FACT CHECK: சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறினாரா?- போலி நியூஸ் கார்டு!

தி.மு.க-வை வீழ்த்த சசிகலா காலில் விழத் தயார் என்று குருமூர்த்தி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுகவை வீழ்த்த நான் சசிகலா காலில் விழத் தயார்! – குருமூர்த்தி, துக்ளக் ஆசிரியர்” என்று இருந்தது. இந்த பதிவை தி […]

Continue Reading

FactCheck: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான நபர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாரா?

‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக மீது பெரும் சர்ச்சை நிலவுகிறது. […]

Continue Reading

FACT CHECK: தைப்பூசம் விடுமுறையை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறினாரா?

தி.மு.க வெற்றி பெற்றால் தைப்பூச திருநாள் அரசு விடுமுறை ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக வெற்றி பெற்றால் தைப்பூசத் திருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று உள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

FactCheck: 2500 உடன் 1500 கூட்டினால் ரூ.5000 என்று மு.க.ஸ்டாலின் பேசினாரா?

‘’2500, 1500 கூட்டினால் ரூ.5000 வரும் என்று உளறிய மு.க.ஸ்டாலின்,’’ எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’பொங்கல் பரிசாக அதிமுக அரசு ரூ.2500 அறிவித்துள்ளது. இதனுடன் மேலும் ஒரு ரூ.1500 சேர்த்து , ரூ.5000 ஆக வழங்கிட வேண்டும்,’’ என்று பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. […]

Continue Reading

FactCheck: நாடார் சமுதாய வாக்குகள் தேவையில்லை என்று கனிமொழி கூறினாரா?

‘’நாடார் சமுதாய வாக்குகளை நம்பி நான் போட்டியிடவில்லை,’’ என்று கனிமொழி பேசியதாகக் கூறி நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link நியூஸ்18 தமிழ்நாடு லோகோவுடன் பகிரப்படும் இந்த நியூஸ் கார்டில், ‘’நாடார் சமுதாய வாக்குகளை நம்பி நான் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை. கனிமொழி ஆவேசம்,’’ என தலைப்பில் கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் பகிரப்பட்டுள்ள இந்த […]

Continue Reading

FactCheck: இது தயாநிதி மாறனின் கார் அல்ல!

‘’தயாநிதி மாறனின் காரை பாமகவினர் சேலத்தில் தாக்கிய புகைப்படம்,’’ எனக் கூறி பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 இந்த ஃபேஸ்புக் பதிவில், தயாநிதி மாறனின் புகைப்படங்களையும், கார் ஒன்று தாக்கப்பட்டது போன்ற புகைப்படத்தையும் இணைத்து, அதன் மேலே, ‘’ தரமான சம்பவம் 🔥🔥 1 1/2கோடி பென்ஸ் காரை உடைத்து… […]

Continue Reading

FactCheck: தருமபுரம் ஆதீனம் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் விமர்சித்தாரா?

‘’தருமபுரம் ஆதீனத்தை விமர்சனம் செய்த நாராயணன் திருப்பதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த ஃபேஸ்புக் பதிவில், தருமபுரம் ஆதீனத்தை, பிராமணர்கள் வணங்கி வரவேற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் பிராமணர்களுக்கு […]

Continue Reading

FactCheck: தருமபுரி தொகுதி எம்.பி செந்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முடி வெட்டியதாக பரவும் வதந்தி

‘’மு.க.ஸ்டாலினுக்கு முடி வெட்டிய தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் செந்தில்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் பரபரப்பு நிலவுகிறது. இதையொட்டி, திமுக, அதிமுக கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க-வுக்கு வாக்களிக்கச் சொன்ன எடப்பாடி பழனிசாமி?- ஃபேஸ்புக் வதந்தி

பொங்கல் பரிசு வாங்கிய கையோடு சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும். பொங்கல் […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம் என்று கூறி பகிரப்படும் அதிமுக.,வினர் படம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தி.மு.க நடத்திய உண்ணாவிரதத்தின் போது தொண்டர்கள் உணவு சாப்பிட்ட காட்சி என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பான ஆய்வை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் உணவு உட்கொள்ளும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தி.மு.கவின் உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றி, வெற்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ந.முத்துராமலிங்கம் என்பவர் 2020 டிசம்பர் 18ம் […]

Continue Reading

FactCheck: செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம் பற்றி பரவும் வதந்தி

‘’பனிமலர் பன்னீர்செல்வம் உடன் கண்ணா பாண்டியன் காதல்,’’ எனும் தலைப்பில் பரவும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதேபோல, இன்னொரு புகைப்படமும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: இது பார்க்கும்போதே, உண்மையில்லை, […]

Continue Reading

ஊட்டி மலை ரயில் சர்ச்சை; நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் போலிச் செய்தி!

