FACT CHECK: நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்; எதிர்த்தாரா நாராயணன் திருப்பதி?

அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற தி.மு.க அரசின் அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி கண்டித்து ட்வீட் பதிவு வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட ட்வீட் என்றின் ஸ்கிரீன்ஷாட் சமூக […]

Continue Reading

FactCheck: மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு- உண்மை என்ன?

‘’மேற்கு வங்கத்தில் இளம்பெண்ணை தாக்கிய மம்தா பானர்ஜி அரசு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மே 5, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண் ஒருவர் தலையில் ரத்தக் காயமடைந்த நிலையில் அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, மேலே, ‘’ மமதா ஆணவத்துல அழிய போறா… விரைவில்,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

FACT CHECK: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்க்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய காவி படை; உண்மை என்ன?

மேற்கு வங்கத்தில் சூடுசொரணை வந்து களம் இறங்கிய காவி படை என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கையில் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று மக்களை தாக்கும் காலிகள் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “மேற்க்கு வங்கத்தில் சூடுசொரனை வந்து களம் இறங்கிய காவி படை ⛳ இனி தொடரும்….” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை […]

Continue Reading

FactCheck: மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் என்று மோடி கூறினாரா?

‘’மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் – பிரதமர் மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில், ‘’எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் நிச்சயமாகத் திறந்து வைக்கப்படும். முதல்வர் என்ற முறையில் மு.க ஸ்டாலினும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் போகிறார் – பிரதமர் மோடி,’’ என்று எழுதியுள்ளனர். இதனை […]

Continue Reading

FactCheck: பழைய புகைப்படத்தை மாடலாக வைத்து பகிரப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கார்ட்டூன்- உண்மை என்ன?

‘’இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் கார்ட்டூன் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  வயதான பெண்மணி ஆக்சிஜன் சிலிண்டருடன் சாலையில் அமர்ந்திருக்க, அதனைப் பார்த்து, சர்தார் படேல் சிலை தலையில் அடித்துக் கொள்வதைப் போலவும் வரையப்பட்டுள்ள இந்த கார்ட்டூனை, வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் சமூக […]

Continue Reading

FactCheck: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கருணாநிதி ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்தாரா?

‘’சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைத்து தொலைநோக்கு பார்வையில் செயல்பட்டவர் கருணாநிதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு, அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், நாமும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியபோது, இதனை பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

FactCheck: குஜராத்தில் ஆம்புலன்ஸ் வசதி இன்றி தந்தையின் சடலம் சுமந்து சென்ற மகள்கள்- உண்மை என்ன?

‘’குஜராத்தில் ஆம்புலன்ஸ் வசதியின்றி கொரோனா பாதித்து உயிரிழந்த தந்தையின் சடலத்தை கைகளால் சுமந்து செல்லும் மகள்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம்பெண்கள் சடலம் ஒன்றை கதறி அழுதபடி சுமந்துசெல்லும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’குஜராத் மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தன் தந்தையின் பிணத்தை […]

Continue Reading

FactCheck: யோகி ஆதித்யநாத் வருகையின்போது பாஜக வன்முறை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்!

‘’யோகி ஆதித்யநாத் கோவை வந்தபோது பாஜக.,வினர் செய்த வன்முறை அட்டகாசம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  இதில், பாஜக கொடி பிடித்தபடி, பேருந்தை வழிமறித்து வன்முறை செய்யும் சிலரது புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேலே, ‘’ நேற்று கோவையில் பிஜேபியின் அராஜகம். நாளை தமிழகம் முழுவதும் இதுதான் நடக்கும். கவனம் தேவை,’’ […]

Continue Reading

FactCheck: 2013ம் ஆண்டு எடுத்த கும்பமேளா புகைப்படத்தை தற்போது பகிர்வதால் குழப்பம்!

