FactCheck: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்?- மெக்சிகோவில் எடுத்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்…

‘’பேராணம்பட்டு பகுதியில் மழை, வெள்ளத்தில் பசு மாடுகள் அடித்துச் செல்லப்படும் வீடியோ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளச்சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலையாக மாறியுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் […]

Continue Reading

FactCheck: குதிரன் சுரங்கப்பாதை திறப்பு- கோவையில் இருந்து திருச்சூர் செல்ல 10 நிமிடம் போதுமா?

‘’குதிரன் சுரங்கப்பாதை திறக்கப்பட்டுவிட்டதால், இனி கோவையில் இருந்து திருச்சூர் செல்ல 10 நிமிடம் போதும்,’’ என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’ கோயம்புத்தூர்-திருச்சூர் சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. 2 மணி நேரப் பயணம் இப்போது 10 நிமிடம். இந்திய அரசின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நன்றி. இது போன்ற செய்திகளை எந்த ஊடகமும் பேசாது, இங்குள்ள […]

Continue Reading

FactCheck: ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகிறதா?

‘’ஜெராக்ஸ் கடைகளில் பொதுமக்களின் அடையாள விவரங்கள் திருடப்படுகின்றன,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:ஜெராக்ஸ் கடைகளில் நாம், ஸ்கேன் செய்யவோ அல்லது ஜெராக்ஸ் எடுக்கவோ தரக்கூடிய ஆவணங்களை நமக்குத் தெரியாமல், நகல் எடுத்து, காசுக்காக சமூக விரோதிகளுக்கு விற்கிறார்கள் எனும் அர்த்தத்தில் மேற்கண்ட வீடியோ பரப்பப்படுகிறது. ஆனால், இது […]

Continue Reading

FactCheck: ஹெல்மெட் போடாத பொதுமக்களை போலீசார் கேள்வி கேட்கக்கூடாது என்று முதல்வர் அறிவித்தாரா?

‘’தலைக்கவசம் அணிவது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கூடாது,’’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

FactCheck: ஜெயலலிதா கையில் குற்றவாளி என எழுதப்பட்ட போஸ்டர்- உண்மை என்ன?

‘’ஜெயலலிதா கையில் குற்றவாளி என எழுதப்பட்ட போஸ்டர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும தகவல் தேடியபோது பலரும் இதனை உண்மை என நம்பி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கடந்த 2013ம் ஆண்டு காவிரி நடுவர் […]

Continue Reading

FactCheck: பாஜக.,வினர் காசு கொடுத்து புகைப்படம் எடுக்கலாம் என்று தலித் வீட்டில் எழுதப்பட்டதா?

‘’தலித் வீட்டில் பாஜகவினர் சாப்பிட வரலாம், புகைப்படம், வீடியோ எடுக்க கட்டணம் ரூ.500,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இவர்கள் பகிரும் புகைப்படம் உண்மையில் […]

Continue Reading

FactCheck: ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம்?- நாம் தமிழர் கட்சி பெயரில் பரவும் வதந்தி…

‘’ஆட்டோ சங்கருக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் போஸ்டர் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என விளக்கம் கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ட்விட்டர், ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதைக் கண்டோம். Tweet Link 1 I Tweet Link […]

Continue Reading

FactCheck: பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர பழனிவேல் தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தாரா?

‘’பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எதிர்த்தார்,’’ என்று கூறி நியூஸ்7 தமிழ் பெயரில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதை காண நேரிட்டது. Facebook Claim Link I Archived […]

Continue Reading

FactCheck: தமிழ்நாட்டில் 74 சுங்கச்சாவடிகள் உள்ளதாக மீண்டும் பகிரப்படும் வதந்தி…

‘’கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மட்டும் வித்தியாசமாக நாட்டிலேயே அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ‘’5,381 கிமீ தொலைவு நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 74 டோல்கேட்கள் உள்ளன. கேரளாவுடன் ஒப்பிடுகையில் 9 டோல்கேட்களும், மகாராஷ்டிராவுடன் ஒப்பிடுகையில் 15 டோல்கேட்களும் இருக்க வேண்டும்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook […]

Continue Reading

FactCheck: பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்?