‘’நிர்மலா சீதாராமன் ஊட்டி மலை ரயில் டிக்கெட் விலை உயர்வு பற்றி விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: மேற்கண்ட செய்தியை நமது வாசகர்கள் சிலர், வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். எனவே, இந்த செய்தியை ஃபேஸ்புக்கில் வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது, ஃபேஸ்புக் வாசகர்கள் […]

Continue Reading

Rapid FactCheck: ராமநாதபுரத்தில் தலித் சிறுவர்கள் சித்ரவதையா?- பழைய புகைப்படம்!

‘’ராமநாதபுரத்தில் பிஸ்கட் திருடியதால் தலித் சிறுவர்களை கட்டிப் போட்டு மொட்டையடித்து சித்ரவதை செய்த சாதி வெறியர்கள்,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  நமது வாசகர்கள் சிலர், மேற்கண்ட தகவலை வாட்ஸ்ஆப் வழியே, நம்மிடம் அனுப்பி சந்தேகம் கேட்டனர். இதனை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில், ராமநாதபுரத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை எனக் கூறி பலரும் ஷேர் செய்வதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு […]

Continue Reading

இந்திய வானிலை ஆய்வு மையம் நிவர் புயலின்போது இந்தியில் மட்டுமே ட்வீட் வெளியிட்டதா?

‘’இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியில் நிவர் புயல் தொடர்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இந்திய வானிலை நிலையம், ஏன் தமிழகத்தை தாக்கும் புயலுக்கு, இந்தியில் விளக்கம் அளிக்க வேண்டும்? இந்த புயலை […]

Continue Reading

FactCheck: எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி

‘’நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்தார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த செய்தியை நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக, வாசகர்கள் பலரும் சந்தேகம் கேட்கவே, நாமும் ஃபேஸ்புக்கில் யாரும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, பலரும் இதனை ஷேர் செய்வதை கண்டதன் […]

Continue Reading

FactCheck: வைகோ பற்றி மோகன் சி லாசரஸ் பேச்சு- பழைய வீடியோவும், உண்மையும்!

‘’வைகோ பற்றியும், அவரது மகன், மகள் பற்றியும் உண்மையை போட்டுடைத்த மோகன் சி. லாசரஸ்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், மோகன் சி லாசரஸ், ‘’வைகோவின் குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர். அவர் தினசரி என்னிடம் பைபிள் படித்து, பிரார்த்தனை செய்வது எப்படி என ஃபோனில் கேட்பார். அரசியல் […]

Continue Reading

FACT CHECK: மோகன் சி லாசரஸ் பிரசார கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றாரா?

கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் நடத்திய நிகழ்ச்சியில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் பிரசாரம் செய்கிறார். அதை தி.மு.க தலைவராக இருந்த மு.கருணாநிதி, தற்போது தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், கனிமொழி, […]

Continue Reading

FACT CHECK: ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் உண்மையா?

ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறப்பு விழா ஒன்றில் ரிப்பன் வெட்டும் புகைப்படத்தையும், போராட்டம் நடத்தும் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் செயல் தலைவர் அன்று. தான் திறந்த ஆலைக்கு […]

Continue Reading

FactCheck: பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா?

‘’பசும்பொன்னில் திருநீற்றை கீழே கொட்டியது என்னுடைய கொள்கை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் இதனை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட நியூஸ் […]

Continue Reading

FactCheck: இந்திரா காந்தி காலில் விழுந்தாரா கருணாநிதி?- முழு விவரம் இதோ!

‘’இந்திரா காந்தி காலில் விழுந்த கருணாநிதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 13, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மறைந்த கருணாநிதி, பெண்மணி ஒருவருக்கு மாலை அணிவித்த பின், அவரது காலில் விழுந்து வணங்குவதைக் காண முடிகிறது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளதா?

‘’உதயநிதி ஸ்டாலின் தலைக்கு மேல், திருடர்கள் ஜாக்கிரதை என எழுதப்பட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 26, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், உதயநிதி ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அவரது தலைக்கு மேலே, ‘’திருடர்கள் ஜாக்கிரதை,’’ என்ற வாசகம் உள்ளது. […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் வன்னியர் மக்களை விமர்சித்தார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’மு.க.ஸ்டாலின் வன்னியர் மக்களை விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 17, 2020 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’வன்னியர்களுக்கு என்ன நடந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றி துளியும் கவலை இல்லை. – மு.க.ஸ்டாலின்,’’ என […]

Continue Reading

FACT CHECK: தேவேந்திரகுல வேளாளர் ஓட்டு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அக்டோபர் 12, 2020 அன்று ஸ்டாலின் படத்துடன் வெளியான சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக கூட்டணி பலமான கூட்டணி. தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை. அவர்கள் ஓட்டுப்போட்டு நான் முதல்வராக வேண்டிய […]

Continue Reading

FACT CHECK: கி.வீரமணி கவலைக்கிடமான நிலையில் உள்ளாரா?

