ஜியோ ஜி என்ற பெயரில் முகேஷ் அம்பானி புதிய கேம் அறிவித்ததாகப் பரவும் வதந்தி

‘’ஜியோ ஜி என்ற பெயரில் முகேஷ் அம்பானி புதிய கேம் அறிவித்துள்ளார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ஏஎன்ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்ததைப் போல ஒரு ட்வீட் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், ‘’இந்திய அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்த நிலையில், ஜியோ ஜி என்ற புதிய மல்ட்டிபிளேயர் கேமை […]

Continue Reading

இந்தியை எதிர்ப்பவர்கள் பற்றி எச்.ராஜா விமர்சித்ததாக பரவும் வதந்தி!

இந்தியை எதிர்ப்பவர்களின் பெற்றோர் பற்றி பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்ததாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா படத்துடன் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச் ராஜா. ஒழுக்கமான தாய் தந்தையர்க்கு பிறந்த ஹிந்துக்கள் யாரும் ஹிந்தியை எதிர்க்கமாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை கறுப்பர் கூட்டம் […]

Continue Reading

உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கற்பவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும், என்று ஸ்டாலின் கூறியதாக பரவி வரும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கற்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கும் – மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை RSS தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ப செல்வம் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’இந்தி தெரியாவிட்டால் பாகிஸ்தான் போய்விடுங்கள்,’’ என்று பாஜக தமிழ்நாடு இளைஞரணி தலைவர் வினோஜ் ப செல்வம் கூறியதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 8, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், Narathar Media என்ற லோகோவில் வெளியிடப்பட்ட நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் – வினோஜ் ப […]

Continue Reading

பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி- வதந்தியை நம்பாதீர்!

‘’பீகார் மக்களுக்கு சாலை நடுவே குடிசை கட்டி தந்த மோடி,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 6, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், சாலை நடுவே குடிசைகள் அமைத்து வாழும் மக்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் கீழே, ‘’பீகாரில் மதுபானி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை 57ல் நடுவில் வீடு கட்டி கொடுத்த நம் […]

Continue Reading

அதிமுகவில் இருந்து விலகுவேன் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

‘’விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி தராவிட்டால், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்,’’ என்று ராஜேந்திர பாலாஜி கூறியதாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஆகஸ்ட் 16, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி தராவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவது உறுதி – ராஜேந்திர பாலாஜி,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.  இதனைப் […]

Continue Reading

‘எச்.ராஜா இருக்கும்வரை தாமரை மலராது’ என்று எல்.முருகன் கூறியதாகப் பரவும் வதந்தி

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து எச்.ராஜா விலகாத வரை தமிழ்நாட்டில் தாமரை மலர்வது கடினம் என்று எல்.முருகன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவல் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை நியூஸ் கார்டுடன் நடிகர் வடிவேலுவின் திரைப்பட காட்சியைச் சேர்த்துப் பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில், “பாஜகவிலிருந்து எச்.ராஜா விலகாதவரை; தமிழ்நாட்டில் தாமரை மலர்வது என்பது மிகக்கடினம். – எல்.முருகன், தமிழக […]

Continue Reading

2021-ல் முதல்வர் ஆகாவிட்டால் கைலாசா சென்றுவிடுவேன் என்று ஸ்டாலின் கூறினாரா?

“2020ல் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன்” – என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “2021ல் நான் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன் – மு க ஸ்டாலின் ஆவேசம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

மூட்டை முடிச்சுகளுடன் மக்கள்; மோடி ஆட்சிக் காலத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதா?

பிரதமர் மோடியின் ஆட்சியில், ஆபத்துக் காலத்தில் செல்லும் மனிதர்கள் என்று மூட்டை முடிச்சுகளோடு குடும்பம் குடும்பமாக மக்கள் செல்லும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தலையில் மிகப்பெரிய சுமையுடன், கையில் குழந்தைகளுடன் பலரும் கால்நடையாக வரும் புகைப்படம் மற்றும் பிரதமர் மோடி மயிலுக்கு உணவு அளிக்கும் புகைப்படம் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆபத்து காலத்தில் […]

Continue Reading

கொரோனா காலத்தில் போட்டோஷூட் நடத்திய மோடி என்று பகிரப்படும் பழைய படம்!

