செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று பரவும் வதந்தியை நம்பாதீர்!

‘’செப்டம்பர் 14 முதல் தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும்,’’ எனும் தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ‘’செப்டம்பர் 14 முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும். தியேட்டர்கள் அக்டோபர் 1 முதல் திறக்கப்படும்‘’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் […]

Continue Reading

லலிதா ஜூவல்லரி நிறுவனம் கொரோனா நிவாரணம் வழங்கவில்லையா?- இதோ உண்மை!

ஆந்திரா, தெலங்கானாவுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய பிரபல ஜூவல்லரி நிறுவனம் தமிழகத்துக்கு எதுவும் தரவில்லை என தமிழர்களைத் திருந்தும்படி கூறும் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரபல ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் ரெட்டி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் கொரோனா நிவாரணம் வழங்கும் புகைப்படத்துடன் ஸ்கிரீன்ஷாட் எடுத்த பதிவை பகிர்ந்துள்ளனர்.  அதில், “லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் […]

Continue Reading

தமிழ்நாடு கல்வித்தரம் பற்றி ரமேஷ் போக்ரியால் விமர்சித்ததாக பரவும் வதந்தி!

நீட், ஜெ.இ.இ தேர்வை ரத்து செய்தால் தமிழகத்தில் உருவானது போல தரமற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகிவிடுவார்கள் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இணைய ஊடகம் ஒன்றின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மாணவர்கள் கோரிக்கைகளை ஏற்று நீட், ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்தால் தேசம் முழுவதும் தமிழ்நாட்டில் சென்ற […]

Continue Reading

பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என்று குறிப்பிடப்பட்டதா?

‘’பாஜக அறிக்கையில் 2 கிலோ அபின் என வெட்கமின்றி கூறியுள்ளனர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் பெயரில் வெளியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘’பெரம்பலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான திரு.பி. லூவாங்கோ அடைக்கலராஜ் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு […]

Continue Reading

நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதா?

‘’நவோதயா பள்ளிகளை திறக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:   Facebook Claim Link Archived Link  ஜூலை 30, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த பதிவில், ‘’மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் துவங்க நீதிமன்றம் அனுமதி, ஜெய் மோடி சர்க்கார்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக […]

Continue Reading

பாஜக தமிழக தலைவர் முருகன் தமிழர்களை காட்டுமிராண்டி எனக் கூறினாரா?

‘’பாஜக தமிழக தலைவர் முருகன் தமிழர்களை காட்டுமிராண்டி என விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஜூலை 20, 2020 அன்று பகிரப்பட்ட இந்த பதிவில், பாஜக தமிழ்நாடு ட்விட்டர் ஐடியில் இருந்து ஒரு பதிவு வெளியிடப்பட்டதாகக் கூறி அதற்கான ஸ்கிரின்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’முருகன் தமிழ்க்கடவுள் என்பதெல்லாம் திராவிடக் கூட்டம் கிளப்பி விட்ட கதை. […]

Continue Reading

சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை; அவரது கள்ள துப்பாக்கிதான் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!

‘’சுட்டது திமுக எம்எல்ஏ இல்லை, அவரது கள்ள துப்பாக்கிதான்,’’ என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இந்த நியூஸ் கார்டை நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து, சந்தேகம் எழுப்பியிருந்தனர். எனவே, இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என்ற விவரம் தேடினோம். அப்போது நிறைய பேர் இதனை பகிர்வதை கண்டோம். Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim […]

Continue Reading

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு?

‘’ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மாநில அரசுகள் வசூலிக்கும் VAT எவ்வளவு தெரியுமா,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த தகவலை வாசகர் ஒருவர், நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்து, இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார். இது கடந்த சில ஆண்டுகளாகவே, ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வரும் தகவலாகும்.  Facebook Claim […]

Continue Reading

பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியவர் ஜெ.அன்பழகன் இல்லை!

‘’பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியது ஜெ.அன்பழகன்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை பலரும் உண்மை என நம்பி, ‘’1981-82ல் பிரபாகரனை கலைஞர் சொல்லி ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்தார்,’’ என்று கூறி திமுக ஆதரவாளர்கள் பலரும் வைரலாக தகவல் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:திமுகவின் சென்னை […]

Continue Reading

மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என்று போலீசார் கூறினரா?

