முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தாரா?

‘’முரசொலி மாறனின் ஆலோசகராக அர்ஜூன மூர்த்தி பணிபுரிந்தார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த புகைப்படத்தை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி, இதில் முரசொலி மாறனுடன் இருப்பர் யார், என சந்தேகம் கேட்டிருந்தார். மேலும், ஃபேஸ்புக்கில், ‘இதில் இருப்பவர் அர்ஜூன மூர்த்தி,’ என்றும், ‘அவர் முரசொலி மாறனிடம் பணிபுரிந்தார்,’ என்றும் ஃபேஸ்புக்கில் தகவல் பகிர்வதாக, […]

Continue Reading

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருவதாகப் பரவும் வதந்தி…

‘’டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றால் ரூ.350 தருகிறார்கள். பணம் தராததால் சண்டையிடும் விவசாயிகள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இந்த வீடியோவில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இவர்களை ‘’டெல்லி விவசாயி போராட்டத்தில் பங்கேற்றவர்கள்; பேட்டா ரூ.350 தரவில்லை என்பதால் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்,’’ […]

Continue Reading

FACT CHECK: கனரா வங்கி முன்பு போராட்டம் நடத்திய பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி!

உத்தரப்பிரதேசத்தில் கனடா அரசைக் கண்டித்து கனரா வங்கி முன்பு பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தினார்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க-வினர் போராட்டம் நடத்தும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நாம கிண்டலுக்கு சொன்னது உண்மையாவே நடந்துருச்சு😂😂😂😂 உத்திரபிரதேசத்தில் கனடா நாட்டு பிரதமரை எதிர்த்து கனரா வங்கி முன் பாஜக ஆர்ப்பாட்டம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

இந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா?

‘’இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியில் நிவர் புயல் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இந்திய வானிலை நிலையம், ஏன் தமிழகத்தை தாக்கும் புயலுக்கு, இந்தியில் விளக்கம் அளிக்க வேண்டும்? இந்த புயலை […]

Continue Reading

FactCheck: எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி

‘’நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்தார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த செய்தியை நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக, வாசகர்கள் பலரும் சந்தேகம் கேட்கவே, நாமும் ஃபேஸ்புக்கில் யாரும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, பலரும் இதனை ஷேர் செய்வதை கண்டதன் […]

Continue Reading

FACT CHECK: இவை நிவர் புயல் மீட்பு பணி படங்கள் இல்லை!

நிவர் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொண்டதாக பல படங்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. அப்படி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உதவி செய்ததாக பகிரப்படும் படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மழை, புயல் நிவாரணப் பணியில் ஈடுபட்ட படங்கள் பகிரப்பட்டுள்ளன. மலையாளத்தில் பெயர் பலகை உள்ள மசூதியின் முன்பு சுத்தம் செய்கின்றனர்.. தேவாலயம் ஒன்றையும் […]

Continue Reading

மோடி இளமைப் பருவத்தில் யோகா செய்யும் அரிய வீடியோ என்று பரவும் வதந்தி

‘’இளமைப் பருவத்தில் மோடி யோகா செய்யும் அரிய வீடியோ,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நவம்பர் 24, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் வயதில் உள்ள ஒருவர் யோகா செய்யும் கறுப்பு, வெள்ளை வீடியோ காட்சியை இணைத்துள்ளனர். அதன் கீழே, ‘’நரேந்திர மோடி ஜி அவர்கள் இளம் […]

Continue Reading

FACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா?

உத்தரப்பிரதேசத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியின் போது இரும்பு கம்பிக்கு பதில் மூங்கில் குச்சிகள் பயன்படுத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சிமெண்ட் சாலை அமைக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரும்பு கம்பிகளுக்கு பதிலாக மூங்கில் கான்கிரீட் சாலை, எப்படி உ.பி.யின் வளர்ச்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பூங்கொடி என்பவர் 2020 நவம்பர் […]

Continue Reading

FACT CHECK: விஜய் மல்லையா பாஜக.,வுக்கு தந்த ரூ.35 கோடி காசோலை என்று பரவும் வதந்தி!

வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் மல்லையா ரூ.35 கோடி செக்-ஆக கொடுத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். காசோலையுடன் பகிரப்பட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்தது போல இருந்தது. காசோலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு விஜய் […]

Continue Reading

மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் கார்ட்டூன் ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டதா?

‘’ஜப்பானிய ஊடகங்கள், மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் இந்த கார்ட்டூனை ஒளிபரப்பி வருகின்றன,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 9, ஜூலை 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். இதுபற்றி உண்மைத்தன்மை கண்டறியும்படி நமது வாசகர்கள் சிலர் […]

Continue Reading

FACT CHECK: மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு தேவையில்லை என்று எச்.ராஜா கூறினாரா?