நாடே கொரோனா ஊரடங்கால் அவதியுறும் நிலையில் பிரதமர் மோடி போட்டோ ஷூட் நடத்தினார் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் சில புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “நாடே கொரோனோ ஊரடங்கால் நாசமாகி, கிடைக்கையில் இவனுக்கு போட்டோஷூட் ஒரு கேடா..? இரக்கமற்ற அரக்க மிருகத்தனம் குணம் கொண்ட ஒருவனுக்குத்தான் இது போல செய்ய தோன்றும்” என்று […]

Continue Reading

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எச்.ராஜாவை மாமா என்று கூறினாரா?

‘’எச். ராஜாவை மாமா என்றுதான் அழைப்பேன் – அண்ணாமலை,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை பலரும் உண்மை போல பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  கர்நாடகாவைச் சேர்ந்த அண்ணாமலை என்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, ஆகஸ்ட் 25, 2020 அன்று பாஜகவில் இணைந்தார்.  இந்நிலையில், அவரை பற்றி விமர்சித்து […]

Continue Reading

காந்தியையும், அவரை சுட்ட கோட்சேவையும் கும்பிடும் மோடி?- புது விதமாக பரவும் வதந்தி

மகாத்மா காந்தியையும், அவரை கொன்ற கோட்சேவையும் பிரதமர் மோடி கும்பிடுகிறார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link காந்தி சிலை மற்றும் சாவர்க்கர் படத்தை பிரதமர் மோடி வணங்கும் புகைப்படங்கள் ஒன்றாக சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இப்ப சொல்லுங்க, இவங்களுக்கு நம்ம ஊர்ல என்ன பெயர் சொல்லுவாங்க…? இங்கே மகாத்மா காந்திக்கும் ஒரு கும்பிடு, சுட்டு கொன்ற கோட்சேவுக்கும் […]

Continue Reading

வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க தொண்டர்கள் மீண்டும் தாக்கியதாக பரவும் வதந்தி!

உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொண்டு வரும் பிரஷாந்த் பூஷனை பா.ஜ.க குண்டர்கள் தாக்கியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்ட பிரஷாந்த் பூஷன் தாக்கப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இன்று பிஜேபி குண்டர்களால் தாக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ பதிவை Manoharan Karthik என்பவர் […]

Continue Reading

குழாய்க்குள் வசிக்கும் மக்கள்; இந்த புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்படவில்லை!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீட்டைவிட்டு வெளியே வராத டிஜிட்டல் இந்தியா மக்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது எங்கே எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அடுக்கி வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய குழாய்களுக்குள் வசிக்கும் மக்கள் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வீட்டைவிட்டு வெளியில் வராத இந்தியக் குடிமக்கள்.டிஜிட்டல் இந்தியா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Raviganesh Veera என்பவர் […]

Continue Reading

பாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்டதா?- முழு விவரம் இதோ!

‘’பாஜக கொடி ஏற்றும்போது தேசிய கீதம் பாடப்பட்ட அவலம்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், பாஜக கொடியை ஏற்றிவிட்டு, எல்லோரும் தேசிய கீதம் பாடி மரியாதை செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இதனை 2020 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின்போது நடைபெற்றதாகக் கூறி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை […]

Continue Reading

இ.ஐ.ஏ பற்றி பேசியதால் பத்மபிரியாவை பா.ஜ.க ஆதரவாளர் அடித்ததாக பரவும் விஷம பதிவு!

இ.ஐ.எ சட்டத்தின் கேடுகளைப் பற்றி வீடியோ வெளியிட்ட இளம் பெண் பத்மபிரியாவின் கன்னத்தில் பா.ஜ.க ஆதரவாளர் அடித்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இ.ஐ.ஏ 2020 திருத்தம் பற்றிய வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆன பத்மபிரியா பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பெண்ணின் கன்னம் பழுக்க அரைவிட்ட #பிஜேபி ஆதரவாளன்…!!! EIA 2020 […]

Continue Reading

‘நியூஸ் 18’ பிரபலம் செந்தில் பற்றி பரவும் போலியான ட்வீட்!

