FactCheck: பழைய புகைப்படத்தை மாடலாக வைத்து பகிரப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கார்ட்டூன்- உண்மை என்ன?

‘’இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் கார்ட்டூன் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  வயதான பெண்மணி ஆக்சிஜன் சிலிண்டருடன் சாலையில் அமர்ந்திருக்க, அதனைப் பார்த்து, சர்தார் படேல் சிலை தலையில் அடித்துக் கொள்வதைப் போலவும் வரையப்பட்டுள்ள இந்த கார்ட்டூனை, வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் சமூக […]

Continue Reading

FactCheck: இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்?- வதந்தியால் சர்ச்சை…

‘’இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

FactCheck: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கருணாநிதி ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்தாரா?

‘’சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்து தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டவர் கருணாநிதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியபோது, இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

FactCheck: குஜராத்தில் ஆம்புலன்ஸ் வசதி இன்றி தந்தையின் சடலம் சுமந்து சென்ற மகள்கள்- உண்மை என்ன?

‘’குஜராத்தில் ஆம்புலன்ஸ் வசதியின்றி கொரோனா பாதித்து உயிரிழந்த தந்தையின் சடலத்தை கைகளால் சுமந்து செல்லும் மகள்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண்கள் சடலம் ஒன்றை கதறி அழுதபடி சுமந்துசெல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குஜராத் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தன் தந்தையின் பிணத்தை […]

Continue Reading

FactCheck: யோகி ஆதித்யநாத் வருகையின்போது பாஜக வன்முறை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்!

‘’யோகி ஆதித்யநாத் கோவை வந்தபோது பாஜக.,வினர் செய்த வன்முறை அட்டகாசம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இதில், பாஜக கொடி பிடித்தபடி, பேருந்தை வழிமறித்து வன்முறை செய்யும் சிலரது புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’ நேற்று கோவையில் பிஜேபியின் அராஜகம். நாளை தமிழகம் முழுவதும் இதுதான் நடக்கும். கவனம் தேவை,’’ […]

Continue Reading

FactCheck: எடப்பாடி பழனிசாமிக்கு சாபம் விட்டாரா ஆ.ராசா?- வைரலாக பரவும் வதந்தி!

‘’எடப்பாடி நீ மோசமா சாவ,’’ என்று ஆ.ராசா சாபம் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த செய்தியை நமது வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FactCheck: அரசியல் தேவைக்காக மு.க.ஸ்டாலினை ஜக்கி வாசுதேவ் சந்தித்தாரா?

‘’ஜக்கி வாசுதேவ் ரகசியமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இந்த செய்தியை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பியிருந்தார். இதனை மேற்கொண்டு, ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்வு செய்துள்ளனரா என தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: தற்போதைய அரசியல் சூழலில், […]

Continue Reading

FactCheck: பெரியார் ஈ.வெ.ரா. சாலை ஸ்டிக்கர்- யார் செய்தது என்ற குழப்பத்தில் தமிழ் ஊடகங்கள்!

‘’மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று பெயர் மாற்றம்,’’ எனும் தலைப்பில் புதிய தலைமுறை ஊடகம் பகிர்ந்திருந்த செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பார்க்கும்போது, அரசாங்கம், பெரியார் ஈவெரா சாலை என பெயரை முன்வந்து மீண்டும் மாற்றியதாக, அர்த்தம் கிடைக்கிறது. இதனை வாசகர்கள் பலரும் குறிப்பிட்டு கமெண்ட் பகிர்வதையும் கண்டோம். இதன் தொடர்ச்சியாக, புதிய தலைமுறை மற்றொரு செய்தியும் […]

Continue Reading

FactCheck: 2013ம் ஆண்டு எடுத்த கும்பமேளா புகைப்படத்தை தற்போது பகிர்வதால் குழப்பம்!

‘’2021 கும்ப மேளா புகைப்படம், மாஸ்க் முகத்திற்கு அணியாமல் கீழே கோவணம் போல அணிந்த இந்தியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், Simi Garewal என்பவர் வெளியிட்ட ட்வீட்டை ஸ்கிரின்ஷாட் எடுத்து, உண்மை போல பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:2021ம் ஆண்டில் கொரோனா வைரஸ் […]

Continue Reading

FactCheck: அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டு வேண்டாம் என்று கோவையில் யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டுகள் வேண்டாம் – யோகி ஆதித்யநாத்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, 2 வாரங்கள் முன்பாக, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய முழு விவரத்தை […]

Continue Reading

FactCheck: சேலத்தில் குழந்தை கடத்தல் கும்பலா?- பழைய வீடியோ மீண்டும் பரவுவதால் பரபரப்பு!