‘’மாஸ்க் அணியாவிட்டால் பாஜக உறுப்பினர் அட்டை தரப்படும் என போலீசார் எச்சரிக்கை,’’ என்று கூறி பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link நியூஸ் 7 டிவி வெளியிட்டதைப் போல இந்த பிரேக்கிங் நியூஸ் கார்டு உள்ளது. இதனால் பலர் உண்மை என நம்பி குழப்பமடைந்துள்ளனர். இந்த செய்தியை வேறு டெம்ப்ளேட்டில் மற்றொரு ஃபேஸ்புக் பயனாளரும் பகிர்ந்திருந்தார்.  Facebook Claim […]

Continue Reading

தமிழக அரசு மட்டன், சிக்கனுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதா?- விஷமத்தனமான வதந்தி!

‘’மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகளுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link  இந்த பதிவில், ஒரு விளம்பர அறிவிக்கை போன்ற ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அதில், ‘’மட்டன் சிக்கன் இறைச்சிகளுக்கு அரசால் விலை நிர்ணயம். மட்டன் ரூ.550 (ஒரு கிலோ), சிக்கன் ரூ.200 (ஒரு கிலோ). இன்று முதல் இறைச்சி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் […]

Continue Reading

இயக்குனர் மோகனை விமர்சித்த கவுதம் வாசுதேவ் மேனன்- போலிச் செய்தியால் சர்ச்சை

‘’இயக்குனர் மோகனை கவுதம் வாசுதேவ் மேனன் விமர்சித்தார்,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், இயக்குனர் மோகன், சமீபத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட குறும்படம் ஒன்றை பற்றி விமர்சித்ததைப் போலவும், அதற்கு கவுதம் பதில் கூறியதாகவும் ஒரு ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர்.  உண்மை அறிவோம்:இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சமீபத்தில், சிம்பு, திரிஷா நடிப்பில், […]

Continue Reading

கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு சிசிடிவி கேமிரா வாங்கியதா?

‘’கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு நெதர்லாந்தில் இருந்து சிசிடிவி கேமிரா வாங்கியுள்ளது,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், திரைப்பட காட்சி ஒன்றில் சமுத்திரக்கனியும், மோடியும் பேசிக் கொள்வது போல மீம் பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, புதிய தலைமுறை தொலைக்காட்சி பெயரில் ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டு இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா தொற்றை கண்காணிக்க […]

Continue Reading

உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன் என்று சுப வீரபாண்டியன் சொன்னாரா?

‘’உணவு கொடுத்ததால் ஜோதிமணியை ஆதரிக்கிறேன்,’’ என்று சுப. வீரபாண்டியன் சொன்னதாகக் கூறி ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்:  இதில், சுப. வீரபாண்டியன், ‘’ஜோதிமணி எனக்கு உணவு அளித்தவர் என்பதால் அவரை மரியாதைக் குறைவாக பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிறேன்,’’ என ட்வீட்டரில் பகிர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 […]

Continue Reading

திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்!

‘’பர்மா கட்சியை பார்த்து சின்னம், பெயரை திருடிய திமுக,’’ என்ற பெயரில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மற்றொரு ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த அசல் பதிவையும் கீழே இணைத்துள்ளோம்.  Facebook Claim Link  Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட […]

Continue Reading

சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா? உண்மை அறிவோம்!

‘’போட்டோஷாப் செய்து ஏமாற்றும் சீமான், பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், திருமாவளவன் – பிரபாகரன் மற்றும் சீமான் – திருமாவளவன் மற்றும் பிரபாகரன் – சீமான் ஆகியோர் சந்தித்த புகைப்படங்களை இணைத்து, ‘’உயரம் குறைவாக உள்ளதால், சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறார்; அவர் பிரபாகரனை சந்திக்கவில்லை,’’ எனக் கூறியுள்ளனர்.  உண்மை […]

Continue Reading

திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கியதாக பரவும் வீடியோ!