‘’பணி நியமன ஆணை பெற்றதும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அர்ச்சகர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், குறிப்பிட்ட ட்வீட் லிங்கை தேடிப் பிடித்தோம். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. Tweet Link I Archived […]

Continue Reading

FactCheck: கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி என்று பகிரப்படும் வதந்தி!

‘’கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நகைச்சுவைக்காக பகிரப்பட்டுள்ள இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆபாசமாக வீடியோ கால் செய்த விவகாரம் காரணமாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், அவரது பதவியை ராஜினாமா செய்தார். […]

Continue Reading

FactCheck: அர்ச்சகர் பயிற்சி மையத்தின் அவலநிலை?- பழைய புகைப்படத்தால் சர்ச்சை…

‘’திமுக ஆட்சியில் அர்க்கர் பயிற்சி நிலையத்தின் அவல நிலை ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049044263 என்ற நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்படி, பாஜக.,வைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர், ட்விட்டரில், தமிழக அரசின் லெவலே தனிதான் போங்க, என்று குறிப்பிட்டு, மதுரையில் உள்ள அர்ச்சகர் பயிற்சி […]

Continue Reading

FactCheck: ஒரு வீட்டில் ஒருவருக்கு மட்டுமே அரசுப் பணி?- ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை என பகிரப்படும் வதந்தி…

‘’ஒரு வீட்டில் கணவன் அல்லது மனைவி என யாரேனும் ஒருவர் மட்டுமே இனி அரசுப் பணியில் நீடிக்க முடியும்- திமுக அதிரடி நடவடிக்கை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே ( ) அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் […]

Continue Reading

FactCheck: அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன்- ரஜினிகாந்த்,’’ எனக் கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

FactCheck: ஹெச்டிஎப்சி வங்கி 2021ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை இல்லை என்று கூறியதா?

‘’ஹெச்டிஎப்சி வங்கி 2021ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க மறுக்கிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இந்த விளம்பர புகைப்படத்தை வாசகர் ஒருவர் என்ற நமது +91 9049053770 வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில் தகவல் தேடியபோது, ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link  உண்மை அறிவோம்:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, […]

Continue Reading

FactCheck: இந்த புகைப்படம் கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்டதில்லை!

‘’கோவை கே.ஜி.சினிமாஸ் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம், சீட்டுக்குப் பதிலாக படுக்கைகள் நிறுவியுள்ளனர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் கூட பலரும் இதனை உண்மை என நம்பி, கருத்து பகிர்வதைக் கண்டோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, அது ஸ்விட்சர்லாந்தில் உள்ள […]

Continue Reading

FactCheck: யாருப்பா அந்த பெயிண்டர்?- உண்மை தெரியாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

‘’நெடுஞ்சாலையில் கோடு போட்டவர் சரியாகப் போடவில்லை,’’ என்று கூறி இணையதளத்தில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது +91 9049053770 வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, ஏராளமானோர் இந்த விவகாரம் பற்றி செய்தி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை […]

Continue Reading

FactCheck: கொங்கு நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை?- நியூஸ்7 தமிழ் செய்தியை தவறாக புரிந்துகொண்டதால் குழப்பம்!

‘’கொங்கு நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலை – நியூஸ் 7 தமிழ் செய்தி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட தகவலை, நியூஸ்7 தமிழ் டிவியின் ஆசிரியர் குழுவினர் நமக்கு அனுப்பி, ‘’நாங்கள் வெளியிட்ட செய்தியை சிலர் தவறாக புரிந்துகொண்டு, இது நாங்களே உருவாக்கிய டெம்ப்ளேட் போன்று குறிப்பிட்டு, தவறான […]

Continue Reading

FactCheck: கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?