‘’2021 கும்ப மேளா புகைப்படம், மாஸ்க் முகத்திற்கு அணியாமல் கீழே கோவணம் போல அணிந்த இந்தியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், Simi Garewal என்பவர் வெளியிட்ட ட்வீட்டை ஸ்கிரின்ஷாட் எடுத்து, உண்மை போல பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:2021ம் ஆண்டில் கொரோனா வைரஸ் […]

Continue Reading

FactCheck: அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டு வேண்டாம் என்று கோவையில் யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’அசைவம் சாப்பிடுவோரின் ஓட்டுகள் வேண்டாம் – யோகி ஆதித்யநாத்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து, 2 வாரங்கள் முன்பாக, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய முழு விவரத்தை […]

Continue Reading

FACT CHECK: பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடாததால் குழப்பம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் வதந்தி!

தமிழகத்தில் பெயர்களுக்குப் பின்னால் குடும்பப் பெயர் இல்லாததால் நிர்வாகக் குழப்பம் ஏற்படுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு பரவி வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “பெயர்களுக்குப் பின்னால் குடும்பப் பெயர் இல்லாமல் இருப்பது தமிழகத்தில் மட்டுமே. […]

Continue Reading

FactCheck: தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி சாப்பிடுவோருக்கு சிறை தண்டனை – யோகி ஆதித்யநாத்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், நாம் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FactCheck: பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி…

‘’பிராமணர் தவிர மற்றவர்களின் ஓட்டு தேவையில்லை – எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: […]

Continue Reading

FactCheck: கோவை வன்முறை சம்பவத்தை ஆதரித்து அமித் ஷா பேசினாரா?

‘’கோவை வன்முறை சம்பவத்தை ஆதரித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,’’ எனும் தலைப்பில் பரவும் செய்தி ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ஏப்ரல் 2, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் கூடிய நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்தை […]

Continue Reading

FactCheck: செந்தில் பாலாஜி பற்றி பேசியதை பாஜக அண்ணாமலை மறுத்தாரா?

‘’பாஜக கரூர் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி பற்றி பேசியதை மறுத்தார்,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதனை […]

Continue Reading

FACT CHECK: தமிழகத்தின் பெயரை மாற்ற சம்மதித்த பழனிசாமிக்கு யோகி ஆதித்யநாத் நன்றி கூறினாரா?

தமிழகத்தின் பெயரை தக்‌ஷிணபிரதேஷ் என்று மாற்ற சம்மதித்த எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். அதில், “உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் பரப்புரை. தமிழகத்தின் […]

Continue Reading

FactCheck: தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினாரா?

‘’தமிழ்ப் பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலேயே இருக்கும்படி யோகி ஆதித்யநாத் கூறினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த நியூஸ் கார்டை, வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேசம் போல சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதாக மோடி கூறினாரா?

தமிழ்நாட்டை உத்தரப் பிரதேசம் போல சிறந்த மாநிலமாக மாற்ற பாஜக – அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார் என்பது உள்ளிட்ட சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டுள்ளன. அதில், “தமிழ்நாட்டை உத்திர பிரதேசம் போல சிறந்த மாநிலமாக […]

Continue Reading

FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?

கோவையில் உடைக்கப்பட்டவை தேச துரோகிகளுடைய கடைகள்தான் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வானதி ஶ்ரீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய Simplicity.in என்ற இணைய ஊடகத்தின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உடைக்கப்பட்டவை தேசதுரோகிகளுடைய கடைகள்தான். யோகிஜியை வரவேற்க இதை கூட செய்யாமல் இருந்தால்தான் தவறு – வானதி ஶ்ரீனிவாசன்” என்று […]

Continue Reading

FACT CHECK: மொழி மற்றும் தமிழக கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பற்றி யோகி ஆதித்யநாத் பேசியதாக பரவும் வதந்திகள்!

தமிழக கோவிலின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்றும் மொழியில் இருந்து பழக்க வழக்கம் வரை மாறுதல் தேவை என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாக போலி நியூஸ் கார்டுகள் வைரலாக பரவி வருகின்றன. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட முதல் நியூஸ் கார்டில், “கோவையில் உ.பி முதல்வர் […]

Continue Reading

FACT CHECK: 234 தொகுதியிலும் நானே வேட்பாளர் என நினைத்து வாக்களிக்கும்படி மோடி கேட்டாரா?