‘’திமுக நிர்வாகி பணியில் இருக்கும் பெண் டாக்டரை தாக்கிய வீடியோ,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். அதில் கிடைத்த விவரம் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.  தகவலின் விவரம்:  இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக, நமக்கு அனுப்பி வைத்து, உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.  இதன்பேரில், ஃபேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ பகிரப்பட்டதை கண்டோம்.  Facebook Claim Link Archived Link  உண்மை […]

Continue Reading

முன்னாள் அமைச்சர் பொன்முடி குத்தாட்டம்; வைரல் வீடியோவின் முழு உண்மை இதோ!

‘’முன்னாள் அமைச்சர் பொன்முடி குத்தாட்டம்,’’ என்ற தலைப்பில் டிரெண்டிங் ஆகியுள்ள ஒரு வீடியோவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இந்த பதிவின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும் முன்பாக, இதே வீடியோ பற்றி கடந்த 2019ம் ஆண்டில் வெளியான மற்றொரு செய்தியையும் கண்டோம். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.  FB Link Archived Link 1 Asianet News Link Archived […]

Continue Reading

இந்த புகைப்படம் எங்கே எடுக்கப்பட்டது தெரியுமா?

தமிழ்நாட்டில் மது பாட்டில் வாங்கிச் செல்லும் பெரியார் பேத்திகள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையில் தமிழகத்தில்தான் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்மணி ஒருவர் கையில் மது பாட்டிலுடன் நடந்து செல்லும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத்தகவலில் “கர்நாடகாவை அடுத்து தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி. பெரியார் பேத்திகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Sathya Bala என்பவர் 2020 […]

Continue Reading

கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு கொரோனா வைரஸ் என பரவும் வதந்தி…

‘’கர்நாடகாவில் மது வாங்கச் சென்றவர்களுக்கு 367 பேருக்கு கொரோனா தொற்று,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகம் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த கார்டில், ‘’கர்நாடக மாநிலத்தில் மது கடையில் இருக்கும் விற்பனையாளர் மூலம் அங்கு வந்து மது வாங்கி சென்ற 367 பேருக்கு கொரோனா […]

Continue Reading

தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்து எதையும் தமிழக அரசு அங்கீகரிக்கவில்லை!

‘’தணிகாசலம் பரிந்துரைத்த சித்த மருந்தை தமிழக அரசு அங்கீகரித்தது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில் சினி கஃபே என்ற இணையதளத்தில் வெளியான செய்தியின் லிங்கை பகிர்ந்துள்ளனர். இதனை மேலும் பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  Cinecafe Link  Archived Link  இந்த செய்தியின் இடையே யூடியுப் வீடியோ […]

Continue Reading

திருமுருகன் காந்தி இந்துக்களை விமர்சித்தாரா?- அவரது பேச்சை திரித்து பகிரப்படும் தகவல்!

‘’திருமுருகன் காந்தி இந்துக்களை விமர்சித்தார்,’’ என்று பகிரப்படும் தகவலை காண நேரிட்டது. அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், திருமுருகன் காந்தி பெயரில் நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், ‘’அரேபியர்கள் இன்னும் வீரத்துடன் எதிர்த்திருந்தால் ஒட்டுமொத்த இந்துக்களும் முஸ்லீமாக மாறியிருப்பார்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்:  சவூதி […]

Continue Reading

தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தாரா?

‘’தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தார்,’’ என்று கூறி பகிரப்பட் டுவரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படத்தை இணைத்து ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’தமிழகத்தின் கடன் 3.59 லட்சம் கோடியை தானே அடைத்து விடுவதாக கனடா பிரதமர் சொல்லி விட்டார்,’’ […]

Continue Reading

ரேசன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டாரா?

‘’ரேஷன் கடையில் குவார்ட்டர் கேட்ட கிஷோர் கே சுவாமி தாக்கப்பட்டார்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் இது உண்மையா என ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் கேட்க, பதிவை வெளியிட்ட நபர், ‘’அடி வாங்குனது உண்மைன்னு கேள்விப்பட்டேன்.. ஆனால், விருகம்பாக்கத்துல இல்ல.. அசோக் நகர் பக்கம்.. பிளாக் […]

Continue Reading

தமிழக மக்கள் தங்க நகைகளை தரும்படி பாஜக தலைவர் முருகன் கூறினாரா?