மாமிசம் சாப்பிடுபவர்கள் வாக்கு பாரதிய ஜனதா கட்சிக்குத் தேவையில்லை என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா படத்துடன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நவம்பர் 17, 2020 அன்று வெளியிட்ட நியூஸ் கார்டு என்று ஒன்றை ஷேர் செய்துள்ளனர். அதில், “விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு! மாமிசம் உண்பவர்கள் ஓட்டு பாஜகவுக்கு […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்த பா.ஜ.க என்று பகிரப்படும் வதந்தி!

பீகாரில் வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யும்போது சிக்கிய சங்கி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நான்கு நிமிட வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், இளைஞர் ஒருவரை கிராம மக்கள் சுற்றி வளைத்து விசாரிக்கின்றனர். திடீரென்று காவி தலைப்பாகை கட்டிய நபர் மற்றும் சிலர் வந்து அவரை காப்பாற்ற முயல்கின்றனர். இந்தியில் பேசுவது போல […]

Continue Reading

FACT CHECK: காலி சுவற்றில் தன்னுடைய சாதனையை உற்றுப் பார்த்தாரா மோடி?

வெள்ளை நிற, காலியாக உள்ள சுவற்றை பிரதமர் மோடி தன்னுடைய சாதனை உற்றுப் பார்க்கிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் அசல் படத்தை தேடினோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி வெறும் சுவற்றை உற்றுப் பார்க்கும் படத்துடன் ‘மோடி தன்னுடைய சாதனைகளைப் பார்வையிடுகிறார்’ என்று ஆங்கிலத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பகிரப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், “தன் சாதனைகளை பார்வையிடும் […]

Continue Reading

ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் மோடி பற்றிய அதிரடி வீடியோ- உண்மை என்ன?

‘’ஜப்பான் ஊடகங்கள் ஒளிபரப்பும் இந்தியா மற்றும் மோடி பற்றிய அதிரடி வீடியோ,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  கடந்த செப்டம்பர் 7, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க தலைவர்கள் பங்கேற்று, குத்துச்சண்டை போடுவது […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் பா.ஜ.க வெற்றி பெற்ற முறை என்று பகிரப்படும் ஹரியானா வீடியோ!

பீகாரில் பா.ஜ.க இப்படித்தான் வெற்றி பெற்றது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. நம்முடைய ஆய்வில் அந்த வீடியோ 2019ம் ஆண்டு ஹரியானாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வாக்குப்பதிவு மையத்தில் பெண்கள் வாக்களிக்க வருவதற்கு முன்பு கட்சி ஏஜெண்ட் ஒருவர் சென்று வாக்களித்துவிட்டு வந்து அமரும் வீடியோ காட்சி பகிரப்பட்டுள்ளது. அவருக்கு வாக்கு மைய அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரிகிறது. நிலைத் […]

Continue Reading

யோகி ஆதித்யநாத் பற்றி டிஎன் நியூஸ் 24 ஊடகம் வெளியிட்ட செய்தி உண்மையா?

‘’தமிழகத்தில் இருந்து பட்டாசு வாங்க முடியாது என்று கூறிய யோகி ஆதித்யநாத் -டிஎன் நியூஸ் 24 செய்தி,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 மேற்கண்ட தகவலை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப் வழியே, நமக்கு அனுப்பி, இது உண்மையா […]

Continue Reading

தீபாவளி தினத்தில் இறைச்சி சாப்பிடுவோர் இந்து அல்ல என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’தீபாவளி அன்று மாமிசம் சாப்பிடுவோர் ஹிந்துக்கள் அல்ல என்று எச்.ராஜா விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் மூலமாக, அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடினோம். அப்போது, பலரும் இதனை பகிர்ந்து வரும் விவரம் கிடைத்தது.  Facebook Claim Link 1 […]

Continue Reading

FactCheck: பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட பின் வேலை தேடி தமிழகம் வரும் பீகாரிகள்- உண்மை என்ன?

‘’பாஜகவுக்கு ஓட்டுப் போட்டதும், வேலை தேடி தமிழகம் வரும் பீகாரிகள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  நவம்பர் 11, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், ரயிலில் பலர் கூட்டமாகச் செல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பீகார் தேர்தலில் பிஜேபிக்கு வாக்கு செலுத்திய பின் பிழைப்பதற்கு தமிழகம் கிளம்பிய பீகாரிகள். அதான் […]

Continue Reading

FACT CHECK: மேகாலயாவில் சிலுவை அணிந்து வாக்கு கேட்ட சங்கிகள்- புகைப்படம் உண்மையா?

மேகாலயாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அங்கு காவி உடை அணிந்து சங்கிகள் வாக்கு கேட்டார்கள் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காவி உடை அணிந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மீது, “மேகாலயா இடைத் தேர்தலில் கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதினால், சிலுவை மாட்டிக் கொண்டு ஓட்டு கேட்கும் நாகரீக சங்கிகள்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

FactCheck: பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர மோசடி?- முழு விவரம் இதோ!

‘’பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 கடந்த சில நாட்களாகவே, சமூக வலைதளங்களில் மேற்கண்ட வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதனை, ‘’இதோ இப்போது பீகார் தேர்தலில் ⚖️🐘 யானை சின்னத்தில் […]

Continue Reading

FactCheck: அர்னாப் கோஸ்வாமி கைது பற்றி பகிரப்படும் போலியான நியூஸ் கார்டு!

‘’அர்னாப் கோஸ்வாமிக்கு சிறையில் முதலிரவு,’’ என்று கூறி அவர் நடத்தும் ரிபப்ளிக் டிவியில் செய்தி வெளியானதாக, சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர்கின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டது பற்றி, அவருக்குச் சொந்தமான ரிபப்ளிக் டிவியில் ‘’அர்னாப்புக்கு சிறையில் முதலிரவு‘’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா மற்றும் எல்.முருகனின் ‘கை’ எடிட் செய்யப்பட்டதா?

‘’பசும்பொன்னில் எச்.ராஜா கையெடுத்து கும்பிடவில்லை, எல்.முருகனின் கையை எடிட் செய்து, எச்.ராஜா போல அவரது ஆதரவாளர்கள் ஏமாற்றுகின்றனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Screenshot: FB Post for reference Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link […]

Continue Reading

FACT CHECK: பீகாரில் பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதா?

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தையொட்டி நடந்த பா.ஜ.க பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பேரணியாக வந்த பா.ஜ.க-வினரை பெருந்திரளான மக்கள் தடுத்து நிறுத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சங்கிகளை தெருவுக்கு தெரு விரட்டி அடிக்கும் பீகார் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை தமிழன் மீம்ஸ் 4.0 என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

FactCheck: இந்த Go Back Modi புகைப்படம் பீகாரில் எடுக்கப்பட்டதா?

‘’பீகார் மக்கள் கோ பேக் மோடி போராட்டம் நடத்தும் காட்சி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 23, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், சாலை ஒன்றின் நடுவே, Go Back Modi என எழுதப்பட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பிரதமர் மோடி வருகைக்கு பீகாரில் வலுக்கும் […]

Continue Reading

இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம் எனக் கூறி பரவும் வதந்தி…

‘’இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஜூலை 10, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ கோயில்களுக்கு மின் கட்டணம் யூனிட்₹8/-. சர்ச், மசூதிக்கு,₹2.85. மதசார்பற்ற நாட்டிலே இந்த வேறுபடு ஏன்.??,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை […]

Continue Reading

பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று குஷ்பு கூறினாரா?

‘’பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று கூறிய குஷ்பு,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Claim Link  Archived Link இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதன்பேரில், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதன்பேரில் மீண்டும் தகவல் தேடியபோது, […]

Continue Reading

FACT CHECK: அதிமுக தோல்வி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக பரவும் வதந்தி!

2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 200 தொகுதிகளுக்கு மேல் தோல்வியடைந்து ஆட்சியை இழக்கும் என்று தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் கூடிய தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “2021 தேர்தலில் அதிமுக 200 தொகுதிக்கு […]

Continue Reading

FACT CHECK: நாயிடம் சில்மிஷம் செய்த பாஜக உறுப்பினர் என்று பகிரப்படும் வதந்தி!

நாயிடம் சில்மிஷம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (9049053770) வாசகர் ஒருவர் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், “நள்ளிரவில் குடிபோதையில் நாயிடம் சில்மிஷம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க உறுப்பினர் […]

Continue Reading

Explainer: இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைந்துவிட்டதா?

‘’இந்தியர்களின் தனிநபர் வருமானம் வங்கதேசத்தினரை விட குறைவு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 16, அக்டோபர் 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், மோடியின் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’வரலாற்றில் முதல்முறையாக வங்கதேசத்தின் தனிநபர் வருவாயை விட கீழே சென்ற இந்தியர்களின் தனிநபர் வருவாய் – மோடி ஆட்சியின் சாதனை‘’, என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

FACT CHECK: இது சரோஜ் நாராயணசாமி படம் இல்லை!

ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான சரோஜ் நாராயணசாமியின் படம் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆல் இந்தியா ரேடியோவில் செய்திவாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசாமியின் இன்முகம் காண்போம் என்று குறிப்பிட்டு ஒரு படம் பகிரப்பட்டுள்ளது. நீண்ட பதிவில் சரோஜ் நாராயணசாமி பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தது. இந்த பதிவை ‎தினம் ஒரு தகவல் DAILY INFORMATION […]

Continue Reading

FactCheck: பாஜகவினர் தடவியது பற்றி குஷ்பு கருத்து: விஷமத்தனமான வதந்தி…

‘’பாஜகவினர் என்னைத் தடவியதில் தவறில்லை என்று கூறிய குஷ்பு,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இது பார்க்க அசலானதாக இருந்ததால், பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த அக்டோபர் 13, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில் குஷ்பு பற்றி ஒரு நியூஸ் கார்டு வெளியிட்டதாகக் […]

Continue Reading

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி பகிரப்படும் போலிச் செய்தி

‘’குஷ்பு, நமீதாவை மொழிப் போர் தியாகிகள் என்று சொன்ன அண்ணாமலை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 12, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பற்றி தினமலர் ஊடகத்தின் பெயரில் வெளியான செய்தியைப் போன்ற நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’குஷ்பு, நமீதா போன்ற […]

Continue Reading

FACT CHECK: குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பாஜகவினர்?- பழைய வீடியோ!

குஷ்புவிடம் தவறாக நடக்க முயன்று அடிவாங்கிய பா.ஜ.க-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கூட்ட நெரிசலில் செல்லும் குஷ்பு, திடீரென்று திரும்பி இளைஞர் ஒருவரை அடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “குஷ்பு விடம் தவறாக நடக்க முயன்று அடி வாங்கிய பாஜக-வினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை […]

Continue Reading

குஷ்பு பற்றி அவதூறான வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாக பரவும் வதந்தி!

‘’குஷ்பு பற்றி தரக்குறைவான வகையில் விமர்சித்த பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 புதிய தலைமுறை பெயரில் மிகவும் தரக்குறைவான வாசகங்கள் அடங்கிய இந்த நியூஸ் கார்டை பலரும் உண்மை என பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டை முதலில் […]

Continue Reading

ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்தாரா கே.டி.ராகவன்?

‘’ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்த கே.டி.ராகவன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பெயரில் வெளியான ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பொன்.ராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற காஞ்சி ஜெயேந்திரரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை சாதியை காரணம் […]

Continue Reading

குஷ்பூ மற்றும் அவரது சகோதரர் பற்றி பகிரப்படும் விஷமத்தனமான வதந்தி…

‘’குஷ்பூ மீது ஊடகங்கள் முன்னிலையில் கை வைத்து தடவும் பாஜகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல்களை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 12, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், நடிகை குஷ்பூ பாஜகவில் இணையும் நிகழ்வின்போது, அவரது தோளில் ஆண் ஒருவர் கை போட்டு நிற்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் […]

Continue Reading

FACT CHECK: காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.க-வில் இணைந்தாரா?

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக, தினமலர் செய்தி வெளியிட்டு பிறகு அதனை திருத்திக் கொண்டதால் சமூக ஊடகங்களில் குழப்பம் நிலவுகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive “காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் மகள் பா.ஜ.-வில் ஐக்கியம்” என்று தினமலர் செய்தி வெளியிட்டது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது.  இந்த படத்தை Srisai Selvam என்பவர் அக்டோபர் 7, 2020 அன்று […]

Continue Reading

FACT CHECK: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தாக்கப்படவில்லை!

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனை விவசாயிகள் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட பதிவைக் காண… Facebook I Archive 1 I Archive 2 மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தனைப் போல உள்ள ஒருவர் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாஜக மத்திய மந்திரி ஹர்ஷ வர்த்தன் விவசாயிகளால் தாக்கப்பட்ட சம்பவம்… இன்னும் இருக்கு….” […]

Continue Reading

FACT CHECK: விவசாய சட்ட மசோதாவை எதிர்த்த விவசாயிகள் மீது போலீசார் தடியடி; வீடியோ உண்மையா?

விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook I Archive 1 I Archive 2 பேரணி போல வருபவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஊடக_வேசிகள் காட்டாவிட்டாலும் இந்தியா முழுவதும் இதை எடுத்துச் செல்லுங்கள்…!!! விவசாய சட்ட மசோதா எதிர்த்து போராடிய விவசாயிகளை காவி […]

Continue Reading

FACT CHECK: விவசாய சட்டத்தைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியா?- இது பழைய வீடியோ!