‘’சேலத்தில் குழந்தை கடத்தல் கும்பல்- பொதுமக்கள் அடித்து உதைத்து பிடித்தனர்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் வீடியோவுடன் கூடிய தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சிலரை தாக்கும் காட்சி அடங்கிய வீடியோவின் பின்னணியில், ஒருவர் சேலம் உள்பட அனைத்து மாவட்ட மக்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படி பேசுகிறார். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

FactCheck: கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர் இவரா?

‘’கமல்ஹாசன் தாக்கியதால் காயமடைந்த பெண் உதவியாளர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: நியூஸ்7 தமிழ் டிவியின் லோகோவுடன் கூடிய மேற்கண்ட நியூஸ் கார்டை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா?- முழு விவரம் இதோ!

‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குப் பதிவு நடைபெற்ற வேளையில், அதற்கு முன்பாக, திடீரென மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் […]

Continue Reading

FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை – யோகி ஆதித்யநாத்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FactCheck: அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதா?

‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link Archived Link மேற்கண்ட ட்விட்டர் பதிவில், பாலிமர் டிவி லோகோவுடன் ஒரு டிவியின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஜெயக்குமாரின் வேட்புமனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையம், திமுக பற்றி தவறான குற்றச்சாட்டுகள் வைத்து கடிதம் எழுதியதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை,’’ என்று […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கலந்துகொள்வேன் என்று சசிகலா கூறினாரா?

‘’மு.க.ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வேன் – சசிகலா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் சசிகலா பெயரில் பகிரப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், மு.க.ஸ்டாலின் பதவியேற்பில் கண்டிப்பாக கலந்துகொள்வேன், என்று சசிகலா பெயரில் பகிரப்பட்டுள்ளதால், உண்மை என்றே நம்பி பலரும் ஷேர் செய்து […]

Continue Reading

FactCheck: பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி…

‘’பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை – எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: […]

Continue Reading

முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கூறினாரா?

‘’முக்குலத்தோர் ஓட்டு தேவையில்லை என்று அஇஅதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா கருத்து,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோவுடன் ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’அதிமுகவிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரே காரணத்திற்காக வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தங்களுக்கு […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்?- தவறான புகைப்படங்களால் குழப்பம்!

‘’மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. அவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதேபோல, மற்றும் சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர். அவற்றையும் கீழே இணைத்துள்ளோம்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – அவரது கணவர் […]

Continue Reading

FactCheck: கோவை வன்முறை சம்பவத்தை ஆதரித்து அமித் ஷா பேசினாரா?

‘’கோவை வன்முறை சம்பவத்தை ஆதரித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,’’ எனும் தலைப்பில் பரவும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஏப்ரல் 2, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்தை […]

Continue Reading

FactCheck: செந்தில் பாலாஜி பற்றி பேசியதை பாஜக அண்ணாமலை மறுத்தாரா?

‘’பாஜக கரூர் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பற்றி பேசியதை மறுத்தார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை […]

Continue Reading

FactCheck: தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த நியூஸ் கார்டை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

FactCheck: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உண்மையானது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’பொள்ளாச்சியில் உண்மையிலேயே கற்பழிப்பு நடந்ததா என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:எடப்பாடி பழனிசாமி சமீபத்தில், திமுக.,வைச் சேர்ந்த ஆ.ராசா, தனது தாயார் பற்றி விமர்சனம் செய்ததாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய விசயமாக அமைந்தது. Vikatan News […]

Continue Reading

FactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம் என்று பாஜக மாற்றி எழுதியதா?

‘’தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம் என்று மாற்றிய பாஜக,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் […]

Continue Reading

FactCheck: சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதன்படி, திமுக ஆட்சிக்கு அமைந்ததும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதைப் போல மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஸ்கிரின்ஷாட் உறுதிப்படுத்துகிறது. […]

Continue Reading

FactCheck: எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்று எடப்பாடி பழனிசாமி பேசவில்லை!