‘’கொங்கு நாடு உருவாக்கப்படும் என்று புதிய தலைமுறை செய்தி வெளியீடு,‘’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மைத்தன்மை பற்றி ஆராயும்படி கேட்டுக் கொண்டிருந்தார். இதன்பேரில் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived […]

Continue Reading

FactCheck: உலகிலேயே அதிகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட நாடு இந்தியாவா?

‘’கொரோனா வைரஸ் போடப்பட்ட நாடுகளில் இந்தியா உலகளவில் முதலிடம்,’’ என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர்கள் சிலர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணில் அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர்.  இதே தகவலை, பலரும் ஃபேஸ்புக்கில் உண்மை என நம்பி பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:இந்தியா புதிய மைல்கல் எட்டியது, என்று கூறி, […]

Continue Reading

FactCheck: நண்பன் விரும்பியபடி அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்- உண்மை என்ன?

‘’நண்பனின் விருப்பப்படி, அவனது இறுதிச்சடங்கில் இளையராஜா பாட்டு பாடிய நண்பர்கள்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், சடலம் ஒன்றின் முன்பாக, இளையராஜா இசையில் வெளிவந்த சினிமா பாடல் ஒன்றை கிடார் இசைத்தப்படி பாடும் காட்சி அடங்கிய வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதன் தலைப்பில், ‘’ இளையராஜா பாடலோடு இறுதி மரியாதை செய்யக் […]

Continue Reading

FactCheck: நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ இறந்துவிட்டதாகச் செய்தி வெளியிட்டு வாசகர்களை குழப்பிய இணையதளம்!

‘’நடிகர்கள் ரகுமான், செல்வா மற்றும் ஸ்ரீ ஆகியோர் கொரோனா பாதித்து 2021ல் மரணம்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களின் வழியே காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், இணையதளம் ஒன்றில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்த தமிழ் சினிமா பிரபலங்கள் என்று தலைப்பிட்டுள்ளனர்.  Tn365news.com Link  Archived Link  […]

Continue Reading

FactCheck: மு.க.ஸ்டாலின் உடல்நலம் மேம்பட வீட்டில் சிறப்பு யாகம் நடத்தினாரா? உண்மை இதோ!

‘’உடல்நலம் மேம்படுவதற்காக, தனது வீட்டில் பிராமணர்களை வைத்து சிறப்பு யாகம் நடத்திய மு.க.ஸ்டாலின்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், மு.க.ஸ்டாலினை பிராமணர்கள் சந்தித்து, மரியாதை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன் மேலே, ‘’தமிழக முதல்வரின் உடல்நலன் மேம்பட அவரது இல்லத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

FactCheck: இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்?- வதந்தியால் சர்ச்சை…

‘’இந்து என்.ராம் உண்மையான பெயர் நூர் ராமாதீன்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேடியபோது, பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim Link […]

Continue Reading

FactCheck: சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

‘’சாதி ரீதியான உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதன்படி, திமுக ஆட்சிக்கு அமைந்ததும் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும், என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதைப் போல மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள ஸ்கிரின்ஷாட் உறுதிப்படுத்துகிறது. […]

Continue Reading

FactCheck: அடிக்கல் நாட்டியதும் கம்பி நீட்டினாரா கனிமொழி?- முழு உண்மை இதோ!

‘’காயல்பட்டணம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க, நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டிய கனிமொழி பிறகு கம்பி நீட்டிவிட்டார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட இதர சமூக […]

Continue Reading

FactCheck: அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்ததா?