டெல்லியில் மோடி அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்தை எதிர்த்து 2வது நாளாக விவசாயிகள் பேரணி நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரம்மாண்ட பேரணி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் லோகோ உள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 2வது நாளாக விவசாயிகள் பேரணி. பல்வேறு மாநிலங்களின் […]

Continue Reading

FACT CHECK: லட்சக் கணக்கில் திரண்ட விவசாயிகள் போராட்டத்தை மீடியாக்கள் மறைத்ததா?

சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் மசோதாவை எதிர்த்து லட்சக் கணக்கில் விவசாயிகள் திரண்டு நடத்திய போராட்டத்தை மீடியாக்கள் மறைத்தன என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link லட்சக் கணக்கில் திரண்ட மக்களின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீடியாக்கள் அமைதியோ அமைதி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஹேஷ்டேக்கில் Farmers Protest, farmers protest […]

Continue Reading

FACT CHECK: பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதலா?

பஞ்சாபில் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில், “பஞ்சாப்பில் வேளாண் மசோதாக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் தாக்கப்படும் விவசாயிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தை JALLIKATTU-Veeravilaiyattu என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 செப்டம்பர் 25ம் தேதி […]

Continue Reading

FACT CHECK: ஹரியானாவில் பாஜக எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள்; முழு உண்மை என்ன?

ஹரியானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ முகத்தில் சாணி அடித்த விவசாயிகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 ஒருவர் முகத்தில் மை போல ஏதோ பூசப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “தீ பரவட்டும்… நெற்றியில் சந்தனம் வைப்பது போல் கிட்ட போய் ஹரியானா பிஜேபி எம்.எல்.ஏ முகத்தில் சாணியை பூசி செருப்பால் அடித்த விவசாயிகள்….!! […]

Continue Reading

Fact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க 660 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாளிதழில் ஒன்ற வெளியான, “தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பேட்டி” என்ற செய்தியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்த அறிவாளியை வைத்திருக்கும் […]

Continue Reading

தமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவு தொடங்கப்பட்டதா?

‘’தமிழ்நாடு பாஜகவில் நாய்கள் பிரிவுக்கு புதிய துணைத் தலைவர் நியமனம்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 Facebook Claim Link 4 Archived Link 4 இதன்படி, பாஜக நிர்வாகிகள் நாயுடன் […]

Continue Reading

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு: அர்ஜூன் சம்பத் பற்றிய தகவல் உண்மையா?

‘’நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு,’’ என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 19, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், அர்ஜூன் சம்பத் மற்றும் சூர்யா இருவரும் நேரடியாகக் கருத்து மோதலில் ஈடுபட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் […]

Continue Reading

நடிகர் சூர்யா மற்றும் கவுண்டர் சமூகம் பற்றி கல்யாண ராமன் விமர்சித்தாரா?

‘’காட்ட வித்து கள்ளு குடிச்ச நேரத்துல ஒழுங்கா இந்தி படிச்சிருந்தா நீட்ல பாஸாகியிருக்கலாம்,’’ என்று பாஜக ஆதரவாளர் கல்யாணராமன் கூறியதாகக் கூறி ஒரு தகவல் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ட்வீட்டரில் சர்ச்சையான கருத்து பகிர்வதன் மூலமாக பிரபலமானவர் கல்யாண ராமன். பாஜக ஆதரவாளரான இவர், சிலருக்கு நேரடி […]

Continue Reading

கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வினர்; வீடியோ உண்மையா?

கள்ள நோட்டு அச்சடித்து சிக்கிய பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கட்டுக்கட்டாக புதிய 2000ம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 1000ம் ரூபாய் நோட்டு கட்டுக்கள், அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் இருக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழி நீக்கமா? திருச்சி சிவா, நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் வதந்தி

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழிகளை நீக்க உத்தரவிட்டதாக திருச்சி சிவா கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தி.மு.க மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா ஆகியோர் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக. ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு […]

Continue Reading

பெரியார் பல்கலைக் கழகத்தில் பி.ஏ இந்தி கற்றுத் தரப்படுவதாக பரவும் வதந்தி!

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பிஏ இந்தி கற்றுத் தரப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சேலம் தந்தை பெரியார் பல்கலைக் கழக லோகோவுடன் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், வழங்கப்படும் பாடங்கள் என்ற தலைப்பின் கீழ் பி.ஏ இந்தி என்று இருந்தது. நிலைத் தகவலில், “ஹிந்தி வேண்டான்னு இப்போ எதுக்குடா சண்டை போடுறீங்க காசு கொடுத்தா பெரியார் பல்கலைக் […]

Continue Reading