‘’தமிழக மக்கள் தமது தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்,’’ என்று பாஜக தலைவர் முருகன் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 தந்திடிவி பெயரில், பாஜக தமிழக தலைவர் முருகனின் புகைப்படத்துடன் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’தேசநலன் கருதி […]

Continue Reading

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட தந்தையிடம் கதறி அழும் மகள்?- அதிர்ச்சி தரும் வதந்தி

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தையிடம் கதறி அழும் மகள், என்று கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 செல்போனில் பெண் ஒருவர் வீடியோ காலில் பேசும் புகைப்படத்துடன் கூடிய செய்தி லிங்க் ஒன்று ஷேர் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் தந்தையிடம் கதறியழுதபடி மகள்… கண்ணீர் சிந்த வைக்கும் காட்சி” […]

Continue Reading

தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என்று அறிவித்ததா தமிழக அரசு?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 31ம் தேதி வரை இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்ததாக, ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 18 தமிழ் பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மார்ச் 31 முதல் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும். – தமிழக அரசு” […]

Continue Reading

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மகன் மரணத்தை இருட்டடிப்பு செய்தனவா தமிழ் ஊடகங்கள்?

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார் ஆனால் தமிழக ஊடகங்களில் செய்தி வெளியிடவில்லை என்று ஒரு பதிவு பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருகிறது. தற்போதும் வைரலாக பகிரப்படும் அந்த தகவல் சரியா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவர் ஒருவரின் படத்தோடு பதிவு வெளியாகி உள்ளது. அதில், “கண்ணீர் வணக்கம்! கப்பலோட்டிய தமிழன் அய்யா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் பெற்ற மகன் வாலேஸ்வரன் நேற்று மரணமடைந்தார்… பாழாய்ப்போன […]

Continue Reading

தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்பினாரா?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் இறந்ததாக ட்விட்டரில் வதந்தி பரப்பிவிட்டு அதை நீக்கிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Link Archived Link மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு, 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை […]

Continue Reading

இடதுசாரிகள் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட்டனரா?

‘’நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் என்பதால் உடனே தண்டிக்கப்பட்டுவிட்டனர்,’’ என்று திருமுருகன் காந்தி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’திருமுருகன் காந்தி, நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள், எனவேதான் அவர்களுக்கு உடனே தண்டனை விதிக்கப்பட்டது,’’ என்று கூறி ட்விட்டரில் பதிவு வெளியிட்டதாக, […]

Continue Reading

கொரோனா வைரஸ்: கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டதா?

‘’கொரோனா வைரஸ் வராமல் தடுக்கும் வகையில் கருணாநிதி சமாதியில் யாகம் நடத்தப்பட்டது,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில் கருணாநிதியின் சமாதியில் சில பிராமணர்கள் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைய சமாதியில் ஹோமம். பிராமணர்களை அழைத்து வந்து திமுக அசத்தல். பகுத்தறிவு ஹோமம்,’’ […]

Continue Reading

இந்து பாரம்பரியத்தை விமர்சித்து சீமான் பேசினாரா? போலி நியூஸ் கார்டு!

“இந்துக்களின் பாரம்பரியத்தில் ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகைப்படத்துடன் புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஹிந்துக்களின் பாரம்பரியத்தில் அவர்களுக்கு ஒழுக்கமோ சுயமரியாதையோ இருந்ததில்லை – சீமான், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Continue Reading

அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறதா?

‘’அப்பா, அம்மா இல்லாத மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.2000 நிதி உதவி வழங்குகிறது,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், கிராம நிர்வாக அலுவலர் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். ஆனால், அவர் எந்த கிராம நிர்வாக அலுவலர் என்று பெயர் விவரம் எதுவும் வெளியிடவில்லை. அத்துடன், ‘’நமது மாணவ மாணவியர்களின் […]

Continue Reading

பொது இடத்தில் பெண்ணை கட்டிப்பிடித்த ஆ.ராசா! – வைரல் புகைப்படம் உண்மையா?