‘’அனுமதியின்றி கட்டிய இந்து கோயில்களை இடிப்போம் என்று திமுக வாக்குறுதி,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளதுபோல, அனுமதியின்றி கட்டப்பட்ட இந்து கோயில்களை இடித்துவிட்டு, கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கப்படும் என்று திமுக 2021 சட்டமன்ற தேர்தலுக்கு வாக்குறுதி அளித்துள்ளதா என்று, நமக்கு நெருங்கிய ஊடக […]

Continue Reading

FactCheck: கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடையா?- பாஜக கூறியதாகப் பரவும் வதந்தி

‘’கோயில்களில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட தகவலை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.  இதன்பேரில் நாமும் ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, பலரும் இதனை உண்மை என்று நம்பி ஷேர் செய்து வருவதைக் […]

Continue Reading

FactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவதாக பாஜக வாக்குறுதி அளித்ததா?

‘’தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என்று மாற்றுவோம்- பாஜக வாக்குறுதி,’’ எனும் பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் தகவல் தேடியபோது ஃபேஸ்புக்கில் பலரும் இதனை ஷேர் செய்து வருவதைக் கண்டோம். Facebook Claim […]

Continue Reading

FactCheck: கொரோனா ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறதா?- புதிய தலைமுறை பெயரில் பரவும் வதந்தி

‘’கொரோனா ஊரடங்கு நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிப்பு,’’ என்று கூறி புதிய தலைமுறை பெயரில் பரவும் செய்தியை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link ‘’தமிழ்நாட்டில் நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் திடீர் பரபரப்பாக மேற்கண்ட செய்தி பகிரப்பட்டு […]

Continue Reading

FactCheck: திருப்பதி வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் பொம்மை என்று கனிமொழி கூறினாரா?

‘’திருப்பதி வெங்கடாஜலபதி ஒரு கருங்கல் பொம்மை என்று கனிமொழி விமர்சனம்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை வாசகர் ஒருவர், நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) எண்ணிற்கு அனுப்பி, இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Facebook Claim Link 1 […]

Continue Reading

FactCheck: பெண்களுக்கு பெரியார் 1951-ல் சொன்ன அறிவுரை என்று கூறி பகிரப்படும் வதந்தி…

‘’05.12.1951 அன்று குடியரசு நாளிதழில் பெரியார் பெண்களுக்கு சொன்ன அறிவுரை,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவு உண்மையா, என்று சிலர் சந்தேகம் கேட்க, இதனை பகிர்ந்தவர் உண்மைதான் என்று ஆமோதித்து கமெண்ட் பகிர்ந்துள்ளதையும் காண முடிகிறது. இது தவிர, இன்னொரு ஃபேஸ்புக் வாசகர் இந்த பதிவுக்கான ஆதாரம் என்று கூறி […]

Continue Reading

FactCheck: பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் கூறினாரா?

‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம்- பாஜக தலைவர் எல்.முருகன்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில், பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் – பாஜக தலைவர் எல்.முருகன்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் […]

Continue Reading

FactCheck: இது தயாநிதி மாறனின் கார் அல்ல!

‘’தயாநிதி மாறனின் காரை பாமகவினர் சேலத்தில் தாக்கிய புகைப்படம்,’’ எனக் கூறி பகிரப்பட்டு வரும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 இந்த ஃபேஸ்புக் பதிவில், தயாநிதி மாறனின் புகைப்படங்களையும், கார் ஒன்று தாக்கப்பட்டது போன்ற புகைப்படத்தையும் இணைத்து, அதன் மேலே, ‘’ தரமான சம்பவம் 🔥🔥 1 1/2கோடி பென்ஸ் காரை உடைத்து… […]

Continue Reading

FactCheck: தருமபுரம் ஆதீனம் பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் விமர்சித்தாரா?

‘’தருமபுரம் ஆதீனத்தை விமர்சனம் செய்த நாராயணன் திருப்பதி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த ஃபேஸ்புக் பதிவில், தருமபுரம் ஆதீனத்தை, பிராமணர்கள் வணங்கி வரவேற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் பிராமணர்களுக்கு […]

Continue Reading

Fact Check: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓட்டு கேட்டு சென்றபோது இளைஞர்கள் கேலி கிண்டல்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   குறிப்பிட்ட நியூஸ் கார்டை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் (+91 9049053770) டிப்லைன் வழியே அனுப்பி, நம்மிடம் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும் கேட்டுக் கொண்டார்.  புதிய தலைமுறை லோகோவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், சீமான் தேர்தல் […]

Continue Reading

Rapid FactCheck: ராமநாதபுரத்தில் தலித் சிறுவர்கள் சித்ரவதையா?- பழைய புகைப்படம்!

