: புகைப்படம் உண்மையா?

மிசோரம் மாநிலத்தில் சமூக இடைவெளி சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அழகாக இடைவெளி விட்டு காய்கறி உள்ளிட்ட பொருட்களை சாலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்ட படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “மிசோரம் என்ற பகுதியும் நம்ம நாட்லதான் இருக்கு. எவ்வளவு அழகாக சமூக இடைவெளியை பின்பற்றி அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள் இந்த மக்கள். பார்க்கவே […]

Continue Reading

ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ கோவிட் 19 பற்றி எதுவும் கூறினாரா?

‘’ஜப்பானிய மருத்துவ பேராசிரியர் தாசுகு ஹொன்ஜோ கோவிட் 19 என்பது மனிதன் உருவாக்கிய ஒன்று எனக் கூறியுள்ளார்,’’ என பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள தகவல் உண்மை கிடையாது. இந்த தகவல் பல்வேறு மொழிகளிலும் உலக […]

Continue Reading

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்துக் கொடுத்தாரா அமீர்கான்?

கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்து இந்தி நடிகர் அமீர் கான் வழங்கியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகர் அமீர் கான், மாவு பாக்கெட்டில் பணம் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி. டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு -23/04/2020- இரவில் ஒரு லாரி வந்தது. […]

Continue Reading

அமெரிக்காவில் குர்ஆன் ஓதப்படும் வீடியோ- எப்போது எடுத்தது தெரியுமா?

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மையப்பகுதியில் கிறிஸ்தவ மத குருக்கள் போல சிலர் அமர்ந்திருக்கின்றனர். குர்ஆன் ஓதப்படுகிறது. 57 விநாடிகளுக்குப் பிறகு […]

Continue Reading