பொது இடத்தில் பெண்மணி ஒருவரை முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான ஆ.ராசா கட்டிப்பிடித்ததாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஆ.ராசா பொது இடத்தில் பெண்மணி ஒருவரை கட்டிப் பிடிப்பது போல் படம் வெளியிட்டுள்ளனர். சுற்றிலும் போலீசார், பொது மக்கள் என்று எல்லோரும் உள்ளனர். நிலைத் தகவலில், “இது திராவிட முன்னேற்றக் கழகமா இல்லை *** முன்னேற்ற கழகமாடா? அட […]

Continue Reading

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவினரை விமர்சித்தாரா?

‘’பாஜக மட்டும் இல்லையென்றால் அதிமுகவினர் பிச்சை எடுக்கும் நிலை வரும்,’’ என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் போலியாக உருவாக்கப்பட்டதாகும். இதுதொடர்பாக, தந்தி […]

Continue Reading

மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றது இவர்களா?

‘’மார்த்தாண்டம் பகுதியில் நாய் இறைச்சி விற்றவர்கள் பிடிபட்டனர்,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் சில புகைப்படங்களை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link கடந்த 2018, ஜனவரி 14ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இன்றளவும் பலர் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்வதை காண முடிகிறது.  உண்மை அறிவோம்:மேற்கண்ட சம்பவம் போல ஏதேனும் உண்மையிலேயே மார்த்தாண்டம் பகுதியில் நிகழ்ந்ததா […]

Continue Reading

மார்வாடிகள் இல்லை என்றால் தமிழர்கள் பிச்சை எடுக்க நேரிடும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

“மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழகர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும்” என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்வாடிகள் மட்டும் இல்லையென்றால் பல தமிழர்கள் பிச்சை எடுக்கும் நிலை வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி” […]

Continue Reading

விஜயேந்திர சரஸ்வதி அசைவம் சாப்பிடுவோரை விமர்சித்தாரா? நியூஸ் 7 பெயரில் வதந்தி

‘’அசைவம் சாப்பிடுவோர் இந்துக்கள் அல்ல,’’ என்று விஜயேந்திர சரஸ்வதி விமர்சித்ததாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்கின்றனர். உண்மை அறிவோம்:விஜயேந்திரர் சமீபத்தில் எங்கேனும் இவ்வாறு சொன்னாரா என்று தகவல் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஊடகத்திலும் செய்தி வெளியாகவில்லை. விஜயேந்திரர் பற்றி கடைசியாக செய்தி […]

Continue Reading

திருப்பூரில் குழந்தை கடத்தில் ஈடுபட்ட கும்பல் கைது?- பதற்றத்தை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு

திருப்பூரில் குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டதாகவும், வட இந்தியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்டோர் குழந்தை கடத்த திருப்பூர் வந்துள்ளதாகவும் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link கைவிலங்கு போடப்பட்ட இளைஞர்கள் ஐந்து பேர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வைத்து போட்டோ கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள குழந்தை கடத்தல் கும்பலில்.. 5 பேர் திருப்பூர் பகுதியில் […]

Continue Reading

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாரா பொன் ராதாகிருஷ்ணன்?

பா.ஜ.க மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மறைந்த சங்கராச்சாரியார் முன்னிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பொன் ராதாகிருஷ்ணன் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கும் படத்தையும் சேர்த்து பகிர்ந்துள்ளனர். சங்கராச்சாரியாருடன் உள்ள படத்தில், “இந்து […]

Continue Reading

அர்ஜூன் சம்பத் மது அருந்தும் புகைப்படம் உண்மையா?

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், மது அருந்துவது போன்று புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அர்ஜூன் சம்பத் ஒரு அறையில் சிலருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய மேசை மீது மது பாட்டில்கள் உள்ளன. படுக்கையில் அமர்ந்துள்ள ஒருவர் கையில் மது கிளாஸ் உள்ளது. இந்த படத்தை Troll 420 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி […]

Continue Reading

குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாம் உறுதி: ஜெயக்குமார் பெயரில் வதந்தி

‘’குடியுரிமை நிரூபிக்க முடியவில்லை எனில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள்,’’ என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Muruganantham Ramasamy  என்பவர் Shankar A. என்பவருடன் இணைந்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி பெயரில் பிப்ரவரி 17, 2020ம் தேதியிடப்பட்ட ஒரு நியூஸ் கார்டை இதில் பகிர்ந்து, அதன் […]

Continue Reading

பாஜக இப்படியே தோற்றுக் கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆகிவிடும் என்று ரஜினி சொன்னாரா?