‘’ராமநாதபுரத்தில் பிஸ்கட் திருடியதால் தலித் சிறுவர்களை கட்டிப் போட்டு மொட்டையடித்து சித்ரவதை செய்த சாதி வெறியர்கள்,’’ என்ற தலைப்பில் வாட்ஸ்ஆப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  நமது வாசகர்கள் சிலர், மேற்கண்ட தகவலை வாட்ஸ்ஆப் வழியே, நம்மிடம் அனுப்பி சந்தேகம் கேட்டனர். இதனை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பில், ராமநாதபுரத்தில் நிகழ்ந்த சாதிக் கொடுமை எனக் கூறி பலரும் ஷேர் செய்வதாகவும், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு […]

Continue Reading

தீபாவளி தினத்தில் இறைச்சி சாப்பிடுவோர் இந்து அல்ல என்று எச்.ராஜா சொன்னாரா?

‘’தீபாவளி அன்று மாமிசம் சாப்பிடுவோர் ஹிந்துக்கள் அல்ல என்று எச்.ராஜா விமர்சனம்,’’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  மேற்கண்ட தகவலை நமது வாசகர் ஒருவர், வாட்ஸ்ஆப் மூலமாக, அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடினோம். அப்போது, பலரும் இதனை பகிர்ந்து வரும் விவரம் கிடைத்தது.  Facebook Claim Link 1 […]

Continue Reading

FactCheck: வைகோ பற்றி மோகன் சி லாசரஸ் பேச்சு- பழைய வீடியோவும், உண்மையும்!

‘’வைகோ பற்றியும், அவரது மகன், மகள் பற்றியும் உண்மையை போட்டுடைத்த மோகன் சி. லாசரஸ்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த வீடியோவில், மோகன் சி லாசரஸ், ‘’வைகோவின் குடும்பத்தினர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர். அவர் தினசரி என்னிடம் பைபிள் படித்து, பிரார்த்தனை செய்வது எப்படி என ஃபோனில் கேட்பார். அரசியல் […]

Continue Reading

சிட்டி ஸ்கேன் என்று தவறாக எழுதிக் கொடுத்த டாக்டர்… தமிழக மருத்துவர்களின் தரம் பற்றி சந்தேகம் கிளப்பிய பதிவு!

சி.டி ஸ்கேன் என்பதை சிட்டி ஸ்கேன் என்று மருத்துவர் எழுதிக் கொடுத்ததாகவும், இதற்காகத்தான் நீட் தேர்வு அவசியம் என்றும் சிலர் ஒரு பிரிஸ்கிரிப்ஷனை சமூக ஊடகங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அது தமிழகத்தில் நடந்ததா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் (+91 9049053770) சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் ஃபேஸ்புக் லிங்க் ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி […]

Continue Reading

இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம் எனக் கூறி பரவும் வதந்தி…

‘’இந்து கோயில்களுக்கு மின் கட்டணம் வசூலிப்பதில் பாரபட்சம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த ஜூலை 10, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ கோயில்களுக்கு மின் கட்டணம் யூனிட்₹8/-. சர்ச், மசூதிக்கு,₹2.85. மதசார்பற்ற நாட்டிலே இந்த வேறுபடு ஏன்.??,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை […]

Continue Reading

பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று குஷ்பு கூறினாரா?