‘’பணத்திற்கு ஆசைப்படும் சில பெண்களைக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஜோடித்ததே பொள்ளாச்சி வழக்கு – எடப்பாடி பழனிசாமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link Facebook Claim Link 1 Archived Link 1 நியூஸ் ஜே ஊடகத்தின் லோகோவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’கண்ணீர் மல்க முதலமைச்சர் பேச்சு – அதிமுகவினர் […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் கூறியதாகப் பரவும் வதந்தி

‘’எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் விமர்சனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, அங்கேயும் இதனை பலர் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FactCheck: அடிக்கல் நாட்டியதும் கம்பி நீட்டினாரா கனிமொழி?- முழு உண்மை இதோ!

‘’காயல்பட்டணம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டிய கனிமொழி பிறகு கம்பி நீட்டிவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக […]

Continue Reading

FactCheck: பாஜக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பற்றி பரவும் வதந்தி!

பட்டியல் சமூக பெண்கள் பற்றி மிகவும் இழிவாகப் பேசிய பாஜக பெண் நிர்வாகி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதில், பாஜக.,வைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர், ‘’பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் அணிவதுதான் துணி விலை உயர்கிறது,’’ என்று குறிப்பிட்டு பேசுகிறார். சில விநாடிகள் […]

Continue Reading

FactCheck: அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்ததா?

‘’அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, அனுமதியின்றி கட்டப்பட்ட இந்து கோயில்களை இடித்துவிட்டு, கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கப்படும் என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குறுதி அளித்துள்ளதா என்று, நமக்கு நெருங்கிய ஊடக […]

Continue Reading

FactCheck: சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக கூறியதா?

‘’சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை நகைச்சுவைக்காகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடனும் பகிர்ந்து வருவதைக் கண்டோம்.  Facebook Claim Link […]

Continue Reading

FactCheck: கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் தருவோம் என்று பாஜக கூறவில்லை!

‘’கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ‘’ஹரியானா மாநிலம் போல் தமிழகத்திலும் கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

FactCheck: கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடையா?- பாஜக கூறியதாகப் பரவும் வதந்தி

‘’கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் […]

Continue Reading

FactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்ததா?

‘’தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவோம்- பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FactCheck: 2019ல் விஜயகாந்த் பற்றி வெளிவந்த செய்தி தற்போது மீண்டும் பரவுகிறது!

‘’கூட்டணி பேச்சுவார்த்தையின்போது சுயநினைவின்றி அமர்ந்திருந்த விஜயகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியின் புகைப்படத்தை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் யாரேனும் இந்த தகவலை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, சிலர் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FactCheck: பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தினாரா சீமான்?- முழு விவரம் இதோ!

‘’பாஜக தலைவர்களுடன் சீமான் ரகசிய சந்திப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதன் தலைப்பை வைத்து, கூகுளில் நாமும் தகவல் தேடினோம். அப்போது, அந்த செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டதும், பின்னர் டெலிட் செய்துவிட்டதையும் கண்டோம். ஆனால், தினகரன் […]

Continue Reading

FactCheck: உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி நாளில் மட்டும் பறவைகள் வருகிறதா?

‘’உஜ்ஜைனி மகா காளேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில் மட்டும் வருகை தரும் பறவைகள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், கோயில் கோபுரம் ஒன்றை பறவைகள் கூட்டமாகச் சுற்றி வரும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரர் கோவிலில் மாக சிவராத்திரியன்று பறவைகள் கூட்டமாய் கோபுரத்தைப் […]

Continue Reading

FactCheck: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறவில்லை!

‘’வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் – பொன்முடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’வன்னியர் வாக்கை நம்பி திமுக கட்சி நடத்தவில்லை. வன்னியர் இட ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம், வன்னியர் வாக்கை நம்பி கட்சி நடத்தவில்லை.! திமுக முன்னாள் […]

Continue Reading

FactCheck: பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் கூறியதாகப் பரவும் வதந்தி

‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கு பற்றி மாஃபா பாண்டியராஜன் சர்ச்சை கருத்து,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், குற்றவாளிகளுக்கு துணை போகும் அதிமுக, என்று கூறியுள்ளனர். அதன் கீழே பகிரப்பட்டுள்ள லோகோ தந்திடிவி லோகோவுடன் உள்ளது. அதில், ‘’பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண் பிள்ளைகளை சரியாக வளர்க்காத பெற்றோர்தான் முழுப் […]

Continue Reading

FactCheck: சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின் போட்டி என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினாரா?