‘’பாஜக இப்படியே தோற்றுக்கொண்டிருந்தால் நாடே சுடுகாடு ஆயிடும்,’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதாகக் கூறும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Thirumeni Saravanan என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 12, 2020 அன்று வெளியிட்டுள்ளார். அவரது புரொஃபைல் பார்த்தபோது, ‘மூத்த பத்திரிகையாளராக பணிபுரிகிறேன்’, என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், அவர் வெளியிடும் பதிவுகள் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி […]

Continue Reading

சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை- தடை விதிப்போம் என்று அமித் ஷா கூறினாரா?

‘’சமஸ்கிருதம் தவிர மற்ற மொழிகளில் அர்ச்சனை செய்வதற்கு தடை விதிப்போம்,’’ என்று அமித் ஷா சொன்னதாகக் கூறி ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Rowthiram Pazhagu  எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில் தந்தி டிவி வெளியிட்டது போன்ற ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்து, ‘’சமஸ்கிருதம் தவிர்த்த மொழிகளில் அர்ச்சனை செய்வதை சட்டத்தின் […]

Continue Reading

தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா தேர்வு; சான்றிதழ் உண்மையா?

தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒரு சான்றிதழ் சமூகம் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஜனவரி 17 2020 அன்று தேர்தல் நடந்ததாகவும் இதில் ராஜா வெற்றி பெற்றார் என்றும் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் இந்த பதிவை வெளியிட்டவர் எச்.ராஜா உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  இந்த பதிவை Chandrasekaran Ganessin என்பவர் 2020 ஜனவரி […]

Continue Reading

பெரியார் – மணியம்மை திருமண புகைப்படம் இதுவா?

‘’பெரியார்- மணியம்மை திருமணம்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Murugesh Mudhaliyar என்பவர் ஜனவரி 22, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில் பெரியார் முன் பெண் ஒருவர் மாலை அணிந்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’பொண்டாட்டிக்கு தாலி கட்டாதே.. அது பெண் அடிமைத்தனம்னு சொல்லி, மகளுக்கு தாலி கட்டிய […]

Continue Reading

பாஜகவில் இருந்து வெளியேறுவேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தாரா?

‘’பாஜகவில் இருந்து வெளியேறுவேன் – பொன்.ராதாகிருஷ்ணன்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Manickam Palaniyapan என்பவர் இந்த ஃபேஸ்புக் பதிவை வெளியிட்டுள்ளார். இதில், தந்தி டிவி பெயரில் வெளியான நியூஸ் கார்டை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் பாஜகவிலிருந்து வெளியேறுவேன், என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொன்னதாக […]

Continue Reading

பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் என்று எச்.ராஜா விமர்சித்தாரா?

பொன்.ராதாகிருஷ்ணன் மனநலம் சரியில்லாதவர் போன்று செயல்படுகிறார் என்று எச்.ராஜா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய நியூஸ் கார்டுகளை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டில், “மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு மனநலம் சரியில்லாதவர் போன்று செயல்படுகின்றார் – ஹெச்-ராஜா விமர்சனம்” என்று […]

Continue Reading

எடப்பாடி பழனிசாமி அரசு அமைத்த தரமற்ற சாலை; வைரல் புகைப்படம் உண்மையா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்த தரமற்ற சாலை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மழை வெள்ளம் காரணமாக தார் சாலை நகர்ந்து சாலைக்கு வெளியே இருப்பது போன்ற படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், ரோடு லேசா மழைல நனஞ்சிடுத்து அதான் காயபோட்டுள்ளோம்… நன்றி எடப்பாடி அரசு” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, தமிழ்தேசிய ஆதரவாளர்கள் […]

Continue Reading

விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா?

‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link  Sakthi Vel எனும் ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை பகிர்ந்துள்ளார். இதில், சுந்தரவள்ளி புகைப்படத்தை பகிர்ந்து, புதிய தலைமுறை நியூஸ் கார்டு போல உள்ள டெம்ப்ளேட்டில், ‘’இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைத்த தோழர் சுந்தரவள்ளி சென்னையில் […]

Continue Reading