இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து அம்மா உணவகங்களுக்கு சமையல் எண்ணெய் வாங்கும்படி அண்ணாமலை கூறினாரா?

அம்மா உணவகங்களுக்கு தேவையான சமையல் எண்ணெயை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்று அண்ணாமலை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதேபோல, ஃபேஸ்புக்கிலும் இதனை சிலர் உண்மை போல குறிப்பிட்டு, பகிர்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிடுவேன் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

அண்ணாமலையை சிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று பா.ஜ.க-வின் நாராயணன் திருப்பதியின் ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்வீட் பதிவின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “என் ஜாதகம் மோசமான ஜாதகம் என்று அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். நான் வழக்கு தொடுத்தால் நீ உள்ளே போய் விடுவாய். […]

Continue Reading

தமிழ்ப் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கூறினாரா?

தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும். உடன்கட்டை ஏறுதல் தமிழர்களின் பாரம்பரியம். தமிழ் பெண்கள் மீண்டும் உடன்கட்டை […]

Continue Reading

காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி என உலக வங்கியிடம் தி.மு.க அரசு அறிக்கை கொடுத்ததா?

நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் வழங்கிய காபி, மிக்சருக்கு ரூ.47 கோடி செலவு ஆனது என தி.மு.க அரசு அறிக்கை அளித்தது என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் தினகரன் நாளிதழில் வெளிவந்த செய்தி புகைப்படத்தை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. தினகரன் நாளிதழில், “நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி?- எடிட் செய்த புகைப்படத்தால் சர்ச்சை…

‘’தமிழ்நாட்டில் ஏற்றப்பட்ட பாஜக கொடி ,’’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை ஏற்கனவே பாஜக.,வின் கர்நாடகா நிர்வாகி சிடிஆர்.ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். CTR Ravi Tweet Link I Archived Link அதற்கு கமெண்ட் அளித்துள்ள பலரும் தெலுங்கானா மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பகிர்ந்த […]

Continue Reading

மெக்காவுக்கு பாத யாத்திரை செல்கிறேன் என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

மெக்காவுக்கு மாலை போட்டு பாத யாத்திரை செல்ல போகிறேன் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அர்ஜூன் சம்பத் வெளியிட்ட ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்காவுக்கு மாலை போட்டு பாதயாத்திரை செல்ல போகிறேன்..! – அர்ஜூன் சம்பத்” என்று இருந்தது. நிலைத் தகவலில், “மாலை போட்டுக்கொண்டு […]

Continue Reading

ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் தொடங்க எஸ்பிஐ அதானி குழுமத்திற்கு ரூ.60,000 கோடி கடன் வழங்கியதா?

‘’ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க அதானி குழுமத்திற்கு ரூ.60,000 கோடி கடன் வழங்கிய எஸ்பிஐ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது பலரும் சமூக வலைதளங்களில் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I […]

Continue Reading

தமிழ்நாடு அரசின் வருவாய் முழுவதும் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியத்திற்குச் செலவாகிறதா?

தமிழ்நாடு அரசின் வரி வருவாய் மொத்தமும் அரசு ஊழியர் சம்பளம், அரசு ஊழியர் ஓய்வூதியம் மற்றும் கடனுக்கு வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive யாரோ ஒருவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டது போல உள்ளது. அதில், “தமிழக அரசின் மொத்த வரி வருவாய் – 1,42,800 கோடி. […]

Continue Reading

உதய தாரகை தமிழ் நாளிதழ் 1817-ல் தொடங்கப்பட்டதா?

‘’உலகில் முதல் தமிழ் நாளிதழ் உதய தாரகை 14.01.1817 அன்று தொடங்கப்பட்டது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, இந்த பதிவு கடந்த சில ஆண்டுகளாக, சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம். Twitter Post Link I Archived Link உண்மை அறிவோம்:நாம் […]

Continue Reading

Explainer: நீட் தேர்வின் அருமையைப் புரிந்துகொண்ட முதல்வர் என்று தகவல் பரப்பும் நெட்டிசன்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்களை சுத்தம் செய்துகொடுக்கும் வேலை செய்து வரும் பெண் ஒருவர் தன் மகளை மருத்துவம் படிக்க வைத்தார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த பெண்ணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து வாழ்த்தியதன் மூலம் நீட் தேர்வின் அவசியத்தை முதல்வர் புரிந்துகொண்டார் என்று சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வரவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