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதியிலும் நானே வேட்பாளர் என்று நினைத்து வாக்கு செலுத்துங்கள் என்று பிரதமர் மோடி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தாராபுரத்தில் பிரதமர் மோடி பரப்புரை! 234 தொகுதியிலும் நானே வேட்பாளர் என்று […]

Continue Reading

FactCheck: எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் கூறியதாகப் பரவும் வதந்தி

‘’எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் பற்றி கே.டி.ராகவன் விமர்சனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, அங்கேயும் இதனை பலர் உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FactCheck: பாஜக முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பற்றி பரவும் வதந்தி!

பட்டியல் சமூக பெண்கள் பற்றி மிகவும் இழிவாகப் பேசிய பாஜக பெண் நிர்வாகி, என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link இதில், பாஜக.,வைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர், ‘’பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் அணிவதுதான் துணி விலை உயர்கிறது,’’ என்று குறிப்பிட்டு பேசுகிறார். சில விநாடிகள் […]

Continue Reading

FactCheck: சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக கூறியதா?

‘’சென்னை, காஞ்சிபுரம், திருச்சி பெயரை மாற்றுவோம் என்று பாஜக வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் நமக்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை நகைச்சுவைக்காகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடனும் பகிர்ந்து வருவதைக் கண்டோம்.  Facebook Claim Link […]

Continue Reading

FactCheck: கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.50 லட்சம் தருவோம் என்று பாஜக கூறவில்லை!

‘’கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், ‘’ஹரியானா மாநிலம் போல் தமிழகத்திலும் கலப்புத் திருமணம் செய்வோருக்கு ரூ.2.50 லட்சம், பாஜக மோடி அரசு வழங்கும்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என்று நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

FactCheck: கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடையா?- பாஜக கூறியதாகப் பரவும் வதந்தி

‘’கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் […]

Continue Reading

FactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்ததா?

‘’தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவோம்- பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FactCheck: பாஜக தலைவர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தினாரா சீமான்?- முழு விவரம் இதோ!

‘’பாஜக தலைவர்களுடன் சீமான் ரகசிய சந்திப்பு,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதன் தலைப்பை வைத்து, கூகுளில் நாமும் தகவல் தேடினோம். அப்போது, அந்த செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டதும், பின்னர் டெலிட் செய்துவிட்டதையும் கண்டோம். ஆனால், தினகரன் […]

Continue Reading

FactCheck: பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’பாஜக.,விற்கு வாக்களிக்க வேண்டாம் – ரஜினிகாந்த்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நியூஸ்7 தமிழ் ஊடகத்தின் லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ராணுவ வீரர்கள், மக்கள் என யாரையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ஆகவே சிந்தித்து வாக்களியுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் […]

Continue Reading

FactCheck: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் சிறுவனை தாக்கிய பாஜக நபர்; உண்மை என்ன?

‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கிய பாஜக நபர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஏற்கனவே பகிரப்பட்ட பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து, இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’பாஜக ஆளும் காஜியாபாத்தில் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் நுழைந்த முஸ்லீம் […]

Continue Reading

FactCheck: மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகப் பரவும் வதந்தி

‘’மத்தியப் பிரதேசத்தில் கிறிஸ்தவ பெண் உயிருடன் எரித்துக் கொலை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இளம்பெண் ஒருவரை பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, சராமரியாக தாக்குவதோடு, அவரை சாலை நடுவே கீழே தள்ளி, உயிருடன் நெருப்பு வைத்து எரிக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு பதைபதைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆனால், இதனை சமூக வலைதளங்களில் பகிர்வோர் இது, மத்தியப் பிரதேசத்தில், கிறிஸ்தவ […]

Continue Reading

FACT CHECK: வெறிபிடிக்காமல் இருக்க தடுப்பூசி போட்டேன் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் போலி ட்வீட்!

வெறி பிடிக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்று எச்.ராஜா ட்வீட் பதிவு வெளியிட்டதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எச்.ராஜா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்துடன் கூடிய எச்.ராஜா வெளியிட்ட ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “வெறி பிடிக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேன்” என்று இருந்தது. இந்த பதிவை சொம்புதூக்கி டவுசர்பாய்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மார்ச் 9 அன்று […]

Continue Reading

FACT CHECK: அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று வானதி கூறியதாக பரவும் பழைய வீடியோ!

அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று பா.ஜ.க வானதி ஶ்ரீனிவாசன் பேசியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 வானதி ஶ்ரீனிவாசன் பேசும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற வகையில் பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி ஶ்ரீனிவாசன் பேசுகிறார். நிலைத் தகவலில், “அதிமுக […]

Continue Reading

FactCheck: பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று எல்.முருகன் கேட்டாரா?

‘’மு.க.ஸ்டாலினை பார்த்து, பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று கேட்ட எல்.முருகன்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில், News J ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ள நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக இந்துக்களின் தாயான பசுவிற்கு வழங்கத் தயாரா – […]

Continue Reading

FactCheck: தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற காங்கிரஸ் முயற்சியா?- குலாம் நபி ஆசாத் பெயரில் வதந்தி!

‘’தாஜ்மஹாலை விபச்சார விடுதியாக மாற்ற நினைத்தது காங்கிரஸ் – குலாம்நபி ஆசாத்,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். எனவே, நாம் இதுபற்றி தகவல் தேட தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட நியூஸ் கார்டு புதிய தலைமுறை பெயரில் பகிரப்பட்டுள்ளது. அதில், ‘’தாஜ்மஹாலை […]

Continue Reading

FACT CHECK: சாக்கடைத் திட்டத்தை தொடங்கி வைத்தபோது உடைந்து விழுந்த பா.ஜ.க பெண் எம்.பி; உண்மை என்ன?

குஜராத்தில் பா.ஜ.க பெண் எம்.பி கழிவுநீர் கால்வாய் திட்டத்தை திறந்து வைத்த போது, அந்த கால்வாய் தளம் இடிந்து விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பெண் ஒருவர் பொது மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று சரிந்து கீழே வாய்க்கால் ஒன்றுக்குள் விழும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

FACT CHECK: சாவர்க்கர் 50 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தாரா?

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சாவர்க்கர் புகைப்படத்துடன் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 26 பிப்ரவரி 1966 “இந்தியாவிலேயே.. சுதந்திரத்திற்காகப் போராடி 50 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே தலைவர் வீர சாவர்க்கர் நினைவு தினம் இன்று” என்று […]

Continue Reading

FACT CHECK: யோகி வருகைக்காக கேரளாவில் பா.ஜ.க தொண்டர்கள் உருவாக்கிய தாமரை படமா இது?

தேர்தல் பிரசாரத்துக்காக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேரளா வந்த போது, தொண்டர்கள் தாமரை சின்னத்தை உருவாக்கினர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஆயிரக் கணக்கான பா.ஜ.க தொண்டர்கள் இணைந்து மேலிருந்து பார்க்கும் போது பா.ஜ.க-வின் தாமரை சின்னம் தெரிவது போன்ற நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் யோகி ஜியின் வருகையால் மக்கள் […]

Continue Reading

FACT CHECK: கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை என நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு!

கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிப்ரவரி 13, 2021 அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படத்துடன் வெளியான பாலிமர் தொலைக்காட்சி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நான் ஹோட்டலில் சாப்பிடுவதால், கேஸ் விலை உயர்வு பற்றி கவலை இல்லை […]

Continue Reading

FactCheck: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் பற்றி பாஜக அண்ணாமலை கருத்து தெரிவித்தாரா?

‘’பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று- பாஜக அண்ணாமலை,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தந்தி டிவி லோகோ கொண்டுள்ள நியூஸ் கார்டில், ‘’பொள்ளாச்சி பாலியல் சம்பவம் முடிந்துவிட்ட ஒன்று. இனி அதைப் பற்றி பேசி ஒரு பயனுமில்லை – பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading

FactCheck: போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படுமா?

‘’போக்குவரத்து அபராதம் செலுத்தத் தவறினால் ரேஷன் கார்டு தடை செய்யப்படும்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link பிப்ரவரி 8, 2021 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில் ஒரு நீண்ட கருத்தை பகிர்ந்துள்ளனர். அதன் சுருக்கம் என்னவெனில், ‘’போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், அந்த இடத்தில் உடனே அபராதம் கட்ட முடியாது. ஈ-சலான் […]

Continue Reading

FactCheck: பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் எச்.ராஜா பேசினாரா?