‘’நியூஸ் 18 பிரபலம் செந்தில், மாரிதாஸ் பற்றி வெளியிட்ட ட்வீட்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 18, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ் 18 செந்தில் புகைப்படம் மற்றும் அவரது பெயரில் உள்ள ட்விட்டர் ஐடி ஒன்று பகிர்ந்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள்; இந்த படம் உத்தரகாண்டில் எடுத்ததா?

குழந்தைகள் கம்பி ஒன்றில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் படம் உத்தரகாண்ட் மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்று பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link கம்பியில் தொங்கியபடி ஆற்றைக் கடக்கும் குழந்தைகள் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பள்ளி செல்லும் குழந்தைகள் நிலை பாரிர். உத்தரகண்டு மாநிலம்… பாலம் கட்ட வேண்டாம் கோயில் கட்டினால் போதும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை Madhavan Madhavan […]

Continue Reading

கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கியபோது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லையா?

கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் போது கருணாநிதி, வைகோ எதிர்க்கவில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மறைந்த பா.ஜ.க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நன்றிகெட்ட தமிழா தெரிந்துகொள். இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த போது அதை கருணாநிதியோ, எம்ஜிஆரோ, வைகோவோ எதிர்க்கவில்லை. பாராளுமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தவர் வாஜ்பாய். கச்சத்தீவு […]

Continue Reading

2014-ல் இடிக்கப்பட்ட மசூதி பற்றி இன்றளவும் பகிரப்படும் மத வெறுப்பு பிரசாரம்!

‘’மத துவேஷம் காரணமாக மோடி அகமதாபாத்தில் உள்ள இந்த மசூதியை இடித்து தள்ளிவிட்டான்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவில், மசூதி ஒன்று போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்படும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’குஜராத் அகமதாபாத்தில் 20 வருடங்களாக இந்த மஸ்ஜிதின் ஜாமீன் சம்பந்தமாக விவாதம் நடந்து கொண்டு இருந்தது. ஆனால் மோடி, […]

Continue Reading

பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என்று குறிப்பிடப்பட்டதா?

‘’பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என வெட்கமின்றி கூறியுள்ளனர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் வெளியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘’பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான திரு.பி. லூவாங்கோ அடைக்கலராஜ் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு […]

Continue Reading

இந்த சாமியார்கள் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை; முழு விவரம் இதோ!

‘’ராமர் கோயில் பூமி பூஜையில் சமூக இடைவெளியின்றி பங்கேற்ற இந்து சாமியார்கள்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 10, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த பதிவில், இந்து சாமியார்கள் (அந்தணர்கள்) கூட்டமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பூஜைக்காக #குண்டியில்_மாஸ்க் #அணிந்து_வந்த_சாமிகள்_கூட்டம் , அரசின் ஆணைகேற்ப Covin […]

Continue Reading

மோடிக்காக ரூ.8458 கோடி கொடுத்து வாங்கப்படும் விமானத்தின் படமா இது?

மோடிக்காக 8458 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் விமானத்தின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சொகுசு விமானத்தின் உட்புறப் பகுதி படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “இது 5 ஸ்டார் ஹோட்டல் அல்ல… மோடிக்காக வாங்கப்படும் புதிய விமானம்! பிரதமருக்காகத் தயாராகும் வான்வெளி வீடு ரூ.8,458 கோடி செலவில் நவீன விமானம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கட்டும் பகுதியில் தாமிரத் தகட்டில் எழுதிய மூலப்பத்திரம் கிடைத்ததா?

‘’ராமர் கோயில் கட்டும் இடத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட மூலப்பத்திரம் கிடைத்தது,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 3, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இப்போது ராமர் கோயில் கட்ட அஸ்திவாரம் தோண்டும்போது அங்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ராமர் கோயில் பற்றிய விபரம் கேப்ஸ்யூல் வடிவில் […]

Continue Reading

தந்தை பெரியார் திராவிடர் கழகம் பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்ததா?

‘’தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகஸ்ட் 7ம் தேதி பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் அறிவித்துள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் அணியும் நிகழ்வை எதிர்த்து, பன்றிக்கு பூணூல் அணிவிக்கும் போராட்ட அறிவிப்பு தொடர்பாக எழுதப்பட்ட போஸ்டரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். […]

Continue Reading

நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா?

