FACT CHECK: பத்திரிகையாளர் செந்தில் பெயரில் பரவும் போலி ட்வீட்!

ஒன்றிய அரசை மிரட்டிய ஸ்டாலின் என்று பத்திரிகையாளர் செந்தில் ட்வீட் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பத்திரிகையாளர் செந்தில் வெளியிட்டது போன்ற ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் தேர்வு,குடியுரிமை சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய பிரதமருக்கு கட்டளை பிறப்பித்து அதிரடி அஸ்திரம் காட்டியிருக்கிறார்.. மிரட்டிய முத்துவேல் கருணாநிதி, […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலினுக்காக மோடி அனுப்பிய குண்டு துளைக்காத கார் என்று பரவும் தகவல் உண்மையா?

டெல்லி சென்ற ஸ்டாலினை அழைத்து வர தன்னுடைய குண்டு துளைக்காத காரை பிரதமர் மோடி அனுப்பினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் பயன்படுத்தும் கார் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஆளுமைமிக்க_தலைவனுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் கிடைக்கும் அடிமைகளுக்கு அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தளபதி மனோஜ் என்பவர் 2021 ஜூன் 16ம் […]

Continue Reading

FACT CHECK: ரேஷன் பொருட்கள் பெற தகுதியானவர்கள் யார் என்று அறிவிப்பு வெளியிட்டாரா மு.க.ஸ்டாலின்?

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரேஷன் பொருட்கள் பெறுவது தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டது என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட “உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் வெளியீடு” என்ற செய்தியை புகைப்படமாக எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும் ரேஷன் பொருட்கள் இல்லை – தமிழக அரசு”, […]

Continue Reading

FACT CHECK: மக்களின் வாழ்வை விட டாஸ்மாக் முக்கியமா என்று நடிகர் செந்தில் கேள்வி கேட்டாரா?

மக்களின் வாழ்க்கையை விட டாஸ்மாக் முக்கியமா என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் செந்தில் கேள்வி எழுப்பியதாக ஒரு ட்வீட் பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive காமெடி நடிகர் செந்தில் பெயரில் ட்விட்டர் பதிவு வெளியாகி உள்ளது. அதில், “மக்களின் வாழ்க்கையை விட டாஸ்மாக் முக்கியமா? தயவுசெய்து டாஸ்மாக்கை மூடிவிட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற மு.க.ஸ்டாலின் […]

Continue Reading

FactCheck: மதுரை விமான நிலையத்தின் பெயரை மாற்ற கோரி மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினாரா?

‘’மதுரை விமான நிலையத்திற்கு வரும் டிசம்பர் மாதம் பெயர் மாற்றப்படும். இதுபற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, ஒரு செய்தி, ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FACT CHECK: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு பயன்படுத்தவில்லையா?

செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்துக்கு மத்திய அரசு ரூ.600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் தொடங்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “600 கோடி கொடுத்தும் மாநில அரசு பணியைத் துவங்கவில்லை. செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்திற்கு மத்திய அரசு 600 கோடி முதலீடு […]

Continue Reading

FactCheck: கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்த முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?- முழு விவரம் இதோ!

‘’கொரோனா நோயாளிகளை கவச உடை அணிந்து முதலில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதே போல, மேலும் பலர், மு.க.ஸ்டாலின்தான், கவச உடையணிந்து, இந்தியாவிலேயே கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட முதல் முதலமைச்சர் என்று கூறி தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா […]

Continue Reading

FACT CHECK: ஐ.சி.எஃப் பணிகளுக்கு வட மாநிலத்தவர் விண்ணப்பிக்க அனுமதி இல்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

ஐ.சி.எஃப் ரயில்வே பணிகளுக்கு வட இந்தியர்கள் விண்ணப்பிக்க அனுமதியில்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தினத்தந்தியில் வெளியான செய்தி ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஐ.சி.எப். ரெயில்வே பணி: வடமாநிலத்தவர்கள் விண்ணப்பிக்க அனுமதி இல்லை. தமிழக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்ய முடிவு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நிலைத் […]

Continue Reading

FACT CHECK: #GoBackStalin டிரெண்ட் சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறல் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

கோ பேக் ஸ்டாலின் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிராண்ட் ஆவதை சமாளிக்க முடியாமல் தி.மு.க திணறல் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அளவில் முதலாவதாக டிரெண்டாகும் ஸ்டாலினுக்கு எதிரான #GoBackStalin ஹேஷ்டேக். உலகிலேயே முதன்முறையாக […]

Continue Reading

FACT CHECK: கொரோனா வார்டில் ஆய்வு… மோடி – ஸ்டாலின் படத்தை ஒப்பிட்டு விஷமத்தனம்!