‘’பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசிய எச்.ராஜா,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link 1 Archived Link 2 இதில், எச்ச ராஜா திமிர் பேச்சு என்று கூறி நியூஸ்18 தமிழ்நாடு பெயரில் வெளியான வீடியோ காட்சியை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’பள்ளனும், பறையனும் கோயிலுக்குள் நுழையக் கூடாது. அப்படி நடந்தால், சூத்திரன் […]

Continue Reading

FactCheck: திமுக முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு பாஜகவில் இணைந்தாரா?

‘’திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பாஜக.,வில் இணைந்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் பலரும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Screenshot: various FB posts with same […]

Continue Reading

FactCheck: ராமரின் இந்தியாவில் அதிகம்… சீதையின் நேபாளம், ராவணனின் இலங்கையில் குறைவு… சுப்ரமணியன் சுவாமியின் தவறான ஒப்பீடு!

‘’நேபாளம், இலங்கையை விட இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம்,’’ என்று சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட ட்வீட்டை மேற்கோள் காட்டி பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், சன் நியூஸ் வெளியிட்ட டெம்ப்ளேட் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட […]

Continue Reading

FactCheck: அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் என்று மோடி பெயரில் பகிரப்படும் வதந்தி!

‘’சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்ட நபர் மோடி,’’ என்ற பெயரில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதனை உண்மையில் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டதா, என ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link புதிய தலைமுறை லோகோ வைத்து பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’சமூக வலைதளங்களில் அதிகம் கேலி செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

FactCheck: சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டதாகப் பரவும் வதந்தி…

‘’சசிகலாவை வரவேற்று ஓபிஎஸ் ட்வீட் வெளியிட்டுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ட்வீட் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் பகிரப்பட்டுள்ள ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். அதில், ‘’மதிப்பிற்குரிய சின்னமா முழுமையாக குணமடைந்து கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றி, மத்திய பா.ஜ.க அரசிடம் சீக்கித் தவிக்கும் அதிமுகவை மீட்க […]

Continue Reading

FactCheck: கேஜிஎஃப் நடிகர் யாஷ் பாஜகவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தாரா?- முழு விவரம் இதோ!

‘’கேஜிஎஃப் நடிகர் யாஷ், பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்தவர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 பாஜக ஆதரவாளர்கள் மட்டுமின்றி, பாஜக எதிர்ப்பாளர்கள் என்ற பாரபட்சம் இன்றி இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து […]

Continue Reading

FactCheck: முதல்வர் பதவிக்கு தயார் என்று எச்.ராஜா பேசியதாகப் பரவும் வதந்தி!

‘’முதல்வர் பதவிக்கு தயார் – எச்.ராஜா,’’ என்று எச்.ராஜா பேசியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், எச்.ராஜா பெயரை குறிப்பிட்டு ஐபிசி தமிழ் ஊடகம் வெளியிட்டதைப் போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாட்டில் தற்போது சட்டமன்ற தேர்தல் நேரம் […]

Continue Reading

FactCheck: பிராமணர் – பள்ளர் திருமண உறவு தேவை என்று குருமூர்த்தி கூறினாரா?

‘’பார்ப்பனர்களும், தேவேந்திர குலத்தவரும் திருமண உறவு வைத்துக் கொள்ள வேண்டும்,’’ என்று அரசியல் விமர்சகர் குருமூர்த்தி பேசியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜனவரி 5, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், குருமூர்த்தியின் புகைப்படம் பகிர்ந்து, ‘’பிராமணர் – பள்ளர் திருமண உறவு வேண்டும்: குருமூர்த்தி வேண்டுகோள்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை […]

Continue Reading

FactCheck: பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் கூறினாரா?

‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம்- பாஜக தலைவர் எல்.முருகன்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில், பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் – பாஜக தலைவர் எல்.முருகன்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் […]

Continue Reading