‘’நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link  ஜூலை 30, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், ‘’மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் துவங்க நீதிமன்றம் அனுமதி, ஜெய் மோடி சர்க்கார்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக […]

Continue Reading

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவை மிரட்டினாரா?

‘’பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் நடிகர்கள் கார்த்தி, சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 இதில், புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றையும், நடிகர்கள் கார்த்தி, சூர்யா நாட்டை விட்டே ஓட நேரிடும் என்று கூறி கல்யாணராமன் பெயரில் வெளியான ட்விட்டர் பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். இதனை […]

Continue Reading

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்கிறாரா எல்.கணேசன்?- ஃபேஸ்புக் வதந்தி

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்கும் இல.கணேசனுக்கு வாழ்த்துக்கள் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பதவியேற்கும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு இல.கணேசன் ஜி அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை  […]

Continue Reading

உல்லாச விடுதியில் காயத்ரி ரகுராம் சிக்கியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

பிரபல நடிகை காயத்ரி ரகுராம் பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நடிகை காயத்ரி ரகுராம் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.  இந்த பதிவை E Prabavalavan என்பவர் 2020 ஜூலை 21ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: […]

Continue Reading

பாஜக தமிழக தலைவர் முருகன் தமிழர்களை காட்டுமிராண்டி எனக் கூறினாரா?

‘’பாஜக தமிழக தலைவர் முருகன் தமிழர்களை காட்டுமிராண்டி என விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூலை 20, 2020 அன்று பகிரப்பட்ட இந்த பதிவில், பாஜக தமிழ்நாடு ட்விட்டர் ஐடியில் இருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டதாகக் கூறி அதற்கான ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’முருகன் தமிழ்க்கடவுள் என்பதெல்லாம் திராவிடக் கூட்டம் கிளப்பி விட்ட கதை. […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கட்டும் இடத்தில் தலைமை பூசாரி பலாத்காரம் செய்தாரா?

‘’அயோத்தி ராமர் கோயில் கட்டுமிடத்தில் தலைமை பூசாரி பலாத்காரம் செய்த காட்சி,’’ என்று கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  ஜூலை 15, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில் ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்து, அதன் மேலே, ‘’இனி ராம பக்தாளிடமிருந்து பெண்களை காப்பாற்றனும் போல, ராமன் என்ன பண்ணானோ அதைத்தான் ராம பக்தாளும் […]

Continue Reading

பா.ஜ.க நிதி உதவி செய்ததாக கறுப்பர் கூட்டம் கூறியதா?- போலி நியூஸ்கார்டு

கடவுள் வழிபாட்டைப் பற்றி தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட பா.ஜ.க உதவி செய்தது என்று கறுப்பர் கூட்டம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜகா நிதி உதவி??… நாத்தீகர்களை வைத்து கடவுள் மற்றும் வழிபாடுகளை தவறாக பேச தவறாக சித்தரிக்க பாஜகா நிதி உதவி வழங்கியதாக […]

Continue Reading

பீகாரில் கங்கை நதியில் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் சடலம் வீசப்படுகிறதா?

பாட்னாவில் கங்கை நதியில் கோவிட் 19 தொற்று நோயால் இறந்தவர்கள் சடலம் வீசப்படுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link படகில் உடல் போன்று நீளமாக இருக்கும் ஒன்றை எடுத்து வீசும் மூன்று படங்களை கொலாஜ் செய்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், பாட்னாவில் கோவிட் நோயாளிகளின் உடல்கள் கங்கை நதியில் வீசப்படுகின்றன. பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சி இறந்த உடல்களை எப்படி கையாளுகிறது […]

Continue Reading

இந்த புகைப்படத்தில் இருப்பவர் என்கவுன்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே இல்லை!