சேலத்தில் 6 ஏழை மாணவர்களை தத்தெடுத்த அரசுப் பள்ளி ஆசிரியை இவரா? மீண்டும் பரவும் வதந்தி…

‘’சேலத்தில் 6 ஏழை அரசுப் பள்ளி மாணவர்களை தத்தெடுத்த ஆசிரியை லட்சுமி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இதேபோன்ற தகவல் ஏற்கனவே, சில ஆண்டுகள் முன்பாக, சமூக வலைதளங்களில் வெவ்வேறு பெண்களை வைத்து பகிரப்பட்டு வந்தது. அப்போது, நாமும் ஆய்வு செய்து, அந்த தகவல் தவறான ஒன்று என உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தோம். Fact […]

Continue Reading

ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் ஒப்படைத்தேன் என கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

கோவிலைப் புதுப்பிப்பதாகக் கூறி வசூலித்த ரூ.50 லட்சத்தை அண்ணாமலையிடம் வழங்கினேன் என்று கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கோவிலைப் புனரமைக்கப்போவதாகக் கூறி பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட கார்த்திக் கோபிநாத், பா.ஜ.க தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கார்த்திக் கோபிநாத் போலீசில் பரபரப்பு […]

Continue Reading

சவூதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்று அண்ணாமலை கூறினாரா?

சவூதி அரேபியாவை விட குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைவு, என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் எண்ணில் (+91 9049053770) நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் தகவல் தேடியபோது பலரும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

வள்ளலாரின் உண்மையான புகைப்படம் இதுவா?

ஃபேஸ்புக்கில் பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்ற அடிக்குறிப்போடு வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் புகைப்படம் என்று ஒரு படம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்துக்கு கீழே கையால் எழுதிய பதிவு உள்ளது. அதில், “காரணப்பட்டு சமரச பஜனை, கந்தசாமி பிள்ளை மாணவர் நாகை அட்டவணை இரத்தினம் பிள்ளை, பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், […]

Continue Reading

கோயில் சிலை உடைப்பு, பணம் வசூலில் அண்ணாமலைக்கும் தொடர்பு என்று யூடியுபர் கார்த்திக் கோபிநாத் கூறினாரா?

கோவில் சிலைகளை மிஷனரிகள் உடைத்ததாக வதந்தி பரப்பி பணம் வசூலித்ததில் அண்ணாமலைக்கும் தொடர்பு உள்ளது என்று கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாஜக கொள்ளையர்களின் கூடாரமாக மாறிய கோயில். மிஷினரிகள் கோயில் சிலைகளை உடைத்ததாக […]

Continue Reading

மோடியை வரவேற்க தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை திமுக அரசு வழங்கியதா?

‘’மோடியை வரவேற்பதற்காக, தமிழ்நாடு போக்குவரத்து போலீசாருக்கு காவி நிழற்குடைகளை அரசு வழங்கியுள்ளது,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:பிரதமர் மோடி கடந்த வாரம் (மே 26, 2022) தமிழ்நாட்டிற்கு வந்தார். இதன்போது, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. TOI Link I […]

Continue Reading

பெரியாரை உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கிறேன் என்று செந்தில்வேல் கூறினாரா?

தி.மு.க எம்.எல்.ஏ-வும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகவியலாளர் செந்தில்வேல் வெளியிட்ட ட்வீடின் ஸ்கிரீன்ஷாட் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை. இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு […]

Continue Reading

Rapid Fact Check: #GoBackModi என்று வானதி ஶ்ரீனிவாசன் கையில் போஸ்டர் பிடித்தாரா? 

பிரதமர் மோடி சென்னை வரும் சூழலில் கோ பேக் மோடி என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்தார் என்று என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive Go Back Modi என வானதி ஶ்ரீனிவாசன் போஸ்டர் பிடித்திருப்பது போன்று எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “பி. ஜே. பி ஓட சட்டமன்ற […]

Continue Reading

கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

‘’கர்நாடகா சட்டப்பேரவையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவிப்பு,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.   தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்வதையும் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை […]

Continue Reading

அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என காயத்ரி ரகுராம் கூறினாரா?

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார் என பா.ஜ.க-வைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு போல உள்ளது. அதில், “அண்ணாமலை எனக்கு முதுகில் குத்திவிட்டார்” என்று […]

Continue Reading

காம படைத்தலைவர் எச்.ராஜா என போஸ்டர் ஒட்டப்பட்டதா?

பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காம படைத் தலைவர் என எச்.ராஜாவை குறிப்பிட்டிருந்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா கைது கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரின் படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், கண்டிகின்றோம்! கண்டிகின்றோம்!! காம படைத்தலைவர் H.ராஜா அவர்களை கைது செய்த தமிழக அரசையும், காவல் துறையையும் […]

Continue Reading

10 மாதங்களில் செய்த சாதனை என மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் விஷம நியூஸ் கார்டு!

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என அ.தி.மு.க 10 ஆண்டுகளில் செய்யாததை, 10 மாதங்களில் செய்துள்ளோம் என மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாணக்யா என்ற யூடியூப் சேனல் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின். அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 10 மாதங்களில் செய்துள்ளோம். […]

Continue Reading

புதுச்சேரி மதுபானக் கடையில் பாடகர் கோவன் தாக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் செயலாளரும் மதுவுக்கு எதிராக தொடர்ந்து பாடல்களை பாடி வருபவருமான கோவன், புதுச்சேரியில் மது அருந்தும்போது மதுபானக் கடை ஊழியர்களுடன் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக ஆர்வலர் கோவனுக்கு சரமாரி அடி, உதை! […]

Continue Reading

மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும்; ஆனால் அவர்களுக்கு இந்தி புரியாது என்று அண்ணாமலை கூறினாரா?

‘’மோடி பேசினால் அமெரிக்கா வரை கேட்கும். ஆனால், அவர்களுக்கு இந்தி தெரியாது என்பதால் பேசியும் பயனில்லாத நிலை ,’’ என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்கிறது என்று மு.க.ஸ்டாலின் அரசு அறிவித்ததா?

தமிழ்நாட்டில் 2022 மே 18 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மே 18 முதல் பேருந்து கட்டணம் உயர்வு என்று மொட்டையாக ஒரு புகைப்பட பதிவு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லிடியலரசின் மற்றுமொரு மைல்கல். சீரழிந்த முதலாண்டு  சந்தி சிரிக்கும் அடுத்த ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பாலமுருகன் […]

Continue Reading

இலங்கையை ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினாரா?

இலங்கையை தமிழ்நாட்டுடன் இணைத்து ஸ்டாலின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று செய்தியாளர் செந்தில் கூறினார் என்று ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செய்தியாளர் செந்தில் வேல் வெளியிட்டது போன்று ட்வீட் ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கையை தவிக்க விட்டுவிட்டு பிரதமர் மகிந்தா ராஜபக்சே தப்பியோட்டம் !! […]

Continue Reading

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன்; கிரண் பேடி வெளியிட்ட ட்வீட்டால் சர்ச்சை…

ஹெலிகாப்டரை முழுங்கும் சுறா மீன் என்று கூறி கிரண் பேடி வெளியிட்ட ட்வீட் ஒன்று மிக வைரலாகப் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இது உண்மையா, பொய்யா என்ற குழப்பத்தில் பலரும் இந்த பதிவை ஷேர் செய்வதைக் காண முடிந்தது. Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இந்த பதிவு வைரலாகப் பரவிய நிலையில், பலராலும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. […]

Continue Reading

தருமபுரம் ஆதீன பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்குவோம் என்று கே.பாலகிருஷ்ணன் கூறினாரா?

‘’தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட்கள் உண்டியல் குலுக்குவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பரவும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என சென்னை மேயர் கூறினாரா?

அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று சென்னை மேயர் பிரியா கூறினார் என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அம்மா உணவகம் முன்பு மக்கள் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அம்மா உணவகத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை!  – சென்னை மாநகர மேயர்.! ஏழை எளிய மக்களுக்கு தான் தெரியும் […]

Continue Reading

கி.வீரமணி பல்லக்கில் வந்ததாக பரவும் தகவல் உண்மையா?

கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தது போலவும், அவர் வரலாம் ஆதீனம் வரக்கூடாது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் கி.வீரமணி பல்லக்கில் பவனி வந்தாரா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாரட் வண்டியில் கி.வீரமணி அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் யாரோ வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “இந்த தருதலையை சுமக்கலாம்… ஆதீனத்தை சுமக்க கூடாதாம்..?!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை BJP Thalli […]

Continue Reading

வாடிகனில் மனிதனை மனிதன் தூக்கும் பல்லக்கில் போப் பவனி வருகிறாரா? 