‘’கி.வீரமணி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 12, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, ‘’கி.வீரமணி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம். அரோ கரா!!,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா?- தந்தி டிவி பெயரில் வதந்தி!

‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி,’’ என்ற பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி வைத்து, உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வெளியிடும்படி தெரிவித்தார். இதன்பேரில் இதனை வாட்ஸ்ஆப் தவிர ஃபேஸ்புக் போன்ற பிற சமூக வலைதளத்தில் வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது பலர் […]

Continue Reading

திமுக பற்றி பகிரப்படும் எடிட் செய்யப்பட்ட போஸ்டர்!

‘’என்றும் எதிர்க்கட்சி தலைவராக தளபதி ஸ்டாலின்,’’ என்று கூறி பகிரப்படும் திமுக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், ‘’என்றும் எதிர்க்கட்சி தலைவராக தளபதி அவர்கள் தான் என்பது மக்கள் முடிவு செய்துள்ளனர். சு. சண்முகம். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்,’’ என எழுதியுள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி […]

Continue Reading

இந்தியை எதிர்த்து கடுமையாக போராடிய ஸ்டாலின் என்று பகிரப்படும் வீடியோ… உண்மை அறிவோம்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வங்க மொழி பேசும் வீடியோவை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “திமுக தலைவர் #இந்தியை எதிர்த்து கடுமையாக #போராடிய தருணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை […]

Continue Reading

திமுக தலைவராக வருவேன் என்று கனிமொழி சொன்னதாகப் பரவும் வதந்தி

‘’திமுக தலைவராக பொறுப்பேற்பேன்,’’ என்று கனிமொழி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’தலைவர் ஸ்டாலின் மறைவுக்குப் பின் நான்தான் திமுக தலைவராக பொறுப்பேற்பேன் – கனிமொழி,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் பற்றி பகிரப்படும் பழைய செய்தி!

‘’மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறினார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 11, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், மு.க.ஸ்டாலின் பற்றி புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, சன் டிவி, மாறன் சகோதரர்களின் சொத்து விவரம் உள்ளிட்டவற்றை பற்றியும் விமர்சித்து […]

Continue Reading

ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழி நீக்கமா? திருச்சி சிவா, நிர்மலா சீதாராமன் பற்றி பரவும் வதந்தி

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம்-களில் பிராந்திய மொழிகளை நீக்க உத்தரவிட்டதாக திருச்சி சிவா கூறினார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தி.மு.க மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா ஆகியோர் புகைப்படங்களுடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு போட்டுக்கொண்ட திமுக. ஆதாரம் கேட்ட நிதியமைச்சர் – முக்காடு […]

Continue Reading

பெரியார் பல்கலைக் கழகத்தில் பி.ஏ இந்தி கற்றுத் தரப்படுவதாக பரவும் வதந்தி!

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பிஏ இந்தி கற்றுத் தரப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சேலம் தந்தை பெரியார் பல்கலைக் கழக லோகோவுடன் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், வழங்கப்படும் பாடங்கள் என்ற தலைப்பின் கீழ் பி.ஏ இந்தி என்று இருந்தது. நிலைத் தகவலில், “ஹிந்தி வேண்டான்னு இப்போ எதுக்குடா சண்டை போடுறீங்க காசு கொடுத்தா பெரியார் பல்கலைக் […]

Continue Reading

உருது மொழி கற்றால் அரசு வேலை தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கற்பவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படும், என்று ஸ்டாலின் கூறியதாக பரவி வரும் செய்தி பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்தால் உருது மொழி கற்பவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிக்கும் – மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த பதிவை RSS தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

1953, மே மாதம் 11-ந் தேதி வெளியான விடுதலை நாளேட்டில் காமம் பற்றி பெரியார் எழுதினாரா?