‘’இந்த புகைப்படத்தில் இருப்பவர் விகாஸ் துபே,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், அமித் ஷா மற்றும் மாயாவதியுடன் நிற்கும் ஒருவரை சிவப்பு நிறத்தில் வட்டமிட்டு, இவர்தான் விகாஸ் துபே என அடையாளப்படுத்தியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது. உண்மை அறிவோம்:சமீபத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் […]

Continue Reading

சாவர்க்கர் பிறந்த நாளுக்கு காலணி நிறுவனங்கள் வாழ்த்து சொன்னதாகப் பரவும் வதந்தி

சாவர்க்கர் பிறந்த நாளையொட்டி காலணி நிறுவனங்கள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டே வாழ்ந்த “சாவர்க்கர் பிறந்தநாளை” முன்னிட்டு பிரபல காலணி நிறுவனங்களான அடிடாஸ், விகேசி ஆகியவை வாழ்த்து செய்திகளை வெளியிட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

கும்பகோணம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை கொலை செய்தது யார்?

கும்பகோணம் நாச்சியார்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர் கோபாலை இஸ்லாமியர்கள் கொலை செய்தார்கள் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடக்கும் முதியவர் படம் மற்றும் வீடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் கொலை செய்தது யார் என்று தெரியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மாநாடு நடத்தப்பட்டதால் ஆத்திரத்தில் இப்படி செய்தார்களா என்று தெரியவில்லை என்று ஒருவர் கூறுகிறார். […]

Continue Reading

பெட்ரோல், டீசல் விலை; பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய பாஜக தலைவர்கள்? உண்மை இதோ!

பெட்ரோல், டீசல் விலை குறித்து கேள்வி கேட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு பா.ஜ.க தலைவர்கள் வெளியேறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வெளியேறுவது போல உள்ள வீடியோவை பகிர்ந்துள்ளனர். நாற்காலியை விட்டு எழுந்து செல்லும்போது சிலர் பெட்ரோல் விலை தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர்.  நிலைத் தகவலில், “நேற்று மகராஷ்டிரா […]

Continue Reading

மோடி பற்றி மீண்டும் மீண்டும் பரவும் போலியான புகைப்படம்!

பல ஆண்டுகளுக்கு முன்பு மோடி தரையைக் கூட்டி சுத்தம் செய்யும் படம் என்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி, அது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்று உறுதி செய்யப்பட்ட படம் மீண்டும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி தரையைக் கூட்டி சுத்தம் செய்வது போன்ற எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஜெயிலை சுத்தம் செய்யும் இந்த கொலைக் குற்றவாளி யார் என்று தெரியுதா. […]

Continue Reading

பீகாரில் அமித்ஷா கார் மீது கல் வீசப்பட்டதாக பரவும் வதந்தி!

பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற வாகனம் மீது கல்வீசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 பிரதமர், குடியரசுத் தலைவர் செல்லும்போது வாகனங்கள் அணிவகுத்து செல்லும். அதுபோன்ற வாகன அணிவகுப்பு ஒன்றின் மீது கல்வீசி தாக்கப்படுகிறது. பதிலுக்கு போலீசாரும் கல் வீசி தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

இந்திய ராணுவத்தை விமர்சித்து போராட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்?- விஷம பதிவு

இந்திய ராணுவத்தை கண்டித்தும், சீன ராணுவத்தை வாழ்த்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கழுத்தில் இந்திய ராணுவம் ஒழிக என்றும் சீன ராணுவத்தை ஆதரிப்போம் என்று எழுதப்பட்ட பிரசார அட்டையை கழுத்தில் மாட்டியுள்ளனர்.  […]

Continue Reading

ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தோம் என்று மோடி கூறினாரா!

ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கினோம் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடியின் பழைய புகைப்படம் மற்றும் சிறுவன் ஒருவனின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மோடி படத்துக்கு அருகே, “ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கியுள்ளோம் – மோடி” என்று உள்ளது. சிறுவன் மோடியிடம் கேள்வி […]

Continue Reading

நித்தியானந்தா பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்றாரா எச்.ராஜா?

நித்தியானந்தா பிறந்த நாளை உலக பெண்கள் பாதுகாப்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று எச்.ராஜா கூறியதாக போலியான ட்வீட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வதந்தியின் விவரம்: Facebook Link Archived Link நித்தியானந்தாவுடன் எச்.ராஜா அமர்ந்திருக்கும் படத்துடன் ட்வீட் பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. H Raja என்று பெயர் இருந்தாலும் வடிவேலு முகத்துடன் மார்ஃபிங் செய்யப்பட்ட எச்.ராஜா படம் அதில் டி.பி-யாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், “நண்பர் நித்தியானந்தா பிறந்த நாளை… உலக பெண்கள் […]

Continue Reading

கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டாரா?