‘’பாஜக கூட்டங்களில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடுவேன் என்று கூறிய குஷ்பு,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: FB Claim Link  Archived Link இந்த தகவலை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். அதன்பேரில், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதன்பேரில் மீண்டும் தகவல் தேடியபோது, […]

Continue Reading

FACT CHECK: அதிமுக தோல்வி பெறும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக பரவும் வதந்தி!

2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க 200 தொகுதிகளுக்கு மேல் தோல்வியடைந்து ஆட்சியை இழக்கும் என்று தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் படத்துடன் கூடிய தந்தி தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “2021 தேர்தலில் அதிமுக 200 தொகுதிக்கு […]

Continue Reading

ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்தாரா கே.டி.ராகவன்?

‘’ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்த கே.டி.ராகவன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பெயரில் வெளியான ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பொன்.ராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற காஞ்சி ஜெயேந்திரரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை சாதியை காரணம் […]

Continue Reading

குஷ்பூ மற்றும் அவரது சகோதரர் பற்றி பகிரப்படும் விஷமத்தனமான வதந்தி…

‘’குஷ்பூ மீது ஊடகங்கள் முன்னிலையில் கை வைத்து தடவும் பாஜகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல்களை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link அக்டோபர் 12, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், நடிகை குஷ்பூ பாஜகவில் இணையும் நிகழ்வின்போது, அவரது தோளில் ஆண் ஒருவர் கை போட்டு நிற்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் […]

Continue Reading

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா?- தந்தி டிவி பெயரில் வதந்தி!

‘’திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி,’’ என்ற பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே நமக்கு அனுப்பி வைத்து, உண்மைத்தன்மையை ஆய்வு செய்து வெளியிடும்படி தெரிவித்தார். இதன்பேரில் இதனை வாட்ஸ்ஆப் தவிர ஃபேஸ்புக் போன்ற பிற சமூக வலைதளத்தில் வேறு யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது பலர் […]

Continue Reading

FACT CHECK: துருப்பிடித்து நிற்கும் 108 ஆம்புலன்ஸ் தமிழகத்தைச் சேர்ந்ததா?

108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்படாமல் வெறுமனே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படம் தமிழகத்தில் எடுக்கப்பட்டது போன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர். அது பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook I Archive வேறு ஒருவர் வெளியிட்ட பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்டுள்ளார்கள். அதில், பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு, துருப்பிடித்துச் சிதைந்து கொண்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் படங்கள் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில், “குப்பையாகிக்கொண்டிருக்கிறது மக்களின் வரிப்பணம்… கடும் கோபத்துடன் பகிர்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த படத்தை நாம் […]

Continue Reading

சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்ட போது எடுத்த புகைப்படம் இதுவா?

‘’சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு நடந்தபோது எடுத்த புகைப்படம்,’’ எனக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 29, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், பணம், நகைகள் நிறைந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றை இணைத்து, அதன் மேலே, ‘’ சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் நகைகள் என அப்போது கைப்பற்றியவர்களே […]

Continue Reading

ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை என்று ரஜினிகாந்த் கூறியதாக பரவும் வதந்தி

‘’ஸ்கூல் வாடகை கட்ட முடியவில்லை,’’ என்று ரஜினிகாந்த் கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த தகவலை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:கடந்த ஆகஸ்ட் மாதம், நடிகை ஜோதிகா, தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவும் வகையில், ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.  KumudamOnline […]

Continue Reading

இந்தி ஒரு மென்மையான மொழி என்று சமீபத்தில் இளையராஜா கூறினாரா?

‘’இந்தி ஒரு மென்மையான மொழி,’’ என்று இளையராஜா கூறியதாக, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link செப்டம்பர் 7, 2020 வெளியான இந்த ஃபேஸ்புக் பதிவில், இளையராஜா பெயரை குறிப்பிட்டு ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’ஒரு மொழியை கற்றுக் கொண்டால்தான், அந்த மொழியின் புலமை தெரியும். இந்தி ஒரு மென்மையான மொழி – இளையராஜா,’’ என்று எழுதியுள்ளனர். […]

Continue Reading