கொரோனா வார்டில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ததற்கு இடையே உள்ள வேறுபாடு என்று இரண்டு படங்களை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவு பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி பேசும் புகைப்படம் மற்றும் கோவையில் கொரோனா வார்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Continue Reading

FACT CHECK: கச்சத்தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கூறினாரா?

கச்சத் தீவு நிர்வாக அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள்! கச்சத்தீவு […]

Continue Reading

FACT CHECK: எடப்பாடி பழனிசாமி அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது அழகல்ல என்று ஸ்டாலின் கூறினாரா?

முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு வீட்டை காலி செய்ய மறுப்பது பழனிசாமிக்கு அழகல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  அசல் பதிவைக் காண: Facebook I Archive முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “முதல்வர் பதவியை விட்டு மக்கள் துரத்திய பின்னும் அரசு […]

Continue Reading

FACT CHECK: கோவை மருத்துவமனையின் அவல நிலை என்று பகிரப்படும் மேற்கு வங்க புகைப்படம்!

கோவை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உரிய படுக்கை வசதி இல்லாத நிலையில் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை பார்க்காமல் காலியாக உள்ள மருத்துவமனை படுக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive படுக்கை வசதி இன்றி மருத்துவமனையில் மக்கள் அவதியுறும் படம் ஒன்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் படுக்கை வசதிகளை ஆய்வு […]

Continue Reading

FACT CHECK: தளர்வுகள் அற்ற ஊரடங்கையொட்டி வெளியூர் செல்ல அனுமதி அளித்த போது கோயம்பேட்டில் கூடிய கூட்டமா இது?

தமிழக அரசு ஐந்து நாட்களுக்குத் தளர்வுகள் அற்ற ஊரடங்கை அறிவித்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது கோயம்பேட்டில் கூடிய கூட்டம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பஸ் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்ல […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் திறந்து வைத்தது பிணக்கிடங்கா? – விஷம பதிவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிணக் கிடங்கைத் திறந்து வைத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சி ஒன்றை, மு.க.ஸ்டாலின் கொரோனா சிகிச்சை கூடுதல் படுக்கை வசதியை திறந்து வைக்கும் படத்துடன் சேர்த்து பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்ன காலகொடுமைடா சாமி அரசில் வரலாற்றில்….. ஒரு முதல்வர் பிணக்கிடங்கை திறப்பது இதுவே […]

Continue Reading

FactCheck: நடிகர் அஜித் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.2.50 கோடி வழங்கியதாக பரவும் வதந்தி

‘’நடிகர் அஜித் ரூ.2.50 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கினார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், தமிழ் முன்னணி ஊடகங்கள் பலவும் வெளியிட்ட செய்திகளை இணைத்து, அதன் மேலே, கொரோனா நிவாரண நிதிக்காக, தமிழக அரசிடம் ரூ.2.50 கோடி வழங்கிய நடிகர் அஜித் என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைப் […]

Continue Reading

FactCheck: நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பிய இணையதளம்!

‘’நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ ஆகியோர் கொரோனா பாதித்து 2021ல் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்த தமிழ் சினிமா பிரபலங்கள் என்று தலைப்பிட்டுள்ளனர்.  Tn365news.com Link  Archived Link  […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் உடல்நலம் மேம்பட வீட்டில் சிறப்பு யாகம் நடத்தினாரா? உண்மை இதோ!

‘’உடல்நலம் மேம்படுவதற்காக, தனது வீட்டில் பிராமணர்களை வைத்து சிறப்பு யாகம் நடத்திய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மு.க.ஸ்டாலினை பிராமணர்கள் சந்தித்து, மரியாதை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’தமிழக முதல்வரின் உடல்நலன் மேம்பட அவரது இல்லத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் இருந்து வந்த ரூ.2.50 கோடி மதிப்புள்ள கேக்?- உண்மை இதோ!