‘’காமத்தை அடக்கவில்லை எனில் உன் தாய், மகளிடம் அதை தீர்த்துக் கொள்,’’ என்று பெரியார் கூறியதாக, ஒரு தகவல் நீண்ட நாளாக ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், பெரியார் திருமணக் கோலத்தில் நடந்து வரும் புகைப்படம் ஒன்றையும், அதன் மேலே, அவர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’காமத்தை அடக்க முடியவில்லை என்றால் உன் […]

Continue Reading

2021-ல் முதல்வர் ஆகாவிட்டால் கைலாசா சென்றுவிடுவேன் என்று ஸ்டாலின் கூறினாரா?

“2020ல் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன்” – என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, தந்தி டி.வி பெயரில் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில் “2021ல் நான் முதல்வர் ஆகவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்குச் சென்றுவிடுவேன் – மு க ஸ்டாலின் ஆவேசம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, எச்.ராஜாவை மாமா என்று கூறினாரா?

‘’எச். ராஜாவை மாமா என்றுதான் அழைப்பேன் – அண்ணாமலை,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதே தகவலை பலரும் உண்மை போல பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:  கர்நாடகாவைச் சேர்ந்த அண்ணாமலை என்ற முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, ஆகஸ்ட் 25, 2020 அன்று பாஜகவில் இணைந்தார்.  இந்நிலையில், அவரை பற்றி விமர்சித்து […]

Continue Reading

‘நியூஸ் 18’ பிரபலம் செந்தில் பற்றி பரவும் போலியான ட்வீட்!

‘’நியூஸ் 18 பிரபலம் செந்தில், மாரிதாஸ் பற்றி வெளியிட்ட ட்வீட்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 18, 2020 அன்று வெளியிடப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், நியூஸ் 18 செந்தில் புகைப்படம் மற்றும் அவரது பெயரில் உள்ள ட்விட்டர் ஐடி ஒன்று பகிர்ந்த பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறாரா?- உண்மை இதோ!

‘’இந்த முஸ்லீம் பெண் விநாயகர் சிலை வாங்குகிறார்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், முஸ்லீம் பெண் ஒருவர் விநாயகர் சிலை விற்கும் இடத்தில் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ எப்போ விநாயகர் சதுர்த்தி வந்தாலும் இப்படி ஒரு பாயம்மா பிள்ளையார் செலவாங்க போறாங்க என்று போட்டோ போடும் சங்கிகளே. ஒரு நாளாவது […]

Continue Reading

முதல்வர் ஆகும் தகுதி கனிமொழிக்கு உண்டு என்று வைகோ கூறவில்லை!

தி.மு.க முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி கனிமொழிக்கு உண்டு என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ட்விட்டரில் யாரோ வெளியிட்ட புதிய தலைமுறை நியூஸ் கார்டுடனான பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “கனிமொழி பன்முக ஆற்றல் கொண்டவர். அவருக்கு திமுக முதல்வர் வேட்பாளர் ஆகும் தகுதி உண்டு […]

Continue Reading

உதய சூரியன் சின்னத்துடன் கன்றுக்குட்டி?- இது தமிழ் நாட்டைச் சேர்ந்ததா?

‘’கன்றுக்குட்டி ஒன்றின் உடலில் உதய சூரியன் சின்னத்தை வரைந்த திமுகவினர்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலர் திமுகவுடன் தொடர்புபடுத்தி கமெண்ட் பகிர்வதால், இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.  உண்மை அறிவோம்:இந்த பதிவில் கூறியுள்ள தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் தகவல் தேடியபோது, இதேபோல மேலும் சிலர் […]

Continue Reading

யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவினாரா கருணாநிதி?

‘’யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்ட சில நாட்களில் அண்ணா நூலகம் நிறுவிய கருணாநிதி,’’ என்று கூறி பகிரபப்டும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ சீதைக்கு போட்டியாக கண்ணகி சிலை! விவேகானந்தர் மண்டபத்திற்கு நிகராக வள்ளுவர் சிலை! இந்து முன்னனியினர் மராட்டிய மன்னன் சிவாஜியிற்கு மார்கெட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜராஜ சோழனுக்கு […]

Continue Reading

மீத்தேன் திட்டத்தை தொடங்கியது திமுக.,தான் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாரா?

‘’மீத்தேன் திட்டம் தொடர்பாக திமுக மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:மேற்குறிப்பிட்ட செய்தியை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் தகவல் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, நிறைய பேர் இந்த தகவலை கடந்த 2019ம் ஆண்டு முதலாக ஷேர் செய்யும் விவரம் தெரியவந்தது. Facebook Claim […]

Continue Reading

ரஜினிக்குப் பயந்து மு.க.ஸ்டாலின் வணக்கம் வைத்ததாக பரவும் வதந்தி…

‘’ரஜினிகாந்துக்கு பயந்து வணக்கம் வைத்த மு.க.ஸ்டாலின்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ரஜினிகாந்தின் புகைப்படத்தை பார்த்து, மு.க.ஸ்டாலின் வணங்குகிறார் என்பதைப் போல தகவல் இடம்பெற்றுள்ளது. இது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், இதில் உள்ள கமெண்ட்களை பார்க்கும்போது, ‘’ரஜினியை பார்த்து ஸ்டாலின் பயந்துவிட்டார்; ஸ்டாலின் ஒரு மக்கு,’’ என்பன போன்ற கருத்துகள் […]

Continue Reading

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததா?