‘’கூவம் ஆற்றங்கரையில் சிலை வைக்கும்படி எச்.ராஜா கேட்டார்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு வைரல் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், எச்.ராஜா பெயரில் வெளியான ட்வீட் ஒன்றை இணைத்துள்ளனர். அதில், ‘’சீனாவுடன் போர் நடந்து, நான் பலியானால், எனக்கு கூவம் ஆற்றங்கரையில் எனக்கு சிலை வைப்பீர்களா?,’’ என்று எச்.ராஜா கேட்டதாகவும், அதற்கு மற்றொருவர் ‘’நீ எங்க பலி ஆவ? […]

Continue Reading

இந்தியாவின் பெயரை மாற்றினால் தற்கொலை செய்வேன் என்று வைகோ கூறினாரா?

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றினால் தற்கொலை செய்துகொள்வேன் என்று வைகோ கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் வைகோ ஆவேசம் – நல்ல முடிவு” என்று குறிப்பிட்டு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்பவர் 2020 ஜூன் 14ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் […]

Continue Reading

நியூசிலாந்தைப் போல பெங்களூருவிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதா? – விபரீத ஒப்பீடு

நியூசிலாந்தை விட அதிக மக்கள் தொகை கொண்ட பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்திய எடியூரப்பாவை பா.ஜ.க-வை சேர்ந்தவர் என்பதால் ஊடகங்கள் பாராட்டவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூசிலாந்து மற்றும் பெங்களூருவை ஒப்பிட்டு புகைப்பட பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், பாராட்ட மறந்த ஊடகங்கள்… காரணம் அது பிஜேபி ஆளும் மாநிலம். ஒரு நாட்டைவிட தன் நகரத்தின் நோயை கட்டுப்படத்திய தலைமை” […]

Continue Reading

மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா?

‘’மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என போலீசார் எச்சரிக்கை,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link நியூஸ் 7 டிவி வெளியிட்டதைப் போல இந்த பிரேக்கிங் நியூஸ் கார்டு உள்ளது. இதனால் பலர் உண்மை என நம்பி குழப்பமடைந்துள்ளனர். இந்த செய்தியை வேறு டெம்ப்ளேட்டில் மற்றொரு ஃபேஸ்புக் பயனாளரும் பகிர்ந்திருந்தார்.  Facebook Claim […]

Continue Reading

பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்!

‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim 1 Archived Link Facebook Claim 2 Archived Link  Facebook Claim 3 Archived Link  Facebook Claim 4 Archived Link  Facebook Claim 5 Archived Link Facebook Claim 6 Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவைப் போல, மேலும் பலரும் […]

Continue Reading

விஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டதாகவும் அவர் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தினகரன் நாளிதழ் வெளியிட்ட இணைப்பை ஆதாரமாகக் கொண்டு பதிவிட்டுள்ளனர். அந்த செய்தியில், “லண்டனில் இருந்து மும்பைக்கு விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டார்: ஆர்தர் ரோடு சிறையில் அடைப்பு” என்று இருந்தது. இந்த பதிவை Senthil Karthick‎ […]

Continue Reading

மாஸ்க் இன்றி கூடிய கூட்டம்… லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவா?

மாஸ்க் இன்றி, சமூக இடைவெளி இன்றி கூடிய மிகப்பெரிய கூட்டம் என்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 சாலையில் இளைஞர்கள் திரண்டு நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் அந்த வீடியோவில் இல்லை. நிலைத் தகவலில், “மாஸ்க்காவது சமூக விலகலாவது பசி வந்தா பத்தும்பறக்கும்.பிஜேபியால் இந்தியாவின் ஒட்டு […]

Continue Reading

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்று சிபிஎம் கட்சி கூறியதா?

‘’சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து போராட்டம் அறிவித்துள்ள கேரள கம்யூனிஸ்ட் கட்சி,’’ எனும் தலைப்பில் பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’இந்தியாவிற்குள் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்க மறுத்து கேரள கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி, மே 22ம் தேதி போராட்டம் கூட அறிவித்துள்ளது,’’ என்று மேற்கண்ட ஃபேஸ்புக் […]

Continue Reading