‘’மு.க.ஸ்டாலின் ஆர்டர் செய்து, துபாயில் இருந்து பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு சென்னை வந்தடைந்த ரூ.2.50 மதிப்புள்ள கேக்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:தமிழ்நாடு முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7, 2021 அன்று பதவியேற்றுக் கொண்டார். […]

Continue Reading

FACT CHECK: தமிழர்களை கோயில் செல்லாமல் தடுத்துவிட்டு கிறிஸ்தவ ஆலயத்துக்கு வந்த ஸ்டாலின்!- விஷம பதிவு

இந்து கோவிலுக்கு செல்லாத மு.க.ஸ்டாலின் கிறிஸ்தவ ஆலயத்துக்கு மட்டும் சென்றார் என்ற வகையில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைலராக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ ஆலயத்தில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மாண்புமிகு தமிழக முதல்வர் , சென்னை அண்ணாநகரில் உள்ள தூய லூக்கா ஆலயத்திற்கு வருகை தந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். டேய் இந்து […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலினை வாழ்த்துவது போல விமர்சித்தாரா கவுண்டமணி?- போலி ட்வீட்டால் சர்ச்சை

‘’மு.க.ஸ்டாலினை விமர்சித்த நடிகர் கவுண்டமணி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், நடிகர் கவுண்டமணி பெயரில் வெளியிடப்பட்ட ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’கவுண்டர் உள்குத்து வச்சுத்தான் வாழ்த்து சொல்றாரு,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்ட ட்வீட்டில், ‘’தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் @mkstalin முன்பு செய்த […]

Continue Reading

FactCheck: மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் என்று மோடி கூறினாரா?

‘’மதுரை எய்ம்ஸ் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பங்கேற்பார் – பிரதமர் மோடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட நியூஸ் கார்டில், ‘’எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் நிச்சயமாகத் திறந்து வைக்கப்படும். முதல்வர் என்ற முறையில் மு.க ஸ்டாலினும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் போகிறார் – பிரதமர் மோடி,’’ என்று எழுதியுள்ளனர். இதனை […]

Continue Reading

FactCheck: எடப்பாடி பழனிசாமிக்கு சாபம் விட்டாரா ஆ.ராசா?- வைரலாக பரவும் வதந்தி!

‘’எடப்பாடி நீ மோசமா சாவ,’’ என்று ஆ.ராசா சாபம் விட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த செய்தியை நமது வாசகர்கள் சிலர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இது உண்மை என நம்பி ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook […]

Continue Reading

FactCheck: அரசியல் தேவைக்காக மு.க.ஸ்டாலினை ஜக்கி வாசுதேவ் சந்தித்தாரா?

‘’ஜக்கி வாசுதேவ் ரகசியமாக மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இந்த செய்தியை வாசகர் ஒருவர் நமக்கு, வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பியிருந்தார். இதனை மேற்கொண்டு, ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்வு செய்துள்ளனரா என தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: தற்போதைய அரசியல் சூழலில், […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணமா?- முழு விவரம் இதோ!

‘’மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் 2021 வாக்குப் பதிவு நடைபெற்ற வேளையில், அதற்கு முன்பாக, திடீரென மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை – மருமகன் சபரீசன் ஆகியோருக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் […]

Continue Reading

FACT CHECK: குறிப்பிட்ட சாதியினர் வாக்கு வேண்டாம் என்று ஸ்டாலின், ஓ.பி.எஸ் கூறியதாக பரவும் வதந்தி!

முக்குலத்தோர், நாயுடு உள்ளிட்ட சாதியினர் வாக்கு தனக்கு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாக நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ் கார்டில், “முக்குலத்தோர், […]

Continue Reading

FACT CHECK: வாக்கு பதிவு இயந்திரத்தை சரி பார்க்க முதலில் இரட்டை இலைக்கு வாக்களிக்க ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி!

வாக்கு எந்திரத்தில் மோசடி செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் இரட்டை இலைக்கு வாக்களித்துப் பரிசோதித்து பார்த்த பிறகு தி.மு.க-வுக்கு வாக்களிக்க மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வாக்கு எந்திரத்தில் மோசடி செய்துவிடுவார்கள் என்பதால் முதலில் இரட்டை இலைக்கு வாக்களித்து சத்தம் வருகிறதா என்று […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீடு பற்றி மு.க. ஸ்டாலின் கூறியதாக நியூஸ்18 தமிழ் பெயரில் பரவும் வதந்தி!

மயிலாப்பூரில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த உடன் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று கூறினார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 18 தமிழ்நாடு நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக ஆட்சிக்கு வந்த உடன் வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் மகள் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டதா?

ஸ்டாலின் மகள் வீட்டில் இருந்து கட்டக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தந்தி டிவி-யில் செய்தி வெளியானதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 தந்தி டிவி-யில் வெளியான செய்தி வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனை” என்று இருந்தது. மேலும் […]

Continue Reading

FactCheck: சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதன்படி, திமுக ஆட்சிக்கு அமைந்ததும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதைப் போல மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஸ்கிரின்ஷாட் உறுதிப்படுத்துகிறது. […]

Continue Reading

FACT CHECK: அனிதா பெயரில் நீட் தேர்வு மையம் தொடங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தாரா?

அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நேரடி ஒளிபரப்பு காட்சியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். அதில், “ஸ்டாலின் பரப்புரை. அனிதா பெயரில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் – ஸ்டாலின்” என்று இருந்தது. நிலைத் தகவலில், “திமுக […]

Continue Reading

FactCheck: அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்ததா?

‘’அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, அனுமதியின்றி கட்டப்பட்ட இந்து கோயில்களை இடித்துவிட்டு, கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கப்படும் என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குறுதி அளித்துள்ளதா என்று, நமக்கு நெருங்கிய ஊடக […]

Continue Reading

FACT CHECK: அம்மா உணவகத்தில் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டதாக பரவும் படம் உண்மையா?

அம்மா உணவத்தில் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் அம்மா உணவகத்தில் உணவு உட்கொள்வது வேறு ஒருவர் போட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். ஸ்டாலின் தலைக்கு மேல் அம்மா உணவகம் என்று போர்டு உள்ளது. அந்த ஸ்கிரீன் ஷாட்டில், “பசி வந்தால் பத்தும் பறந்து போகும் பகையும் மறந்து போகும்” என்று உள்ளது.   […]

Continue Reading

FACT CHECK: தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?– வைரல் வதந்தி

தி.மு.க வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட சீட் வழங்கப்படவில்லை என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சினிமா காட்சி ஒன்றின் புகைப்படத்தில் ஸ்டாலின் இருப்பது போல மாற்றி எடிட் செய்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “திமுக போட்டியிடும் 173 தொகுதியில் ஒரு சீட் கூட இஸ்லாமியர் சமுதாயத்திற்கு இல்லையா?? அப்புறம் என்ன இது […]

Continue Reading

FACT CHECK: வன்னியர் உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவிகித உள் […]

Continue Reading

FactCheck: பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று எல்.முருகன் கேட்டாரா?

‘’மு.க.ஸ்டாலினை பார்த்து, பசுக்களுக்கு உரிமைத் தொகை வழங்கத் தயாரா என்று கேட்ட எல்.முருகன்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாக பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  இதில், News J ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ள நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’குடும்பத் தலைவிக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கு பதிலாக இந்துக்களின் தாயான பசுவிற்கு வழங்கத் தயாரா – […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் நெசவு செய்வது போல் போஸ் கொடுத்த இடத்தில் ஜெயலலிதா படம் இருந்ததா?- ஃபோட்டோஷாப் ஜாலம்

ஸ்டாலின் நெசவு செய்வது போல் போஸ் கொடுத்த இடத்தில் ஜெயலலிதா படம் இருந்தது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் கைத்தறி செய்வது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைக்கு மேல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இருப்பதாக வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்துக்கு மேல், “நல்லா வேஷம் போடுற. ஆனா, மண்டைக்கு மேல […]

Continue Reading

FactCheck: கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய திமுக.,வினர்; உண்மை என்ன?

‘’கரூரில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்திய எதிர்க்கட்சியினர்,’’ என்று கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவதைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link பிப்ரவரி 26, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ இன்று அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தமாம். கரூரில் பொறுப்பாக போராட்டத்தை அஹிம்சை முறையில் வலியுறுத்திய எதிர்க்கட்சியினர். 1965 இந்தி போராட்டத்தின்போது கரூரில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை […]

Continue Reading

FactCheck: இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாக பரவும் வதந்தி…

‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்துக்கள் ஓட்டு வேண்டாம் என்று கூறினார்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், புதிய தலைமுறை பெயரில் ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’இந்துக்கள் ஓட்டு போட்டுதான் வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற அவசியம்யில்லை – திமுக தலைவர் ஸ்டாலின்,’’ என்று […]

Continue Reading

FACT CHECK: பெட்டிக் கடை பாக்கி தள்ளுபடி என அறிவிப்பு!– நையாண்டி என்று கூட தெரியாமல் பரவும் போலிச் செய்தி!

பெட்டிக் கடையில் வைத்திருந்த டீ, வடை, சிகரெட் பாக்கி தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததாக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்வோம் என்று அதே அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டதாக போலியான நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. உண்மை அறிவோம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive I Archive 2 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், […]

Continue Reading

FACT CHECK: சேட்டுக் கடைகளில் வைத்துள்ள நகைக் கடன் தள்ளுபடி என்று ஸ்டாலின் கூறவில்லை!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் மட்டுமல்ல, சேட்டுக் கடைகளில் உள்ள நகைக் கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு போலியான நியூஸ் கார்டு வைரலாக பரவி வருகிறது. தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 2021 பிப்ரவரி 8ம் தேதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் புகைப்படத்துடன் வெளியான புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் மட்டும் அல்ல முத்துட், […]

Continue Reading

FactCheck: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான நபர் மு.க.ஸ்டாலினை சந்தித்தாரா?