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தி.மு.க மனு கொடுத்ததாக ஒரு பதிவு வாட்ஸ்அப்-ல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் அதை சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று நம்முடைய வாசகர் கேட்டதன் அடிப்படையில் ஆய்வு நடத்தினோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 avatarnews.in Archived link 2 தி.மு.க எம்.பி கனிமொழி படத்துடன் செய்தி இணைப்பு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் லெட்டர் பேடு ஒன்றும் உள்ளது. பார்க்கும்போது தி.மு.க […]

Continue Reading

ஊடகங்கள் நடுநிலை தவறி நடக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் போலி ட்வீட்!

ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிபடுகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று வாசகர்கள் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஸ்டாலின் ட்வீட் செய்தது போன்ற ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “சில நாட்களாக சமூக வலைதளங்களில், ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக பேச்சு அடிப்படுகிறது. இந்நிலையில் தமிழ் நாட்டிலேயே கலைஞர் தொலைக்காட்சி […]

Continue Reading

கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு திமுக உதவும் என்று மு.க.ஸ்டாலின் கூறவில்லை!

‘’கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு திமுக உதவி செய்யும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் புதிய தலைமுறை லோகோவுடன், நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதில், கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனலுக்கு ‘திமுக தேவையான சட்ட உதவிகளை வழங்கும்,’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என […]

Continue Reading

Fact Check: பெரியார் புகைப்படத்தை வைத்து பகிரப்படும் விஷமத்தனமான தகவல்!

மகளைத் தொட்டிலிலும், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய தலைவர் பெரியார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குழந்தையுடன் பெரியார் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அதில், “மகளை தொட்டிலிலும் பின், கட்டிலிலும் போட்டு தாலாட்டிய ஒரே தலைவன்டா எங்க பெரியார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை ‎பாஜக இளைஞர் அணி – தமிழ்நாடு BJYM TamilNadu என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் திருமணம் பற்றி பகிரப்படும் வதந்திகளும், உண்மையும்!

‘’மு.க.ஸ்டாலின் திருமணத்திற்கு காமராஜர் வந்ததாகக் கூறப்படும் பொய்ச் செய்தி,’’ என்று கூறி பரவும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 ‘’காமராஜர் பிறந்தது 1975, அக்டோபர் 2ம் தேதி; மு.க.ஸ்டாலின் திருமணம் செய்தது அக்டோபர் 20, 1975,’’ என்று தகவல் பகிரப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்ப தொடங்கியுள்ளனர். […]

Continue Reading

சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை; அவரது கள்ள துப்பாக்கிதான் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை, அவரது கள்ள துப்பாக்கிதான்,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இந்த நியூஸ் கார்டை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, சந்தேகம் எழுப்பியிருந்தனர். எனவே, இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை பகிர்வதை கண்டோம். Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim […]

Continue Reading

திமுகவினரை மதிக்காத உதயநிதி ஸ்டாலினின் மகன் என்று கூறி பரவும் வதந்தி!

‘’திமுகவினரை மதிக்காத உதய நிதி ஸ்டாலின் மகன்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link இதில், திமுக அலுவலகம் போல இருக்கும் ஒரு அறையில், சிறுவன் நாற்காலியில் அமர்ந்திருக்க, வயதான நபர்கள் சிலர் நின்றிருப்பதைப் போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். ‘’இதுதான் உதயநிதி ஸ்டாலின் மகன் கட்சியினருடன் ஆலோசனை நடத்தும் காட்சி,’’ என்று கூறி பகிர்ந்து […]

Continue Reading

எஸ்பிஐ விசாரிக்கும்படி மு.க.ஸ்டாலின் கேட்டதாகப் பரவும் வதந்தி!

‘’சாத்தான்குளம் விவகாரத்தில் எஸ்பிஐ விசாரிக்க வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாகக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ‘’சாத்தான்குளம் விவகாரத்தில் தமிழக அரசு SBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,’’ என்று மு.க.ஸ்டாலின் கேட்டதாக, இதில் தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட செய்தி பார்ப்பதற்கு, எதோ ஒரு […]

Continue Reading