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சிப்பவர்கள், பிஷப்பை எதிர்க்கத் துணிவிருக்கிறதா, வாட்டிக்கனில் நடக்கும் பல்லக்கு ஊர்வலத்தை நிறுத்தச் சொல்லி கூற தைரியம் உள்ளதா என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பா.ஜ.க பிரமுகர் வெளியிட்ட ட்வீட்டை வைத்து ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் தலைப்பை மட்டும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் பகிருகின்றனர். அதில், “தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்தீரே.. […]

Continue Reading

அண்ணாவை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத்; உண்மை என்ன?

‘’அண்ணாவை கை ரிக்‌ஷாவில் அமர வைத்து இழுத்த ஈ.வெ.கி.சம்பத். இவர்களின் வாரிசுகள்தான் (திமுக) தற்போது தருமபுரம் ஆதீனம் போன்றவர்களை பல்லக்கு பயன்படுத்த தடை விதிக்கிறார்கள்,’’ எனக் குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றினை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார்.  இதே தகவலை பலரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். […]

Continue Reading

அடையாறு ஆனந்த பவன் முஸ்லீம் நபருக்கு விற்பனை செய்யப்பட்டதா?

‘’அடையாறு ஆனந்த பவனை முஸ்லீம் நபர் வாங்கியுள்ளார். ஹிந்துக்கள் மற்றும் சுத்த சைவ உணவுப் பிரியர்கள் கவனிக்கவும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார். இதனை ஃபேஸ்புக் பயனாளர்களும் ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா என […]

Continue Reading

2022 மே மாதம் 2ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதா?

2022 மே 2ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது, எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, இந்த பதிவு கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம். Facebook Claim Link I Archived […]

Continue Reading

இந்தி, சமஸ்கிருத விவகாரம்: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதி கிடைக்காது என்று அமித்ஷா மிரட்டினாரா?

இந்தி, சமஸ்கிருதத்துக்கு எதிரான போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் நிதி கிடைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகைப்படத்துடன் கூடிய ஜெயா பிளஸ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கிறது பாகிஸ்தானில் அல்ல என்பதை தமிழக அரசு […]

Continue Reading

பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறினாரா?

பட்டின பிரவேச பல்லக்கைத் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தூக்க அனுமதி இல்லை என்று தருமபுரம் ஆதீனம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தருமபுரம் ஆதீனம் பதில். மரபாக சைவ வெள்ளாளர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விழா என்பதால் அண்ணாமலை அவர்களுக்கு பட்டின பிரவேச […]

Continue Reading

2026 தேர்தலில் அண்ணாமலை முதல்வராக வர அதிமுக உழைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக நின்றால், அவருக்காக அதிமுக உழைக்கும்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகின்றனர். Twitter Claim Link I […]

Continue Reading

Rapid Fact Check: திரிசங்கு மலர் என்று மீண்டும் பரவும் வதந்தி!

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் திரிசங்கு மலர் என்று ஒரு மலரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மலர் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் திரிசங்கு மலர் அனைவரும் பார்த்து மகிழுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை K Mahendran என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2021 அக்டோபர் 30ம் […]

Continue Reading

தாத்தா ஆக வேண்டிய வயதில் தந்தை; ஜெயக்குமார் பற்றி பகிரப்படும் போலிச் செய்தி…

‘’தாத்தா ஆக வேண்டிய வயதில், நான் தந்தையானது என்னவோ உண்மைதான்– ஜெயக்குமார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனைப் பலரும் உண்மை என நம்பி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதைக் கண்டோம். Twitter Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2020ம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில், அப்போதைய ஆளுங்கட்சியை சேர்ந்த சிலருக்கும் தொடர்பிருப்பதாக, […]

Continue Reading

பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரி ரூ.22.54 என நாணயம் விகடன் வெளியிட்ட தகவல் உண்மையா?

பெட்ரோல் மீது மத்திய அரசு ரூ.22.54 வரி விதிப்பதாக நாணயம் விகடன் நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெட்ரோல், டீசல் – மத்திய மாநில அரசின் வரி மற்றும் பங்கீடு என்று நாணயம் விகடன் வெளியிட்டதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பெட்ரோல் மீதான வரிகள் தொடர்பான பகுதியில் மத்திய அரசின் வரி 22.54 […]

Continue Reading

பெட்ரோல், டீசல் வருமானத்தில் ராமர் கோயில், அனுமன் சிலை போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நடப்பதாக வானதி சீனிவாசன் கூறினாரா?

‘’பெட்ரோல், டீசல் வருமானத்தில் மத்திய அரசு ராமர் கோயில், அனுமன் சிலை நிறுவுதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,’’ என்று வானதி சீனிவாசன் பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே நமக்கு அனுப்பி உண்மையா எனக் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் […]

Continue Reading

தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்தடை- தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தாரா?