‘’பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 உண்மை அறிவோம்:தமிழ்நாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியாக உள்ள அதிமுக மீது பெரும் சர்ச்சை நிலவுகிறது. […]

Continue Reading

FACT CHECK: தைப்பூசம் விடுமுறையை ரத்து செய்வோம் என்று ஸ்டாலின் கூறினாரா?

தி.மு.க வெற்றி பெற்றால் தைப்பூச திருநாள் அரசு விடுமுறை ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக வெற்றி பெற்றால் தைப்பூசத் திருநாள் விடுமுறை ரத்து செய்யப்படும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்” என்று உள்ளது. நிலைத் தகவலில், […]

Continue Reading

FactCheck: 2500 உடன் 1500 கூட்டினால் ரூ.5000 என்று மு.க.ஸ்டாலின் பேசினாரா?

‘’2500, 1500 கூட்டினால் ரூ.5000 வரும் என்று உளறிய மு.க.ஸ்டாலின்,’’ எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’பொங்கல் பரிசாக அதிமுக அரசு ரூ.2500 அறிவித்துள்ளது. இதனுடன் மேலும் ஒரு ரூ.1500 சேர்த்து , ரூ.5000 ஆக வழங்கிட வேண்டும்,’’ என்று பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. […]

Continue Reading

FactCheck: தருமபுரி தொகுதி எம்.பி செந்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முடி வெட்டியதாக பரவும் வதந்தி

‘’மு.க.ஸ்டாலினுக்கு முடி வெட்டிய தருமபுரி மக்களவை தொகுதி உறுப்பினர் செந்தில்,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் பரபரப்பு நிலவுகிறது. இதையொட்டி, திமுக, அதிமுக கட்சிகள் பிரசாரத்தை தொடங்கியுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. […]

Continue Reading

FACT CHECK: ஸ்டெர்லைட் ஆலை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று பகிரப்படும் படம் உண்மையா?

ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறப்பு விழா ஒன்றில் ரிப்பன் வெட்டும் புகைப்படத்தையும், போராட்டம் நடத்தும் புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் செயல் தலைவர் அன்று. தான் திறந்த ஆலைக்கு […]

Continue Reading

FACT CHECK: ஸ்டாலின் விபூதி விவகாரம்- தமிழன் பிரசன்னா பெயரில் பரவும் போலி ட்வீட்!

ஸ்டாலின் விபூதி விவகாரம் தொடர்பாக தி.மு.க பேச்சாளர் தமிழன் பிரசன்னா வெளியிட்ட ட்வீட் என்று ஒரு பதிவு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளராக உள்ள வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா ட்வீட் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “விபூதியை நெற்றியில் பூசினால் தான் ஓட்டு […]

Continue Reading

FactCheck: பசும்பொன்னில் நடந்தது பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தாரா?

‘’பசும்பொன்னில் திருநீற்றை கீழே கொட்டியது என்னுடைய கொள்கை,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக, பகிரப்படும் செய்தியின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ சாட்பாட் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் யாரேனும் இதனை பகிர்ந்துள்ளனரா என்று தகவல் தேடினோம். அப்போது, பலரும் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட நியூஸ் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் வன்னியர் மக்களை விமர்சித்தார் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’மு.க.ஸ்டாலின் வன்னியர் மக்களை விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 17, 2020 அன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய தலைமுறை பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’வன்னியர்களுக்கு என்ன நடந்தாலும் எங்களுக்கு அதைப் பற்றி துளியும் கவலை இல்லை. – மு.க.ஸ்டாலின்,’’ என […]

Continue Reading

FACT CHECK: தேவேந்திரகுல வேளாளர் ஓட்டு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு தி.மு.க-வுக்கு தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive அக்டோபர் 12, 2020 அன்று ஸ்டாலின் படத்துடன் வெளியான சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக கூட்டணி பலமான கூட்டணி. தேவேந்திரகுல வேளாளர்கள் ஓட்டு திமுகவிற்கு தேவையில்லை. அவர்கள் ஓட்டுப்போட்டு நான் முதல்வராக வேண்டிய […]

Continue Reading