‘’உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்,’’ என்று கூறி திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஸ்டாலினுடைய மகன் என்பதால் உதயநிதிக்கு சேப்பாக்கம், திருவல்லிக்கேணி என்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்கள் – திண்டுக்கல் […]

Continue Reading

FactCheck: கொரோனா ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறதா?- புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி

‘’கொரோனா ஊரடங்கு நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிப்பு,’’ என்று கூறி புதிய தலைமுறை பெயரில் பரவும் செய்தியை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’தமிழ்நாட்டில் நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் திடீர் பரபரப்பாக மேற்கண்ட செய்தி பகிரப்பட்டு […]

Continue Reading

FactCheck: பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் – ரஜினிகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்கள், மக்கள் என யாரையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் […]

Continue Reading

FactCheck: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் சிறுவனை தாக்கிய பாஜக நபர்; உண்மை என்ன?

‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கிய பாஜக நபர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஏற்கனவே பகிரப்பட்ட பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து, இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’பாஜக ஆளும் காஜியாபாத்தில் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் நுழைந்த முஸ்லீம் […]

Continue Reading

FactCheck: மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகப் பரவும் வதந்தி

‘’மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இளம்பெண் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சராமரியாக தாக்குவதோடு, அவரை சாலை நடுவே கீழே தள்ளி, உயிருடன் நெருப்பு வைத்து எரிக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், இதனை சமூக வலைதளங்களில் பகிர்வோர் இது, மத்தியப் பிரதேசத்தில், கிறிஸ்தவ […]

Continue Reading

FactCheck: சசிகலா ஜாதி பற்றி சி.வி.சண்முகம் விமர்சித்தாரா?- நாரதர் மீடியா மறுப்பு…

‘’சசிகலாவின் ஜாதியினர் குற்றப் பரம்பரை. அவர்களது ரத்தத்திலேயே குற்றச் செயல்கள் ஊறியுள்ளது – சி.வி.சண்முகம்,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 8 பிப்ரவரி 2021 அன்று குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘’சசிகலா தன்னுடைய பலமாக கருதும் சமூகம் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப்பரம்பரை என முத்திரை […]

Continue Reading

FactCheck: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஜிபி முத்துவை மக்கள் நீதி மய்யம் அறிவித்ததா?

‘’விளாத்திகுளம் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து அறிவிப்பு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், சமயம் தமிழ் ஊடகத்தின் பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக ஜி.பி.முத்து அறிவிப்பு,’’ என்று […]

Continue Reading

FactCheck: பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று எல்.முருகன் கேட்டாரா?

‘’மு.க.ஸ்டாலினை பார்த்து, பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று கேட்ட எல்.முருகன்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில், News J ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ள நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக இந்துக்களின் தாயான பசுவிற்கு வழங்கத் தயாரா – […]

Continue Reading

FactCheck: சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல்- உண்மையா?

‘’சுவிஸ் வங்கியில் கருப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்ற காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள கருப்புப் பண பட்டியல் என்று கூறி இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளனர். இதனை வாசகர்கள் பலரும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா […]

Continue Reading

FactCheck: திமுக.,வின் அராஜக ஆட்சி என்று கமல்ஹாசன் குறிப்பிட்டதாகப் பரவும் வதந்தி!

‘’திமுக.,வின் அராஜக ஆட்சி வரக்கூடாது – கமல்ஹாசன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், புதிய தலைமுறை லோகோவில் ஒரு தகவல் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் […]

Continue Reading

FactCheck: எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் எடுத்த புகைப்படங்களா?- உண்மை இதோ!

‘’எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் சோதனை நடத்தியபோது கிடைத்த பணம், தங்கம்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த 2018 ஜூலை 21 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ எடப்பாடி_பழனிசாமியின் #பினாமி #செய்யாதுரை வீட்டில் கட்டி கட்டியாக நூறு கிலோ தங்கமும்,கரன்சி கட்டுகளும் தோண்ட தோண்ட அலிபாபா குகையில் இருந்து […]

Continue Reading