‘’தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் மின்சாரம் நிறுத்தினால், விருந்தாளிகள் ஊர் திரும்பாமல் திருவிழா தடையின்றி நடைபெறும் என்று தமிழக அரசுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link ஜூனியர் விகடன் லோகோ இணைத்து பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மின்சாரத்தை நிறுத்து! அரசுக்கு வேண்டுகோள். தேர் திருவிழா நடைபெறும் ஊர்களில் காப்புக் கட்டிய […]

Continue Reading

கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டாரா?

கேரள ஆளுநராக எச்.ராஜா நியமிக்கப்பட்டார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா புகைப்படத்துடன் கூடிய பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மகிழ்ச்சி, வாழ்த்துகள், கேரள மாநில ஆளுநராக, ஹெச்.ராஜா நியமனம்…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Veerappan Veerappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 20ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல […]

Continue Reading

கிறிஸ்தவன் கண்டுபிடித்த மின்சாரத்தை இந்துக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

கிறிஸ்தவன் கண்டுபிடித்த மின்சாரத்தை இந்துக்கள் பயன்படுத்தக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவின் கமெண்ட்கள் அனைத்துமே இந்த தகவல் உண்மை போல சித்தரிக்க முயற்சிப்பதைக் கண்டோம். அர்ஜூன் சம்பத் பெயரில் பகிரப்படும் மேற்கண்ட தகவலை பலரும் உண்மை என நம்பி, ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள். […]

Continue Reading

பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

பாக்யராஜ் தொடர்பான அஜால்குஜால் சமாச்சாரங்களை வெளியிடுவேன் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பயில்வான் ரங்கநாதன் புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான்! ஏழு மாதத்தில் பிறந்தவர் பாக்யராஜ் என்று எம்.ஜி.ஆருக்கே தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். […]

Continue Reading

விக்ரமன் பற்றி புதிய தலைமுறை வெளியிட்டதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

ஊடகவியலாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான விக்ரமனை மிக மோசமாக விமர்சித்து புதிய தலைமுறை வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று பிரேக்கிங் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சமூக வலைதளம் வாயிலாக பழகிய ஆண்களை படுக்கைக்கு அழைத்ததாக ஊடக நெறியாளரும் விசிக பிரமூகருமான விக்ரமன் மீது பகிரங்க […]

Continue Reading

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமா?

இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இங்கு உள்ள பெட்ரோல் டிசல் உயர்வு போராளிகளுக்கு சமர்ப்பணம்…..” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Anandakumar என்ற […]

Continue Reading

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் தாக்கப்பட்டதா?- முழு விவரம் இதோ!

‘’தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனத்தை திமுக.,வினர் கல் வீசியும், கொடிக் கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனர்’’, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link பாஜக தமிழ்நாடு எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள இந்த பதிவில், ‘’ தமிழுக்கும், சைவத்துக்கும் பெரும் தொண்டாற்றி வரும் தருமபுரம் ஆதீனத்தின் விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள், திருக்கடையூரில் இருந்து தருமபுரம் ஆதினத்திற்கு […]

Continue Reading

விருது பெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தலையில் இருந்த விக் கழன்றதா?

விருது வாங்கிய விழாவில், நடிகர் விஜய் தலையில் வைத்திருந்த விக் கையோடு கழன்று வந்தது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் விஜய் தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த விருதைக் கழற்றுவது போலவும், அப்போது அவரது தலையில் இருந்து விக் கழன்று, அவர் தலை வழுக்கையாக இருப்பது போன்றும் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

தனியார் மகளிர் விடுதியில் பெண் வேண்டும் என கேட்ட முன்னாள் எம்.பி.,யின் கணவர்? பழைய செய்தியால் சர்ச்சை!

‘’கோவையில் முன்னாள் பெண் எம்பி., ஒருவரின் கணவர் மகளிர் விடுதி நிர்வாகியை தொடர்பு கொண்டு, ஏதேனும் பெண்ணை சப்ளை செய்யும்படி கேட்டுள்ளார். புகாரை ஏற்க போலீஸ் மறுப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இந்த வீடியோவில் உள்ள லோகோவின் அடிப்படையில், இதனை வெளியிட்ட ஆன்லைன் ஊடகத்தின் (Tamil Maalai TV ) பதிவையும் கண்டுபிடித்தோம். ஏராளமான […]

Continue Reading